Published:Updated:

`எப்படியாவது என் மகனை வளர்த்துடணும்!’ - பைக்கில் டீ வியாபாரம்; மதுரை நம்பிக்கைப் பெண்

கொரோனா பயத்தால இப்போதைக்கு வீட்டு வேலைக்கு வர வேணாம்னு சொல்லிட்டாங்க. வேற வழி தெரியல, அப்பாவோட டீ வியாபாரத்த கையில் எடுத்து தெருத்தெருவா டீ விக்கிறேன்.

கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து லட்சக்கணக்கானோர் கடும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒருபுறம் கொரோனா மறுபுறம் வறுமை என அவர்கள் தினசரி வயிற்றுப்பிழைப்புக்கே போராடும் நிலைக்கு வந்துவிட்டார்கள் சாமான்ய மக்கள். இதனால், பலரும் வேலை கிடைத்தால்போதும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டு சொற்ப ஊதியத்துக்காகப் பணியாற்றி வரும்நிலைதான் இருக்கிறது.

டீ வியாபாரத்தில் உமாசல்மா
டீ வியாபாரத்தில் உமாசல்மா

இந்தச் சூழலில் ஊரடங்கிலும் தனது குடும்பத்தின் வறுமையைப் போக்கப் போராடி வருகிறார் மதுரையைச் சேர்ந்த 26 வயதுப் பெண். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எக்ஸ்சல் பைக்கில் டீ கேனுடன் சுற்றிவந்த உமா சல்மாவிடம் பேசினோம். ``கலெக்டர் அபீஸ்க்கு பின்னாடி இருக்க கரும்பாலை இந்திரா நகர் பகுதியிலதான் எங்க வீடு இருக்கு. டீக்கடை வச்சுருந்த, எங்க அப்பா எங்கள நல்லபடியா வளர்த்தாரு.

புதுக்கோட்டை: `ஒரு விபத்துல எல்லாம் மாறிடிச்சு’ - பெண் பிள்ளைகளுடன் போராடும் ராஜேஸ்வரி

திருமணம் முடிஞ்சு கேரளாவில் என் மாமியார்கூட, கூட்டுக் குடும்பமா இருந்தேன். என் வீட்டுக்காரருக்கு குடிப்பழக்கம் ஜாஸ்தி. தினமும் சண்டை போட்டுத்தான் வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். அவரு குடிப்பழக்கம் அதிகமானதால், அவரவிட்டு பிரிஞ்சு வந்துட்டேன். என் மகன இப்ப எங்க அப்பா வீட்ல வைச்சுதான் வளக்கிறேன். அப்பா இறந்துட்டதால, நான் அக்கம், பக்கத்தில் வீட்டு வேலை செஞ்சு பொழைக்கிறேன். சில வீடுக தூரமா இருக்கிறதால, அப்பாவோட வண்டிய சரிசெஞ்சு வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தேன்.

உமாசல்மா
உமாசல்மா

கொரோனா பயத்தால இப்போதைக்கு வீட்டு வேலைக்கு வர வேணாம்னு சொல்லிட்டாங்க. வேற வழி தெரியல, அப்பாவோட டீ வியாபரத்த கையில் எடுத்து தெருத்தெருவா டீ விக்கிறேன். தமுக்கம் கோரிப்பாளையம், அண்ணா பஸ்டாண்டு, கலெக்டர் ஆபீஸுன்னு இந்தப் பக்கமா ஒரு சுத்து சுத்தி வந்துருவேன். காலையில 30 டீ, சாய்ங்காலம் 30 டீ என ஒரு நாளைக்கு 60 டீ விக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டீ க்கு மூன்று ரூவா லாபம் கிடைக்குது. இப்போதைக்கு இதுபோதும். என் மகன வச்சு பார்த்துக்குவேன். துணைக்கு அக்கா குடும்பம் இருக்கு. ஆனா, அவங்க இருக்க நிலைமைல நாமளும் அவங்களுக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம்னு நினைச்சேன். அதனால, ஏதாவது வேலை செஞ்சு என் மகன வளர்த்துடணும்.

உமாசல்மா
உமாசல்மா

எனக்கு அரசாங்கம் பார்த்து சின்ன பெட்டிக் கடை மட்டும் வச்சுக்குடுத்தா போதும். நிம்மதியா பிழைச்சுருவேன். கிடைக்குற வருமானத்தில் அந்தக் கடனையும் கட்டிருவேன்" என நம்பிக்கை குரலில் பேசியபடியே `டீ... டீயேய்’ என்ற குரலுடன் வண்டியைக் கிளப்பினார்.

தேநீர் விற்று குடும்பத்தைக் காப்பாற்றும் மதுரை பெண்! கொரோனா தொடர்பான ஊரடங்கால் பலரும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்....

Posted by Vikatan EMagazine on Sunday, July 12, 2020
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு