Published:Updated:

51 வயதில் மாதம் ரூ.1 லட்சம் வருமானம்!

 மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
மீனாட்சி

`அம்மா சமையல்' மீனாட்சி

51 வயதில் மாதம் ரூ.1 லட்சம் வருமானம்!

`அம்மா சமையல்' மீனாட்சி

Published:Updated:
 மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
மீனாட்சி

‘`முப்பது வருஷங்கள்ல நான் பார்க்காத தோல்விகளே இல்ல. ஆனா, ஒவ்வொரு தோல்வியிலேருந்தும் ஒரு பாடத்தைக் கத்துக் கிட்டு அடுத்த இலக்கை நோக்கி ஓடினேன். என்னோட 51-வது வயசுல ஒரு திருப்பம் நிகழ்ந்துச்சு. யூடியூபரா என் கரியரை தொடங் கினேன். ‘உங்களைப் பார்த்தா இன்ஸ்பிரேஷனா இருக்கு’னு நிறைய பேர் சொல்றதைக் கேட்கும்போது சந்தோஷமா இருக்கு’’ - மீனாட்சி அம்மாவின் வார்த்தைகளில் அவ்வளவு மகிழ்ச்சி.

‘அம்மா சமையல்’, ‘அம்மா வீட்டு சமையல்’ என்ற யூடியூப் சேனல்கள் மூலம் இல்லத்தரசி களிடம் பிரபலமானவர் சென்னையைச் சேர்ந்த மீனாட்சி. சமையல் வீடியோக்கள் மட்டுமன்றி மாடித்தோட்டம் பராமரிப்பு, கைவினை பொருள்கள் தயாரிப்பு, பிசினஸ் ஐடியாக்கள் என பல்வேறு தலைப்புகளில் வீடியோக்களை பகிர்ந்துவருகிறார். இவரின் யூடியூப் சேனல் களுக்கு பத்து லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக் கிறார்கள். இல்லத்தரசி, யூடியூபரான வெற்றிப் பயணத்தைப் பகிர்கிறார் மீனாட்சி.

51 வயதில் மாதம் ரூ.1 லட்சம் வருமானம்!

“ எனக்கு சொந்த ஊரு காஞ்சிபுரம். குடும்ப சூழல் காரணமா எட்டாவதுக்கு மேல படிக்க முடியல. 16 வயசுல கல்யாணம் பண்ணி வெச் சாங்க. சென்னையில செட்டில் ஆனோம். கணவர் கார் மெக்கானிக். அவர் வருமானத்துல குடும்பத்தை ஓட்டுறது கஷ்டமா இருந்துச்சு. அதனால நான் யூரியா பை தைக்கிற கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். அடுத்தடுத்து ரெண்டு பசங்க பிறந்தாங்க. அவங்களைப் பார்த்துக்கிட்டு வீட்ல இருந்தே தொன்னைகள் தயாரிக்க ஆரம்பிச்சேன். மார்க்கெட்ல பிளாஸ்டிக் கப் வரத்து அதிகமானதால தொன்னைகளுக்கு வரவேற்பு இல்லாமப் போச்சு. அடுத்து குறைஞ்ச முதலீட்டுல ஊறுகாய், மசாலா பொடிகள் தயாரிச்சு, நானே வீடு வீடா சப்ளை பண்ணிட்டு இருந்தேன். நான் நல்லா சமைப்பேன். என் பெரிய பையன் சொன்னதால சமையலுக்கான யூடியூப் சேனல் ஆரம்பிச்சோம்.

யூடியூப்னா என்ன... அதுல எப்படி வீடியோ பார்க்கணும்னுகூட எனக்குத் தெரியாது. என் பையன்தான் எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தான். ‘இன்னும் சில வருஷம் கழிச்சு நீங்க எங்க போனாலும் அம்மா சமையல் மீனாட்சி அம்மாவானு கேட்பாங்க பாருங்க’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். அவ்வளவு நம்பிக் கையைக் கொடுத்தவன் ஒரு விபத்துல திடீர்னு தவறிட்டான். பட்டாம்பூச்சி மாதிரி சுத்திச்சுத்தி வந்தவன் இனி இல்லைங்கிறதை மனசு ஏத்துக் கவே சில மாசங்கள் ஆச்சு...'' கண்கள் குளமா கின்றன மீனாட்சிக்கு.

51 வயதில் மாதம் ரூ.1 லட்சம் வருமானம்!

‘`அவன் போனபிறகு யூடியூப் பத்தி நான் யோசிக்கக்கூட இல்ல. ஆனா, என் சின்ன பையன்தான் அண்ணனோட ஆசையை நிறைவேத்தணும்னு உறுதியா இருந்தான். திரும்பி ஓட ஆரம்பிச்சேன். ஏழு வருஷங் களுக்கு முன்னாடி சேனல் ஆரம்பிச்சபோது வெறும் 63 சப்ஸ்கிரைபர்கள்தான் இருந் தாங்க. எல்லாரும்தான் சமையல் வீடியோ பண்றாங்க... நாம அதை எப்படி வித்தி யாசமா பண்ணலாம்னு யோசிச்சோம். கிச்சன்ல ஒரே இடத்துல நின்னபடி சமைக் கிறதைவிட, ‘சமையல் வ்ளாக்’ (Cooking Vlog) பண்ண ஆரம்பிச்சோம். அடுத்து ‘அம்மா வீட்டு சமையல்’னு இன்னொரு சேனலை ஆரம்பிச்சு கிராஃப்ட் தொடங்கி, தோசைக் கல் பாதுகாப்புவரை பயன்பாட்டு அடிப் படையிலான வீடியோக்களை பதிவிட ஆரம்பிச்சோம். அந்த ஐடியா ஜெயிச்சுருச்சு. இப்போ ரெண்டு சேனலுக்கும் சேர்த்து பத்து லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்காங்க. மாசம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக் கிறேன். எல்லாரும் பெத்தவங்க கனவுக்காக ஓடுவாங்க. நான் என் புள்ளைங்க கனவுக்காக ஓடுனேன். என் பெரிய பையன் ஆசைப் பட்ட மாதிரி ‘அம்மா சமையல் மீனாட்சி அம்மாவா’ இன்னிக்கு எனக்கோர் அடை யாளம் கிடைச்சிருக்கு’’ என்கிறார்.

“ யூடியூப் சேனலை பொறுத்தவரை ரெகு லரா வீடியோ பதிவிட்டா தான் மக்களை தக்கவெச்சுக்க முடியும். வாரத்துக்கு அஞ்சு வீடியோ அப்லோடு பண்றோம். ஒரு வாரத் துக்கு முன்னாடியே திட்டமிட்டு, ஐடியாக் களை ரெடி பண்ணிருவேன். காசு சம்பாதிக் கிறதைத் தாண்டி எதையோ சாதிச்சுட்ட உணர்வு வருது'' - சிரித்தபடி விடை கொடுக்கிறார் மீனாட்சி.