Published:Updated:

“மூன்று சவால்கள்... கை கொடுத்த குடும்பத் தொழில்... அந்த மனநிறைவு!” - நம்பிக்கை மனுஷி

மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
மீனாட்சி

கேட்டரிங் தொழிலில் அசத்தும் மீனாட்சி

“மூன்று சவால்கள்... கை கொடுத்த குடும்பத் தொழில்... அந்த மனநிறைவு!” - நம்பிக்கை மனுஷி

கேட்டரிங் தொழிலில் அசத்தும் மீனாட்சி

Published:Updated:
மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
மீனாட்சி

“கணவர் வீட்டின் குடும்பத் தொழில் கேட்டரிங். பெரிசா அனுபவம் இல்லாத நிலையில்தான் இந்தத் தொழிலை ஏத்துக்கிட்டேன். இன்னிக்கு வெளி மாநிலங்களிலும் கேட்டரிங் சர்வீஸ் பண்ற அளவுக்கு நிறைய அனுபவங்கள் கிடைச்சுடுச்சு”

- அடக்கமாகக் கூறும் மீனாட்சி, அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர். குடும்பக் கஷ்டத்தால் கேட்டரிங் தொழிலைக் கையில் எடுத்தவர், பகுதிநேரத் தொழில்முனைவோராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

“ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது தேசிய அளவிலான கோ-கோ வீராங்கனை. கல்யாணத்துக்குப் பிறகு, கணவரின் ஊரான கிருஷ்ணகிரியிலேயே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஒன்றில் உடற்கல்வி ஆசிரியரா சேர்ந்தேன். கணவரின் கேட்டரிங் தொழிலும் என் வேலையும் நல்லபடியா போச்சு. மகனுக்கு மெரிட்ல பல் மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைச்சது. அப்போ திடீர் மாரடைப்பால் கணவர் காலமாக, மொத்தக் குடும்பமும் நிலைகுலைஞ்சுபோச்சு. இனி வேலைவாய்ப்பு கிடைக்காதுனு நினைச்சு கணவரின் கேட்டரிங் தொழிலிலிருந்து 20 ஊழியர்கள் விலகினாங்க.

“மூன்று சவால்கள்... கை கொடுத்த குடும்பத் தொழில்... அந்த மனநிறைவு!” - நம்பிக்கை மனுஷி

மீதமிருந்த 30 பேரின் வாழ்வாதாரம், பிள்ளைகளைப் படிக்க வைக்கும் கடமை, குடும்பப் பொறுப்புனு பல சவால்கள் என் முன்பு இருந்துச்சு. என் வருமானம் போதலை. குடும்பத் தொழிலைக் கைவிட மனசில்லாமல், அந்தத் தொழில் பொறுப்பை ஏத்துக்கிட்டேன். கணவர் இருந்தவரை, எந்த ஆர்டர் வந்தாலும் டைரியில எழுதிவைப்பார். அதைப் பார்த்து முன்பு ஆர்டர் கொடுத்தவங்களுக்கு போன் பண்ணி, ‘புதிய ஆர்டர் இருந்தா சொல்லுங்க. நல்லபடியா செஞ்சு கொடுக்கறேன்’னு சொன்னேன். ‘முன் அனுபவமில்லாத நிலையில் பெண் தனியா இந்த வேலையைச் சரியா செய்வாங்களா?’ன்னு பலரும் தயங்கினாங்க. பேச்சுத்திறமையை வளர்த்துகிட்டதுடன், இந்தத் தொழிலின் எல்லா நுணுக்கங்களையும் தெரிஞ்சுகிட்டேன். காய்கறிகள், மசாலா பொருள்கள் தயாரிப்புக்கான செலவுகள் தவிர, முதலீட்டுக்குனு தனியா செலவாகலை. போராடி சில ஆர்டர்கள் பிடிச்சு நல்லபடியா செஞ்சு கொடுத்தேன்” என்பவருக்கு அடுத்தடுத்து ஆர்டர்கள் வீடுதேடி வந்திருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“மாசத்துல சில நாள்கள்தாம் முகூர்த்த சீஸன் இருக்கும். சுப நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சனி, ஞாயிறுகள்லதான் நடக்கும். எனவே, என் ஆசிரியர் வேலைக்கு பாதிப்பில்லாத வகையில் கேட்டரிங் வேலைகளைத் திட்டமிடுவேன். வேலை நாளில் ஆர்டர் வந்தாலும், உரிய மேற்பார்வையாளர்களை நியமிச்சு சிக்கலின்றி பணிகள் நடப்பதை உறுதிப்படுத்திடுவேன். வெளியூரிலிருந்து பணிமாறுதலாகி வந்து, பல்வேறு அரசு அலுவலகங்கள்ல வேலை செய்யும் அதிகாரிகள் பலரும் வீட்டுச் சாப்பாடு எதிர்பார்ப்பாங்க. அவங்களுக்கு மூணு வேளை உணவு டெலிவரி செய்யற ஆர்டர்களைப் பிடிச்சு, தினசரி வருமானத்தை உறுதி செஞ்சேன். நாலு வருஷமா தினசரி 25 பேருக்கு உணவு கொடுக்கிறேன். ரெண்டு பணியாளர்களுடன், வீட்டில் இருந்தபடியேதான் இந்த வேலைகளைச் செய்றேன். காலை, இரவு ஆர்டர்களை நானும் மதிய வேலைகளை என் மாமியாரும் கவனிச்சுக்கறோம்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் தவிர, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் கேட்டரிங் ஆர்டர்கள் பண்ணிக்கொடுக்கறேன். எங்கு போனாலும் அந்தப் பகுதி டிரெடிஷனல் முறைப்படியே உணவு தயாரிப்பேன். சின்னது முதல் பல ஆயிரம் பேர் கலந்துக்கும் நிகழ்ச்சிகள் வரையிலான ஆர்டர்களையும் ஏற்கிறேன். மாமனார் காலத்தில் இருந்தே மசாலா பொருள்களை வீட்டிலேயே தயாரிக்கிறோம். அதனால், தரத்துடன் வீட்டுச் சுவை எதிர்பார்க்கும் பலரும் எங்களை நாடி வர்றாங்க”

- பெருமிதத்துடன் கூறும் மீனாட்சி, இந்தத் தொழிலில் மாதம் 60,000 ரூபாய் லாபம் ஈட்டுவதுடன், 30 பேருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கிறார்.

“விசேஷங்களுக்கும் பண்டிகைகளுக்கும் பலகாரங்கள் மட்டும்கூட தனியா தயாரிச்சு கொடுப்போம். கொரோனா தனிமைப் படுத்துதல் மையத்துக்கான உணவு ஆர்டர்களும் பல மாதங்கள் செய்துகொடுத்தேன். எங்க குடும்பத்தை நம்பியிருக்கும் பணியாளர் களுக்குத் தொடர்ந்து வேலை கொடுக்கிற நிறைவுதான் அதிக மகிழ்ச்சி தருது. பையனை நல்லபடியா படிக்க வெச்சுட்டேன். சமீபத்துல தான் அரசு மருத்துவரா வேலையில் சேர்ந்தான். பொண்ணு ப்ளஸ் டூ படிக்கிறாள். கணவர் இழப்பைத் தவிர, எந்தக் குறையும் இன்றி சந்தோஷமா இருக்கோம்”

- கணவரின் நினைவுகளில் மூழ்கும் மீனாட்சியின் விழிகளில் ஈரம்!