Published:Updated:

20,000 ரூபாய் முதலீடு... மாதம் 20 லட்சம் வருமானம்!

கௌதம், நிவேதா
பிரீமியம் ஸ்டோரி
கௌதம், நிவேதா

- புளிச்சக்கீரை நாப்கினில் சாதித்துக் காட்டிய நண்பர்கள்

20,000 ரூபாய் முதலீடு... மாதம் 20 லட்சம் வருமானம்!

- புளிச்சக்கீரை நாப்கினில் சாதித்துக் காட்டிய நண்பர்கள்

Published:Updated:
கௌதம், நிவேதா
பிரீமியம் ஸ்டோரி
கௌதம், நிவேதா

``எங்கிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நம் எதிர்காலத்துக்கான விதை வந்து விழலாம். எங்களுக்கும் அப்படித்தான். `ஆந்திராவுல மூணு வேளையும் உணவுல ஏதாவதொரு வகையில் புளிச்சக் கீரையைச் சேர்த்துக்கிறாங்க. இலைகளைப் பயன்படுத்துறாங்க. ஆனா, தண்டுகள் வீணாகிடுது. அதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாத்த முடியுமா?’ன்னு யாரோ ஒருவர் கேட்ட கேள்விதான் நாங்க நான்கு தேசிய விருதுகளை வாங்குறதுக்கும் `பிலிஸ் நேச்சுரல்’ என்ற நிறுவனத்தை உருவாக்குற துக்குமான விதையா இருந்துச்சு” உற்சாகத் துடன் பேசுகின்றனர் கோவையைச் சேர்ந்த நிவேதாவும் கெளதமும்.

`புளிச்சக்கீரை தண்டைப் பயன்படுத்தி நேச்சுரல் சானிட்டரி நாப்கின்’ என்ற புதுமை யான முயற்சியைக் கையிலெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர் நிவேதாவும் கெளதமும். கல்லூரித் தோழர்களான இவர்கள் இருவரும் இரண்டரை வருடங்களுக்கு முன்பு 20,000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த `பிலிஸ் நேச்சுரல்’ என்ற நிறுவனம் இன்று மாதம் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

20,000 ரூபாய் முதலீடு...
மாதம் 20 லட்சம் வருமானம்!

``ரெண்டு பேரும் கோவை குமரகுரு காலேஜ்லதான் பி.டெக் ஃபேஷன் டெக்னாலஜி படிச்சோம். ஃபைனல் இயர் புராஜெக்ட்ல நாங்க ரெண்டு பேரும்தான் டீம். புதுசா ஏதாவது செய்யணுமேன்னு தேடிக்கிட்டிருந்த போதுதான், `புளிச்சக்கீரை தண்டுகள் வீணாக்கப்படுவதைப் பத்திச் சொல்லி, இதுல ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்க’ன்னு எங்க காலேஜுக்கு வந்த தன்னார்வலர் ஒருவர் யதார்த்தமா சொன்னார். புதுசா இருந்துச்சு.

முயற்சியில இறங்கினோம் அதிலிருந்து வெற்றிகரமா துணியை உருவாக்கிட்டோம். அடுத்து அதை எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு டெஸ்ட் பண்ணபோது, அதுல உறிஞ்சும் தன்மை அதிகமா இருக் குன்னு தெரிஞ்சது. புளிச்சக் கீரைக்கு கிருமிகளைக் கொல்லும் சக்தியும் அதிகம். புராஜெக்ட்டுக்காக இதை யெல்லாம் நாங்க அனலைஸ் பண்ணிக்கிட்டிருந்தபோதுதான் சானிட்டரி நாப்கினை மையமா வெச்சு எடுக்கப் பட்ட `பேட் மேன்’ படம் வெளியாகி பெரிய விவாத மாகிட்டிருந்துச்சு.

2011-ம் வருட புள்ளிவிவரப்படி இந்தியாவுல 12 சதவிகிதப் பெண்கள்தான் நாப்கின் பயன் படுத்தினாங்க. 2016-ல் அது 57 சதவிகிதமாக உயர்ந்துருக்கு. கூடவே 12 சதவிகித சானிட்டரி நாப்கின் பயன்பாட்டால ஒரு வருஷத்துல 1,13,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகுறதா வெளியான தரவுகள் கவலையளிச்சது. அப்படின்னா 57 சதவிகிப் பயன்பாட்டுக்கு எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகும்? இந்த விஷயங்களையெல்லாம் இணைச்சுப் பார்த்தபோது உருவானதுதான் புளிச்சக்கீரை தண்டுல நேச்சுரல் சானிட்டரி நாப்கின் தயாரிக்கிற ஐடியா” என்று நிறுத்துகிறார் நிவேதா.

20,000 ரூபாய் முதலீடு...
மாதம் 20 லட்சம் வருமானம்!

கெளதம் தொடர்ந்தார், ``முதல்ல `விங்லெஸ் பேடு’தான் தயாரிச்சோம்.

