Published:Updated:

சினிமாவிலிருந்து பிசினஸுக்கு... ஷிப்பிங் துறையில் தெறிக்கவிடும் தம்பதி

கிஷோர் – இன்பா
பிரீமியம் ஸ்டோரி
கிஷோர் – இன்பா

ஷிப்பிங் தொழில் அனுபவத்தைக் கொண்டு, தனி நிறுவனத்தின் மூலம் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகமும் செய்யுறோம்.

சினிமாவிலிருந்து பிசினஸுக்கு... ஷிப்பிங் துறையில் தெறிக்கவிடும் தம்பதி

ஷிப்பிங் தொழில் அனுபவத்தைக் கொண்டு, தனி நிறுவனத்தின் மூலம் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகமும் செய்யுறோம்.

Published:Updated:
கிஷோர் – இன்பா
பிரீமியம் ஸ்டோரி
கிஷோர் – இன்பா
உலகம் முழுவதும் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகளில், தங்களுக்குச் சரியானதைத் தேர்ந்தெடுத்து உழைத்தவர்கள் வெற்றியாளர்களாக உயர்ந்துள்ளனர். அவர்களில், நம்பிக்கை முகங்களான கிஷோர் – இன்பா தம்பதி, ஷிப்பிங் மற்றும் கிளியரிங் ஏஜென்சி துறையில் முன்னணி தொழில்முனைவோர். அந்நியச் செலாவணியின் மூலம் ஒவ்வொரு நாட்டின் வருவாயிலும் முக்கியப் பங்கு வகிக்கும் ஏற்றுமதி - இறக்குமதி தொழில்கள் சிக்கலின்றி நடப்பதற்கு இந்தத் துறையினரே உறுதுணையாக இருக்கின்றனர்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னையிலுள்ள இவர்களின் ‘ஸீல் ஷிப்பிங் அண்டு கிளியரிங் ஏஜென்சி’ நிறுவனத்தின் மூலம் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கும் வர்த்தகம் நடக்கிறது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக கணவருக்குப் பக்கபலமாக இருக்கும் இன்பா, மேலும் சில தொழில்களிலும் கவனம் செலுத்துகிறார். அவர்களுடன் நடந்த உரையாடல்...

‘‘ரெண்டு பேருமே கொங்கு மண்டலத்தில் பூர்வீக விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த வங்க. சினிமா துறை மீதான ஆர்வத்துல கணவர் சென்னை வந்தார். நெப்போலியன் நடிச்ச ‘தாமரை’ங்கிற படத்தை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தயாரிச்சார். பிறகு, தன் அம்மாவின் வேண்டுகோளுக்காக சினிமாவிலிருந்து விலகிட்டார். எங்களுக்குக் கல்யாணமானபோது, பெருசா வருமான வாய்ப்புகள் இன்றி சிரமத்தில்தான் இருந்தோம். நண்பரின் சிபாரிசில் ஷிப்பிங் கம்பெனியில் இவர் வேலைக்குச் சேர்ந்தார். ரெண்டு வருஷத்துல நிறைய அனுபவங்கள் கத்துகிட்டு, தனி ஷிப்பிங் நிறுவனத்தைத் தொடங்கினார்.

கிஷோர் – இன்பா
கிஷோர் – இன்பா

பிரபல மருத்துவமனையில் தொழில் நுட்ப அலுவலரா இருந்த நானும், கணவரின் தொழில்ல இணைஞ்சேன். 60,000 ரூபாய் முதலீட்டுல, 300 சதுர அடியில் சின்ன வாடகை கட்டடத்துல புது நிறுவனத்தைத் தொடங்கி னோம். அப்போ சுங்கத்துறை அதிகாரிகள், இந்தத் துறையிலுள்ள தொழிலதிபர்களைச் சந்திப்பதுகூட பெரிய சவாலா இருந்துச்சு. ஏற்றுமதி - இறக்குமதியாளர்களுடான நட்பை பலப்படுத்தினதோடு, இந்தத் துறைக்கான தொழில்நுணுக்கங்களைக் கற்று, துறை சார்ந்த படிப்புகளையும் முடிச்சோம். தொடக்கத்துல முந்திரிப் பருப்பு, பைப், கேமரா உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதிக்கான ஷிப்பிங் வேலைகளைச் செய்தோம். படிப்படியா வளர்ச்சியடைஞ்சு, உலகம் முழுக்க வர்த்தகத்தை விரிவு படுத்தினோம்” என்கிற இன்பா, கணவரைப் பார்க்க...

