Published:Updated:

அரசாங்க வேலையிலிருந்து ஆர்கானிக் பொருள்கள் விற்பனைக்கு... மகேஸ்வரியின் மனசுக்குப் பிடிச்ச பிசினஸ்

மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
மகேஸ்வரி

எண்ணித்துணிக

அரசாங்க வேலையிலிருந்து ஆர்கானிக் பொருள்கள் விற்பனைக்கு... மகேஸ்வரியின் மனசுக்குப் பிடிச்ச பிசினஸ்

எண்ணித்துணிக

Published:Updated:
மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
மகேஸ்வரி

“ஒரு பெண் தன் கனவை நிறைவேற்றிக் கொள்ள சமூக எதிர்ப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் உடைச்சு நிறைய போராட வேண்டி யிருக்கும். அப்படிப் போராடிப் பெற்றதுதான் என் வெற்றியும்’’

- பெருமையாகப் பேசுகிறார் மகேஸ்வரி.

தான் பார்த்து வந்த அரசாங்க வேலையை விடுத்து, ஆர்கானிக் கடை தொடங்கி யிருக்கிறார். விவசாயிகளிடமிருந்து பொருள் களை வாங்கி, விற்பனை செய்து மாதம் ஒரு லட்சம் வரை வருவாய் ஈட்டும் மகேஸ்வரி தன்னுடைய வெற்றிக்கதையைப் பகிர்கிறார்.

மகேஸ்வரி
மகேஸ்வரி

‘`படிப்பை முடிச்சதும் வருமானவரித் துறையில் சுருக்கெழுத்துப் பணியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். 20 வருடங்களில் அடுத்தடுத்து பதவி உயர்வு கிடைச்சு சேவை மற்றும் சரக்குத்துறையில் கண்காணிப்பாளர் பதவிக்கு வந்தேன். ஒரு லட்சம்வரை சம்பளம் வாங்கினாலும், மனசுக்குள்ள ஒரு தேடுதல் இருந்துகிட்டே இருந்துச்சு. அரசாங்க வேலை யில் குறிப்பிட்ட வயசுக்கு மேல் என்னை அப்டேட் பண்ணிக்க முடியல. எல்லாவற்றிலும் பின்தங்கியே இருக்குற மாதிரி உணர்ந்தேன். அப்பதான் `இயற்கை வாழ்வியல்' குழுவினர் அறிமுகமானாங்க. அவங்க மூலமாக எனக்குத் தேவையான ஆர்கானிக் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஒருகட்டத்தில் இயற்கை உணவுகள்மீது ஆர்வம் அதிகமாகவே இதையே பிசினஸா பண்ணலாம்னு தோணுச்சு. வேலையை விட முடிவெடுத்தேன். ‘அரசாங்க வேலையில் நிம்மதியா சம்பளம் வாங்குறதை விட்டுட்டு, பிசினஸ் பண்ணி என்ன சாதிக்க போறேன்’னு கேட்காத ஆளே இல்லை. ஆனா, பணத்தைவிட நம்முடைய சந்தோஷம் முக்கியம்னு தோணுச்சு. வெற்றியோ, தோல்வியோ ஒரு முறை போராடிப் பார்த்திடலாம்னு துணிஞ்சு இந்த பிசினஸில் இறங்கினேன்''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

- துணிச்சல் முடிவின் பின்னணி சொல்லித் தொடர்கிறார்... ‘`எங்க இயற்கை வாழ்வியல் குழுவிலிருக்கும் விவசாயிகளிடமிருந்து ஆர்கானிக் பொருள்களை வாங்கி, குறைந்த லாபம் வெச்சு, என்னுடைய பிராண்டை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்னு பிளான் பண்ணேன். மஞ்சள், அரிசி, கோதுமைனு அன்றாட தேவைகளை விவசாயிகளிடமிருந்து மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்.

தோழிகள், உறவினர்கள் கொடுத்த வாய்வழி விளம்பரம் மூலம் நிறைய பேர் தேடி வர ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு பொருளையும் அது தனித்துவமா விளையும் அல்லது உற்பத்தியாகும் இடத்திலிருந்தே வாங்கினேன். அதனால் என் பொருள்கள் தனித்துவமாக இருக்கும்னு சொல்ல ஆரம்பிச் சாங்க. அடுத்தகட்ட வளர்ச்சியாக ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யறேன்” என்கிறார்.

கண்ணகி நகர், பெரும்பாக்கம், படப்பை, விழுப்புரம் போன்ற இடங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்களுக்கு பிசினஸ் பயிற்சிகளும் வழங்குகிறார் மகேஸ்வரி. அவர்கள் தயார் செய்யும் பொடி வகைகள், சத்துமாவுக் கஞ்சி வகைகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்து கொடுப்பவர், ‘‘இப்போ 60 வகையான பொருள்களை விற்பனை செய்றேன். விவசாயிகளுக்கும் அவங்க பொருள்களுக்கும் நல்ல விலை கிடைப்பதால் என்கிட்ட தொடர்ந்து கொடுக்குறாங்க. 10,000 ரூபாயில் ஆரம்பிச்ச பிசினஸ்ல இப்போ மாசம் ஒரு லட்சம் ரூபாய் வரை டர்ன் ஓவர் பார்க்க முடியுது. மனசுக்குப் பிடிச்ச தொழிலைச் செய்யும் திருப்தியும் கிடைக்குது. என்னை நான் நிரூபிச்சுட்டேன்”

- நிறைவோடு விடை கொடுத்தார் மகேஸ்வரி.

 கோமதி
கோமதி

நியாயமான விலை, நல்ல லாபம்!

“நானும் என் கணவரும் சேர்ந்து மஞ்சள் விவசாயம் பண்றோம். அத் துடன் தென்னை மரங்களைக் குத்த கைக்கு எடுத்து எண்ணெய் எடுத்து விற்பனை செய்றோம். ரெண்டரை வருஷமா மகேஸ்வரி எங்ககிட்டயிருந்து மஞ்சளும், தேங்காய் எண்ணெயும் வாங்கிட்டிருக்காங்க. எங்களுக்கும் நியாமான விலை கிடைக்குது. சந்தையில் பொருள்களை விற்பனை செய்வதைவிட தனி நபரிடம் விற்பனை செய்யும்போது, பேக்கிங்கில் ஆரம்பிச்சு கூரியர் அனுப்புவதுவரை வேலை கொஞ்சம் அதிகம்தான். ஆனால், லாபமும் அதிகம் என்பதால் சிரமம் தெரியல” என்கிறார் மகேஸ்வரியிடம் தன் பொருள்களை விற்பனை செய்யும் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கோமதி.