Published:Updated:

தினமும் 370 கேன்கள், மாதம் ரூ.40,000 லாபம்... வாட்டர் கேன் பிசினஸில் கலக்கும் கலையரசி!

கலையரசி
பிரீமியம் ஸ்டோரி
News
கலையரசி

நம்பிக்கை மனுஷி

நான்கு சக்கர வண்டியிலிருந்து லாகவ மாக வாட்டர் கேனை எடுத்து, இடுப்பில் வைத்துக்கொண்டு அநாயாசமாக வாடிக்கையாளர் வீட்டுப் படிகளில் ஏறுகிறார் கலையரசி. சென்னை வில்லிவாக்கம், ஐ.சி.எஃப், புரசைவாக்கம், அண்ணாநகர், பெரம்பூர், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் வாட்டர் கேன் சப்ளை செய்பவரிடம் பேசினோம்.

தினமும் 370 கேன்கள், மாதம் ரூ.40,000 லாபம்... வாட்டர் கேன் பிசினஸில் கலக்கும் கலையரசி!

‘`சொந்த ஊர் சிவகங்கை. சின்ன வயசுலேயே சென்னைக்கு வந்துட்டோம். பத்தாவதுக்குப் பிறகு, நர்ஸிங் கோர்ஸ் முடிச்சேன். உடனே கல்யாணம். வீட்டையும் குழந்தையையும் பார்த்துக்க வேண்டியிருந்ததால வேலைக்குப் போக முடியலை. அப்புறம் ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டு, சின்மயா ஸ்கூல்ல வேலை பார்த்தேன். ரெண்டாவது குழந்தை பிறந்ததும் ஆட்டோ ஓட்டவும் முடியலை. டிராவல்ஸ் பிசினஸ்ல இருந்த என் வீட்டுக்காரரோட வண்டிங்க ஐ.சி.எஃப்ல ஒரு கல்யாண மண்டப வாசல்ல நிக்கும். அந்த வண்டிகளைக் கழுவி, துடைக்கிறதுக்காக, தினமும் அங்கே போவேன். அந்த மண்டபத்துக்கு வாட்டர் கேன் போடுற நபரின் அறிமுகம் கிடைச்சது. அவர் அந்த பிசினஸை கைமாத்திவிட யோசிச்சுட்டு இருந்த நேரம் அது. நான், அவர்கூடவே இருந்து, வாட்டர் கேன் ஆர்டர் எடுக்கிறது, டெலிவரி பண்றதுன்னு எல்லாத்தையும் ஒரு மாசத்துல கத்துக்கிட்டேன். அப்புறமா, அந்த வாட்டர் கேன் கம்பெனிக்குப்போய் நான் ஏஜென்சி எடுக்க விரும்பறதா சொன்னேன். ‘உனக்கு என்ன அனுபவம் இருக்கு’ன்னு கேட்டவங்களுக்கு, ஒரு மாசமா நான் நேரடியா ஃபீல்டுக்குப் போன விஷயத்தைச் சொன்னேன். உடனே ஓகே சொன்னாங்க. ஆட்டோ ஓட்டி சம்பாதிச்ச பணத்தைச் சேர்த்து வெச்சிருந்தேன். மிச்சத்துக்கு லோன் போட்டேன். என் பேரைச் சுருக்கி `அரசி ஏஜென்சி' ஆரம்பிச்சேன்’’ - பிசினஸ்வுமன் ஆன கதை பகிரும் கலையரசிக்கு அவரின் அம்மாதான் இன்ஸ்பிரேஷனாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
தினமும் 370 கேன்கள், மாதம் ரூ.40,000 லாபம்... வாட்டர் கேன் பிசினஸில் கலக்கும் கலையரசி!

‘`எங்கம்மா பால் வியாபாரம் செஞ்சவங்க. அவங்களைப் பார்த்துதான், நம்மளைச் சுத்தி எத்தனை உறவிருந்தாலும் பொம்பளைங்க சொந்தக்கால்ல நிக்கணும்னு தெரிஞ்சுக் கிட்டேன்’’ என்கிறார். ஒன்பது வருடங்களாக இந்த பிசினஸில் இருப்பவர், நான்கு சக்கர வாகனம் ஓட்டப் பழகியதன் பின்னணியிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.

‘`பேங்க் லோன் போட்டு வாங்கின புது வண்டியை என் வீட்டுக்காரர்தான் வீட்டுக்கு ஓட்டிக்கிட்டு வந்தார். அன்னிக்கு எங்க ரெண்டு பேருக்கு நடுவுல சின்ன மனஸ்தாபம். கோபத்துல வண்டியைப் பாதுகாப்பான இடத்துல விட மாட்டேன்னுட்டார். மழை பெய்ச்சுக்கிட்டிருந்துச்சு... புது வண்டியாச்சே... மனசு தாங்கலை. நானே போய் வண்டியை எடுத்து பாதுகாப்பான இடத்துல விட்டேன். அதுக்கப்புறம்தான் என் தொழில், என் வண்டி, அதை நான்தான் ஓட்டணும்கிற முடிவுக்கு வந்தேன்.

தினமும் 370 கேன்கள், மாதம் ரூ.40,000 லாபம்... வாட்டர் கேன் பிசினஸில் கலக்கும் கலையரசி!

இந்த பிசினஸுக்கு மூணு லட்ச ரூபாய் முதலீடு போட்டேன். இப்போ டிரைவர் ஒருத்தர், தண்ணி கேன் ஏத்தி இறக்குற ரெண்டு பேர்னு மொத்தம் மூணு பேர் வேலை பார்க்கிறாங்க. வாட்டர் கேன்கள் வெக்கிறதுக்கான இடம் அப்பாவுக்குச் சொந்தமானது. அந்த இடத்துக்கான கரன்ட் பில் மட்டும்தான் நான் கட்டறேன். அப்புறம் வண்டிக்கான தவணை மாசத்துக்குக் கிட்டத்தட்ட 20,000 வரும். ரெண்டு வண்டியில ஒரு வண்டியை நானே ஓட்டுறதாலே டிரைவர் சம்பளம் மிச்சமாகுது. கூட்டிக்கழிச்சுப் பார்த்தா ஒரு மாசத்துக்கு 40,000 ரூபாய் வரை லாபம் கிடைக்குது'' என்று சொல்லும் கலையரசி, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 370 வாட்டர் கேன்கள்வரை சப்ளை செய்கிறார்.