Published:Updated:

`குறும்பர் ஓவியத்தை பாதுகாத்து எங்க வாழ்வாதாரமாக்கணும்!’ - பழங்குடி பெண்களின் முயற்சி; உதவுமா அரசு?

குறும்பர் ஓவியங்கள்

குறும்பர் ஓவியங்களை பாதுகாப்பதோடு இந்த ஓவியத்தைக் கொண்டு இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புது முன்னெடுப்பாக நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கிறார்கள் புதுக்காடு பழங்குடி பெண்கள்.

`குறும்பர் ஓவியத்தை பாதுகாத்து எங்க வாழ்வாதாரமாக்கணும்!’ - பழங்குடி பெண்களின் முயற்சி; உதவுமா அரசு?

குறும்பர் ஓவியங்களை பாதுகாப்பதோடு இந்த ஓவியத்தைக் கொண்டு இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புது முன்னெடுப்பாக நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கிறார்கள் புதுக்காடு பழங்குடி பெண்கள்.

Published:Updated:
குறும்பர் ஓவியங்கள்

மலை மாவட்டமான நீலகிரியில் பணியர், இருளர், குறும்பர் உள்ளிட்ட 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடி இனத்தினரும் குறிப்பிட்ட ஒரு கலையில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். குறும்பர் பழங்குடிகளைப் பொறுத்தவரை ஓவியம் வரைவதில் சிறந்து விளங்கி வருகின்றனர். இருப்பினும், குறும்பர் பழங்குடிகளின் வாழ்வியலை எடுத்துரைக்கும் பாரம்பர்ய ஓவியக்கலை அழிவின் விளிம்பில் இருப்பதாக மானுடவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

குறும்பர் ஓவியங்கள்
குறும்பர் ஓவியங்கள்

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குறும்பர்களின் ஓவியக்கலையை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அரசு மற்றும் சில தனியார் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குறும்பர் ஓவியங்களைப் பாதுகாப்பதோடு இந்த ஓவியத்தைக் கொண்டு இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புது முன்னெடுப்பாக நம்பிக்கையில் களமிறங்கியிக்கிறார்கள் புதுக்காடு பழங்குடி பெண்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் துணிப்பை, கைப்பை போன்றவற்றில் வண்ணங்களைக் கொண்டு பாரம்பர்ய ஓவியங்களை வரைந்து விற்பனை செய்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த முன்னெடுப்புக்கு உதவி வரும் தன்னார்வலர் குன்னூரைச் சேர்ந்த உஷா, ``நான் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன்‌. பழங்குடி பெண்களுக்கு கைத்தொழில் களைக் கற்றுக்கொடுத்து நம்மால் முடிந்த உதவியை செய்து வருகிறேன். குறும்பர்களின் ஓவியங்கள் குறித்து எனக்குத் தெரிய வந்தது. ஆனால், இந்த தலைமுறையினருக்கு இதன் முக்கியத்துவம் குறித்து இன்னும் போய்ச் சேரவில்லை.

குறும்பர் ஓவியங்கள்
குறும்பர் ஓவியங்கள்

ஓவியம் குறித்து நன்கு அறிந்த பழங்குடிகள் மற்றும் முன்னர் வரையப்பட்ட பாரம்பர்ய ஓவியங்களை வைத்து புதுக்காடு பழங்குடி பெண்களுக்கு சில நாள்கள் பயிற்சி அளித்தோம். தற்போது நல்ல முறையில் ஓவியங்களை வரைந்து வருகின்றனர். இவர்களின் மரபில் இந்த ஓவியக்கலை கலந்திருக்கிறது. அதை முழுமையாக வெளிக்கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். இவர்களது ஓவியக்கலை பொது மக்களிடமும் போய் சேர வேண்டும். ஓவியத்துக்கு ஏற்ப துணிப் பைகளை 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறோம். இவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்தால் பல குடும்பங்கள் வாழும். அதோடு பல்லாயிரம் ஆண்டு பாரம்பர்யம் கொண்ட குறும்பர்களின் ஓவியங்களையும் பாதுகாக்க முடியும்" என்றார் நம்பிக்கையுடன்.

இந்த புது முயற்சி குறித்து நம்மிடம் பேசிய புதுக்காடு பழங்குடி பெண்கள், ``வேட்டை, தேன் சேகரிப்பு, விவசாயம், வழிபாடு, சடங்கு, பாண்டம், ஆயுதம், கூரை (குடியிப்பு), ஆட்டம் பாட்டம் எல்லாமே எங்க ஓவியத்துல இருக்கு. காட்டுல இருக்கும் பாறை குகையில இந்த ஓவியங்கள் இன்னும் அப்படியே இருக்கு. காட்டுல கிடைக்கிற குறிப்பிட்ட இலை, பூ, கொடி, தண்டு போன்றதை சேகரிச்சு அதுல இருந்து வண்ணம் குழைச்சு அந்தக் காலத்துல ஓவியம் வரைஞ்சிருக்காங்க. காலப்போக்குல கொஞ்சம் கொஞ்சமா எங்க கலை மறைஞ்சு போயிருக்கு. எங்களுக்கே இப்போதான் இதோட மதிப்பு தெரியுது.

குறும்பர் ஓவியங்கள்
குறும்பர் ஓவியங்கள்

மக்களும் இதுக்கு அங்கீகாரம் குடுப்பாங்க என்கிற நம்பிக்கை இருக்கு. ஆனா, நாங்க உட்கார்ந்து வேலை செய்ய நல்ல இடம் கிடையாது. பக்கத்துல ஒருத்தரோட வீட்டை தற்காலிகமா யூஸ் பண்றோம். அரசாங்கத்துல சின்ன ரூம் மாதிரி கட்டிக் குடுத்தா வசதியா இருக்கும். அதே மாதிரி இப்போதைக்கு ஆர்டர் கம்மியா தான் இருக்கு‌. இன்னும் கொஞ்சம் ஆர்டர் கிடைச்சாலும் நல்லது" என்றனர் எதிர்பார்ப்புடன்.