Published:Updated:

“அப்போ கிராமம் தாண்டலை... இப்போ வெளிநாடுகள்லயும் வியாபாரம்!”

‘விளக்குக்கடை’ ராஜலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
‘விளக்குக்கடை’ ராஜலட்சுமி

- ‘விளக்குக்கடை’ ராஜலட்சுமியின் வியப்பூட்டும் வெற்றி

“அப்போ கிராமம் தாண்டலை... இப்போ வெளிநாடுகள்லயும் வியாபாரம்!”

- ‘விளக்குக்கடை’ ராஜலட்சுமியின் வியப்பூட்டும் வெற்றி

Published:Updated:
‘விளக்குக்கடை’ ராஜலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
‘விளக்குக்கடை’ ராஜலட்சுமி

“கோயிலுக்குள் நுழைஞ்ச உணர்வை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத் துல இந்தக் கடையை வடிவமைச்சோம். இங்க வர்றவங்க பாசிட்டிவ்வா ஃபீல் பண்ணணும். எதுவும் வாங்காட்டியும்கூட பரவாயில்லை. சும்மா சுத்திப் பார்த்துட்டுட்டுப்போக கடைக்கு வந்தாலும் சந்தோஷம்தான்...” முகம் மலர வரவேற்றுப் பேசுகிறார், சென்னை, போரூரிலுள்ள ‘விளக்குக்கடை’யின் உரிமை யாளரான ராஜலட்சுமி.

கடையை ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து, சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். `கர்ப்ப கிரஹம்' எனும் பகுதியில், உற்சவர் சிலைகள் உட்பட பலவிதமான பஞ்சலோக சிலைகள்; `மாடவீதி' எனும் பகுதியில் கடவுள் சிலைகள் மற்றும் பூஜைப் பொருள்கள்; `நவகிரக சந்நிதி' எனும் பகுதியில் குத்து விளக்குகள்; `மடப்பள்ளி' எனும் பகுதியில் சமையல் பாத்திரங்கள் என இந்த விற்பனைக் கூடம் கவனம் ஈர்க்கிறது. கிராமத்துச் சூழலில் வெளியுலகம் தெரியாமல் வளர்ந்த ராஜ லட்சுமி, திருமணத்துக்கு முன் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பிறகு, சுய ஆர்வத்தால் விளக்குகள் மற்றும் மெட்டல் சிலைகள் விற்பனைத் தொழிலில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் இவரின் தொழில்முனை வோர் அடையாளம் வியப்பூட்டுகிறது.

“தூத்துக்குடி மாவட்டத்துல இருக்கிற வேப்பலோடை கிராமம்தான் என் பூர்வீகம். எட்டாவதோட என் படிப்பை நிறுத்திட்டாங்க. அப்பாவின் பலசரக்கு வியாபாரத்துக்கு உதவியா இருந்தேன். தாய்மாமாவின் மக னோட 17 வயசுலேயே எனக்குக் கல்யாணம். என் வீட்டுக்காரர் ஐ.டி இன்ஜினீயர். அவரின் வேலைக்காக, சென்னையிலயும், சில காலம் அமெரிக்காவுலயும் வசிச்சோம். வெளியுலக அனுபவத்தையெல்லாம் கத்துக்கொடுத்த கணவர், என் ஏக்கத்தைப் புரிஞ்சுகிட்டு இங் கிலீஷ் கத்துக்க உதவி, பி.பி.ஏ படிக்க வெச்சார்.

2008-ல அமெரிக்காவுல ஐ.டி துறையில ஏற்பட்ட சரிவால என் கணவருக்கு வேலை போயிடுச்சு. சென்னையில வேற வேலைக்குப் போனார். மூணு பிள்ளைகளின் படிப்பு, குடும்ப நிர்வாகம்னு பொருளாதாரச் சிக்க லால நானும் வேலைக்குப் போனேன். டான்ஸ்ல ஆர்வம்கொண்ட என் ரெண்டு மகள்களைப் பயிற்சியாளர்களா வெச்சு டான்ஸ் அகாடமி ஒண்ணு ஆரம்பிச்சோம். அதுல பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்குப் பரிசு கொடுக்குறதுக்கான தேடல்ல, ஆன் லைன் விற்பனையிலேருந்து ஆரம்பிச்சு படிப் படியா இந்தத் தொழிலை விரிவுபடுத்தினேன்” என்பவர், 2016-ல் இந்த விற்பனைக்கூடத்தைத் தொடங்கியிருக்கிறார்.