அது பிரவுன் கலர்ல, அழுக்கான பேட் மாதிரியே இருந்தது. எல்லோரும் வெள்ளை நிற விங்ஸ் பேடுகளுக்கு பழகி யிருந்ததால எங்க ஃபேமிலியில உள்ள வங்ககூட அதை யூஸ் பண்ணத் தயங்கி னாங்க. வெளியில உள்ளவங்க எப்படி சப்போர்ட் பண்ணுவாங்கன்னு கவலையா இருந்துச்சு. ஆனாலும், நாங்க நம்பிக்கையை இழக்கலை. முதல் அங்கீகாரமா எங்களோட புராஜெக்ட்டுக்கு அனைத்து இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறு வனங்களுக்கான கூட்டமைப்பு (AICTE) தேசிய அளவில் வழங்கும்

`சத்ர விஸ்வகர்மா’ விருது கிடைச்சது. இதைக் கண்டிப்பா அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோகணும்னு முடிவு பண்ணிட்டோம்” கெளதமின் வார்த்தைகளில் பெருமிதம்.

20,000 ரூபாய் முதலீடு...
மாதம் 20 லட்சம் வருமானம்!

``பெண்கள்கிட்ட கொண்டு போகணும்னா கண்டிப்பா நாப்கினு டைய நிறத்தை மாத்தணும்ங்கிறதுல தெளிவா இருந்தோம். கெமிக்கல் பயன்படுத்தினா எங்களோட நோக்கமே சிதைஞ்சிரும். நிதானமா யோசிச்சு நாப்கினின் மேல் பகுதியில் உள்ள காட்டனின் அடர்த்தியைக் கூட்டினோம். அடுத்து விங்ஸ் வைக்கிறதுக்கு ஏதுவா மெட்டீரியலை புராசெஸ் பண்ணினோம். நேச்சுரல் நேப்கினின் இறுதிவடிவம் பக்காவா வந்துருச்சு. நாங்க எதிர்பார்க்காத வகையில அடுத்தடுத்து மூன்று தேசியளவிலான விருதுகள் கிடைச்சது (I3 innovation Most promising Student Innovator Award, Sidbi Startup Mitra award, iCreate award). விருதில் பரிசுத்தொகையா கிடைச்ச 75,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயை முதலீடாகப் போட்டுத்தான் `பிலிஸ் நேச்சுரல்’ என்ற பெயரில் எங்க நிறுவனத்தை ஆரம்பிச்சோம். இன்னிக்கு மாதம் 20 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமா வளர்ந்திருக்கோம்” என்கிறார் பூரிப்புடன்.

 கிராமப் பெண்களிடம் நாப்கின்...
கிராமப் பெண்களிடம் நாப்கின்...

`` நேரடியா டீலர்கள் மூலமாகவும் இணையதளம் மூலமாவும் விற்பனை செய்யுறோம். இந்தியா மட்டுமல்லாம அமெரிக்கா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யுறோம். இந்த நாப்கின் ஏழைப் பெண்களுக்கும் போய்ச் சேரணும்னு வரம் என்ற பிரசாரத்தை முன்னெடுத்தோம்.

100 நாப்கின்கள் விற்றால், 10 நாப் கின்களை ஏழைப் பெண்களுக்கு இலவசமா கொடுக்கணும்ங்கிறது தான் `வரம்’ பிரசாரத்தின் நோக்கம். எங்க வாடிக்கையாளர்கள் பலரும் அவங்களால முடிஞ்ச தொகையை அனுப்பி, இல்லாதவங்களுக்கு நாப்கின் இலவசமா கொடுங்கன்னு சொன்னாங்க. அப்படி வரும் தொகைக்கான நாப்கின்களை ஆதரவற்ற இல்லங்களுக்கு அனுப்பறோம்” என்கிறார் நிவேதா.

20,000 ரூபாய் முதலீடு...
மாதம் 20 லட்சம் வருமானம்!
 ‘வரம்’ பிரசாரக்குழுவினர்...
‘வரம்’ பிரசாரக்குழுவினர்...

“காலேஜ் கேம்பஸ் இன்டர் வியூலயே எனக்கு பெரிய ஐடி கம்பெனியில நல்ல சம்பளத்துல வேலை கிடைச்சது. நல்ல வேலையை உதறிட்டு ரிஸ்க் எடுக்கப்போறியா? வேலைக்குப் போய்கிட்டே இதையும் முயற்சி பண்ணலாமேன்னு கேட்டாங்க. ஆனா, இதுதான் என் பாதைங்கிறதுல தெளிவா இருந்தேன். கெளதமும் அப்படித்தான். ஒரே சிந்தனையும் தெளிவும் இருக்கிறதால எங்களால இதுல சக்சஸ் பண்ண முடிஞ்சது”

- தம்ஸ் அப் காட்டுகிறார் நிவேதா.