Published:Updated:

2K kids: ஒரு வேஷ்டி நெய்யுறதுக்கு ஒரு மணி நேரம்... கூலி அஞ்சு ரூபாய்!

வசந்தி, பழனியம்மாள், கமலா, மேகலா
பிரீமியம் ஸ்டோரி
News
வசந்தி, பழனியம்மாள், கமலா, மேகலா

புவனா சிவசங்கர்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம், குமாரபாளையம். இங்குள்ள பல குடும்பங் களுக்கு வாழ்வாதாரம் விசைத்தறி. ஆண்களுக்கு நிகராக தங்களது உழைப்பும் இதில் கலந்திருப் பது பற்றிச் சொல்கிறார்கள், தறி ஓட்டும் பெண்கள்.

பழனியம்மாள்: ‘`சின்ன வயசுலயிருந்தே தறி ஓட்டுறேன். என் கணவருக்கும் இதுதான் வேலை. ஆரம்பத்துல கைத்தறி ஓட்டினோம், இப்போ விசைத்தறி.

நெய்யுற துணியில டேமேஜ் வராம இருக்க, இடையில அறுந்துபோன நூலை எல்லாம் ரொம்ப உன்னிப்பா பார்த்து பார்த்து எடுத்து, என் வலது கண்ணுல பார்வையே மங்கிப் போயிடுச்சு. ஒரு வேஷ்டி ஓட்ட ஒரு மணி நேரம் ஆகும். ஆனா, அதுக்குக் கூலி வெறும் அஞ்சு ரூபாய்.’’

வசந்தி: ‘`என் கணவர் விவசாயம் பாத்துட்டு இருந்தாரு. மழையில்லாம மண்ணு காய்ஞ்சு போக, தறி வேலைக்கு வந்தோம். 20 வயசுல இருந்து தறி ஓட்டுறேன். ராவும் பகலும் தறி ஓடிக்கிட்டே இருக்கும். தலைக்கு மேல லைட்டு எரிஞ்சுட்டே இருக்குற சூட்டால, தலைவலிக் கும்.

கண் பார்வையும் குறைஞ்சுட்டேதான் வருது. ஆனாலும், எங்க ரெண்டு பொண்ணுங் களையும் இந்தத் தறியில்லைன்னா வளர்த் திருக்க முடியாது. அதனால உடல் தொந்தரவு களை கண்டுக்கிறதில்ல.’’

2K kids: ஒரு வேஷ்டி நெய்யுறதுக்கு ஒரு மணி நேரம்... கூலி அஞ்சு ரூபாய்!
2K kids: ஒரு வேஷ்டி நெய்யுறதுக்கு ஒரு மணி நேரம்... கூலி அஞ்சு ரூபாய்!
2K kids: ஒரு வேஷ்டி நெய்யுறதுக்கு ஒரு மணி நேரம்... கூலி அஞ்சு ரூபாய்!
2K kids: ஒரு வேஷ்டி நெய்யுறதுக்கு ஒரு மணி நேரம்... கூலி அஞ்சு ரூபாய்!

மேகலா: ‘`ஒரு நாளாவது ராத்திரி நிம்மதியா தூங்கணும்ங்கிறது எனக்கு ரொம்ப நாள் ஆசை. அந்தளவுக்கு நாள் எல்லாம் வேலை பார்த்த களைப்பு ராத்திரி உடம்பப்படுத்தும். என் ரெண்டு மகன்களோட எதிர்காலத்துக்குத் தான் ஓடிட்டு இருக்கேன். தறிகளுக்கு இடையில நடந்துக்கிட்டே இருக்கணும். அப்போதான் தறி நின்னா உடனே அதை மறுபடியும் போட்டுவிட முடியும்.

முக்கால் மணி நேரம் இடைவிடாம தறி ஓடினாதான் மூணு ரூபாய் சம்பாதிக்க முடியும். காலையில வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு, ஒரு நிமிஷம்கூட ஓய்வில்லாம விசைத்தறில வேலை பார்க்கறேன். மூச்சுவிடுறது மாதிரி கால் கடுப்பும் என்கூடவே இருக்குது.’’

கமலா: ‘`எங்கப்பா நான் சின்ன வயசா இருந்தப்போவே இறந்துட்டாரு. அம்மா தறி வேலைபார்த்துதான் என்னையும் சகோதரரை யும் வளர்த்தாங்க. படிக்க வசதியில்ல.

எட்டு வயசுலயிருந்து தறி ஓட்டுறேன். இப்போ 42 வயசாகிடுச்சு. கணவருக்கும் தறிதான் வேலை. விடியக்காலை மூணு மணிக்கு எழுந்து பட்டறைக்குப் போனா, ராத்திரி பதினொரு மணி வரை இடைவிடாம மாத்தி மாத்தி தறி ஓட்டணும். பாவு தூக்கறதால, நாடா கையில காயத்தை ஏற்படுத்துறது, நூல் கிழிச்சு விரல்ல ரத்தம் கசியுறதுனு எல்லாம் உண்டுதான். எங்க பொம்பளப் புள்ளைங்க ரெண்டும் படிச்சுப் பொழச்சுக்கிற வரை நூலோடதான் வாழ்வு!”