“அப்போ கிராமம் தாண்டலை... 
இப்போ வெளிநாடுகள்லயும் வியாபாரம்!”

“வெறும் சிலைகள், விளக்குகள்தானேனு தான் ஆரம்பத்துல நானும் நினைச்சேன். ஆனா, இது ரொம்பவே ஆச்சர்யமான துறைனு அப்புறமாதான் தெரிஞ்சது. கும்ப கோணம், சுவாமிமலை, நாச்சியார்கோயில், மகாபலிபுரம்னு சிலைகள், விளக்குகள் தயா ரிப்புக்காகவே புகழ்பெற்ற பகுதிகளுக்குப் போய் கடைகடையா ஏறியிறங்கி ஆர்டர்கள் எடுத்தேன். கோயில்ல வழிபடுற உணர்வு கிடைக்கவும், அபிஷேகம் போன்ற வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கவும் உலோக சிலைகள் வெச்சு வழிபட பலரும் விருப்பப் படுவாங்க. தவிர, காமாட்சி விளக்கு, பாவை விளக்கு, நவகிரக விளக்கு, மூலவர் விளக்கு, ஏழு முக விளக்கு, பிரதோஷ விளக்குனு பல விதமான விளக்குகளை, ஒவ்வொரு தெய்வத் துக்கும், சிறப்பு தினங்களுக்கும் ஏற்ப பயன் படுத்துறவங்களும் உண்டு. கிளை விளக்கு, மங்கள விளக்கு, நிறை விளக்கு போன்று பெரிய உருவத்தினாலான விளக்குகளை வீட்டுல அலங்காரத்துக்காகவும் பலரும் வைப் பாங்க. இதுக்காக அதிகபட்சமா ஆறரை அடி உயரத்திலான குத்துவிளக்குகளையும் விற்பனை செய்யுறோம். வெளியூர், வெளி நாட்டினர் ஆன்லைன்லயே தேவையானதை வாங்குறாங்க” என்று தொழில் வளர்ச்சியை புன்னகையுடன் விவரிப்பவர், ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வர்த்தகம் செய்வதுடன், பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கிறார்.

“மெஷின் தயாரிப்புகள் அதிகமாகிட்டாலும், கைவேலைப்பாடுகளால செய்யப்படுற விளக்குகளுக்கும் சிலைகளுக்கும் தனி வரவேற்பு இருக்கு. அதனால, பூஜைப் பயன் பாடுகள் தவிர, ரிட்டர்ன் கிஃப்ட் மற்றும் பரிசுகள் கொடுக்கவும், வீட்டு அலங்காரத்துக் காகவும் இதுபோன்ற பொருள்களை மக்கள் வாங்குறாங்க. சம்பாத்தியத்தை இந்தத் தொழில்லயே முதலீடு செய்யுறேன். கல் யாணம் முடிஞ்சப்போ கிராமம் தாண்ட பயந்த நான், கணவர் உட்பட குடும்பத்தினரின் ஊக்கத்தால, இன்னிக்கு எல்லைகள் தாண்டி சாதிக்கிறேன்...” பெருமிதத்துடன் கூறும் ராஜ லட்சுமியின் முகம் விளக்காகப் பிரகாசிக்கிறது.

“அப்போ கிராமம் தாண்டலை... 
இப்போ வெளிநாடுகள்லயும் வியாபாரம்!”

பராமரிப்பு ரொம்பவே சுலபம்தான்!

“உலோகச் சிலைகள் மற்றும் விளக்குகளைப் பராமரிக்கிறது சிரமம்னு பலரும் நினைக்கிறாங்க. ஆனா, சிகைக்காய்த்தூளுடன் எலுமிச்சைப்பழச் சாறு கலந்து, அதை டூத் பிரஷ் அல்லது தேங்காய் நார் அல்லது எலுமிச்சைத்தோல் கொண்டு சுத்தம் செஞ்சாலே எண்ணெய்ப் பிசுபிசுப்பு, அழுக்குகள் நீங்கிடும்...” ஆலோசனை சொல்கிறார் ராஜலட்சுமி.