Published:Updated:

நம்பிக்கை நாயகி - மாத்தி யோசிக்க வைத்த கொரோனா...

கிருஷ்ண பிரபாவதி
பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ண பிரபாவதி

மாஸ்(க்) காட்டும் கிருஷ்ண பிரபாவதி!

நம்பிக்கை நாயகி - மாத்தி யோசிக்க வைத்த கொரோனா...

மாஸ்(க்) காட்டும் கிருஷ்ண பிரபாவதி!

Published:Updated:
கிருஷ்ண பிரபாவதி
பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ண பிரபாவதி
இக்கட்டான சூழல்களே புதிய முயற்சிகளுக்கு நம்மை இழுத்துச் செல்லும். ஆனால், கம்ஃபர்ட்டபிள் ஸோனில் இருந்த பலரையும் புதிய பரிமாணத்துக்கு மாற்றியிருக்கிறது கொரோனா லாக்டௌன். இந்தக் கட்டுரை யின் நாயகி கிருஷ்ண பிரபாவதியும் இந்த வகையைச் சேர்ந்தவர்தான்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அழகிய பெண் குழந்தை, அன்றாட வருமானத்தில் கார் ஓட்டுநராகப் பணியாற்றும் கணவன், நேரம் கிடைக்கும்போது அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கு சுடிதார், பிளவுஸ் தைத்துக்கொடுப்பது. கடைகளுக்குத் துணிப்பை தைத்துக்கொடுப்பது என இவரது சிறிய உலகம் இயல்பாகவே சுழன்றுகொண்டிருந்தது. கொரோனா லாக்டௌன் ஏற்பட்டு அனைவரும் வீட்டுக்குள் முடங்கியதும் கணவருக்கு ஓட்டுநர் வேலையில் தடை ஏற்பட்டது. அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து கிடைக்கும் தையல் ஆர்டர்கள் முழுவதுமாக நின்று போயின. இயல்பாகச் சுழன்றுகொண்டிருந்த பிரபாவதியின் உலகம் இருளில் மூழ்கியது.

“லாக்டௌன் தொடங்கியதும் அன்றாடம் பால், சமையலுக்குப் பொருள்கள் வாங்குவதற்குக்கூட சிரமப்பட்டுப் போனோம். இதே நிலை நீடித்தால் என்ன செய்வது என்று யோசித்தபோது என் கணவருக்குத் தோன்றியதுதான் இந்த ஐடியா.  மாஸ்க் அணிவதன் அவசியம் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இனி மாஸ்க் என்பது உடையைப் போன்று ஓர் அங்கமாக மாறிவிடும் என்பதைப் புரிந்துகொண்டோம். மாஸ்க் தைத்து விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

நம்பிக்கை நாயகி - மாத்தி யோசிக்க வைத்த கொரோனா...

பைகள் தைப்பதற்காக வைத்திருந்த துணிகளில் 50 மாஸ்க்குகள் தைத்து எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் கடைகளுக்குச் சென்றேன். வித்தியாசமான என்னுடைய மாஸ்க்குகளைப் பார்த்ததும் கடைக்காரர்களுக்குப் பிடித்துப்போனது. அன்றைய தினமே 200 மாஸ்க்குகளுக்கான ஆர்டர்  கிடைத்தது. ஆனால், தைத்துக்கொடுப்பதற்கான துணிகளை வாங்குவதற்கே கையில் பணமில்லை. நண்பர்களிடம் கடன் வாங்கிதான் தேவையான பொருள்களை வாங்கினோம். வழக்கமான வகைகளைவிட சற்று வித்தியாசமான மாடல்களையும் தைக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம். V வடிவ மாஸ்க், கண்களையும் பிளாஸ்டிக் ஷீட்டால் மூடும் மாஸ்க், கழுத்துப் பகுதியையும் மறைக்கும் மாஸ்க் என ஆறு வகையான மாஸ்க் தயாரித்தோம்” என்பவர் அவற்றின் தரம், பயன்பாடு ஆகியவற்றைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டே விற்பனை செய்திருக்கிறார்.

“ஒரு மாஸ்க் 8 ரூபாயிலிருந்து 30 ரூபாய்வரை விலை வைத்து விற்பனை செய்கிறோம். மாஸ்க்கின் தரம் நன்றாக இருந்ததால் ஒரு மருத்துவமனையிலேயே 3,000 மாஸ்க் ஆர்டர் கிடைத்தது. குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதால் வீட்டின் அருகில் தையல் மெஷின் வைத்திருக்கும் ஒரு பெண்ணிடமும் தைத்துக்கொடுக்கச் சொன்னேன்.

கிருஷ்ண பிரபாவதி
கிருஷ்ண பிரபாவதி

துணிகளை வாங்கி வந்ததும் துவைத்துக் காயவைத்த பிறகே மாஸ்க் தைக்கிறேன். தைத்து முடித்த பிறகு ஒவ்வொரு மாஸ்க்கையும் நன்றாக அயர்ன் செய்து தனித்தனி கவர்களில் பேக் செய்து கொடுப்பதால் மாஸ்க்கில் கிருமி தொற்றாது. மாஸ்க் தைப்பது முதல் அதை பிளாஸ்டிக் கவரில் பேக் செய்வது வரை அனைத்துப் பணிகளையும் கையில் கையுறை அணிந்தே செய்கிறேன்” - பொறுப்புடன் பேசுகிறார்.

நம்பிக்கை நாயகி - மாத்தி யோசிக்க வைத்த கொரோனா...

மூலப்பொருள் வாங்குவதற்கே பணமில்லாமல் தவித்தவர் மாஸ்க் தயாரித்ததன் மூலம் இதுவரை ரூ.60,000 வருவாய் ஈட்டியிருக்கிறார். “கொஞ்சம் மாற்றி யோசித்தால் நம்மிடம் இருக்கும் திறனை வைத்தே வாழ்க்கையை நடத்துவதற்கான பணத்தை ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறது கொரோனா லாக்டௌன். நாளையே மாஸ்க் டிரெண்ட் மாறினாலும் கவலைப்பட மாட்டோம். புதிய வழியை யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்” நம்பிக்கை ததும்புகிறது பேச்சில்.