“ஒரு நாட்டினர் விற்பனை செய்யவும், அதை இன்னொரு நாட்டினர் வாங்கவும் அனுமதியுள்ள எல்லாவிதமான பொருள் களையும் ஏற்றுமதி - இறக்குமதி செய்யலாம். அதற்கு, ரெண்டு நாடு களிலும் உள்ள அந்தப் பொருள் சார்ந்த துறையினர் மற்றும் சுங்கத்துறையினரின் அனுமதி வாங்கணும். இதற்கான வழிமுறைகள் சவாலானவை என்பதால, அந்தச் செயல்பாடுகளுக்கான எல்லா உரிமங்களையும் வாங்கிக் கொடுப்போம். மேலும், அந்தப் பொருளை உரியவங்ககிட்ட வாங்கி, மற்றொருவருக்குக் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பும் எங்களுடையதுதான். மற்ற படி அந்த ரெண்டு நாட்டு நிறுவனங்களுக்குமான வர்த்தக விஷயங்கள்ல நாங்க தலையிட மாட்டோம். இந்த வகையில், உணவுப் பொருள்கள் முதல் மத்திய அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்துக்கு ராணுவ தளவாட மூலப்பொருள்களைக் கொண்டு சேர்க்கும் முக்கியமான வேலைகள் வரை ஏராளமான துறை களுக்கு ஷிப்பிங் வேலைகளைச் செய்து கொடுக்கிறோம். வின்டேஜ் கார்களுக்கான இறக்குமதி உட்பட சுவாரஸ்யமான பல வர்த்தகங் களுக்கும் உதவறோம்.

ஷிப்பிங் தொழில் அனுபவத்தைக் கொண்டு, தனி நிறுவனத்தின் மூலம் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகமும் செய்யுறோம். இந்தோனேஷியாவில் இயங்கும் ஒரு நிறுவனம் மூலமா தேக்கு மரத்திலான மரச்சிற்பங்கள், மரச்சாமான்களை ஆர்டரின் பேரில் தயாரிச்சு விற்பனை செய்யுறோம். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் தயாரிச்சு, சில நாடுகளுக்கு ஏற்றுமதி பண்றோம். இறால் குஞ்சுகளை இடமாற்றம் செய்ய உதவும் பாலித்தீன் கவர்களைப் பல நாடுகளுக்கும் விற்பனை செய்யுறோம். வாகனங்களுக்கான டயர்களை இந்தியாவில் வாங்கி, சில நாடுகளுக்கு ஏற்றுமதி பண்றோம். மொரீஷியஸ் நாட்டுல உள்ள இந்து கோயில்களுக்கு, தெய்வ வழிபாடுகளுக்கான பல்வேறு பொருள்களையும் இந்தியாவிலிருந்து வாங்கி விற்பனை செய்யுறோம். நாலு வருஷங்களா சிறப்பா நடக்கும் இந்தத் தனி நிறுவனத்தை என் மனைவிதான் பார்த்துக்கிறாங்க. இன்பாவை கரம் பிடிச்ச நாளிலிருந்து வாழ்க்கையில் ஏற்றம்தான்”

- கிஷோரின் முகத்தில் புன்னகை மலர, இன்பாவின் முகத்தில் வெட்கம் படர்கிறது!

“மலேசியாவில் இயங்குற பிரபல நிறுவனத்திடமிருந்து, சோயா மற்றும் காளானில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களை இறக்குமதி செஞ்சு சென்னையில் விற்பனை செய்யுறோம். தோழியுடன் இணைஞ்சு இதற்கான தனி நிறுவனத்தைத் நடத்துறேன். இறைச்சித் துண்டுகள் மாதிரி இருக்கும் இந்த உணவில் தாவரப் புரதச்சத்து அதிகமிருக்கு. மாசத்துக்கு 1,000 கிலோவுக்கும் அதிகமா இந்த உணவு விற்பனையாகுது” என்று புன்னகையுடன் கூறுகிறார் இன்பா.

கடந்த 20 ஆண்டுகளில் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கும் ஷிப்பிங் வேலைகளைச் செய்திருக்கிறார்கள். பிஸ்கட், உலர் பழங்கள், குங்குமப்பூ உட்பட 100-க்கும் அதிகமான பொருள்களுக்கான ஷிப்பிங் பணிகள் தற்போது நடக்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடக்கிறது. இந்தத் தொழிலில் சர்வதேச அளவில் சிறந்த நிறுவனங்களுக்கான ‘ஆதரைஸ்டு எகனாமிக் ஆப ரேட்டர்’ சான்றிதழையும் பெற் றுள்ளனர். தவிர, சோயா உணவு நிறுவனத்திலும், ஏற்றுமதி-இறக்கு மதிக்கான நிறுவனத்திலும் ஆண்டுக்குத் தலா ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. 50 பேருக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கின்றனர்.

“போதைப் பொருள்கள், பாது காக்கப்பட்ட உயிரினங்கள், கதிரியக்கப் பொருள்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட சில பொருள்களை ஏற்றுமதி - இறக்குமதி செய்ய முடியாது. நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காம, சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டுதான் ஏற்றுமதி - இறக்குமதி தொழில்களைச் செய்யணும். இந்த விஷயங்கள்ல, வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு வழிகாட்டுறதும் எங்க வேலைதான். ஏமாற்றங்கள், தோல்விகளை எல்லாம் சமாளிச்சு வெற்றிகரமா தொழில் செய்யறது பெரிய சவால்தான். சில வருஷங்கள் சிரமம் பார்க்காம உழைச்சா, இந்தத் துறையில பெரிய அளவில் வெற்றி பெறலாம்”

- கூட்டாகக் கூறும் தம்பதியின் முகத்தில் பெருமிதச் சிரிப்பு!