Published:Updated:

வீட்டிலேயே உருவாக்கலாம் டிரெண்டியான டிசைனர் புடவைகள் - நான்சியின் 'மாத்தியோசி'பிசினஸ்

Designer sarees

சில மணிநேரம் செலவு பண்ணா, ஒரு டிசைனர் புடவையை வீட்டிலேயே 500 ரூபாய்க்குள் உருவாக்க முடியும்.

வீட்டிலேயே உருவாக்கலாம் டிரெண்டியான டிசைனர் புடவைகள் - நான்சியின் 'மாத்தியோசி'பிசினஸ்

சில மணிநேரம் செலவு பண்ணா, ஒரு டிசைனர் புடவையை வீட்டிலேயே 500 ரூபாய்க்குள் உருவாக்க முடியும்.

Published:Updated:
Designer sarees

"என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும், பெண்களுக்கு எப்போதுமே புடவையின்மீது ஒரு கிரேஸ் இருக்கத்தான்செய்யும். யாரேனும் ஒரு வித்தியாசமான நிறத்திலோ அல்லது டிசைனிலோ புடவை கட்டிக்கொண்டு வந்தால், இந்தப் புடவை அழகா இருக்கே எங்க வாங்கினீங்க என்று கேட்டு, அதே மாதிரியான புடவைக்கு நாலு கடைகள் ஏறி இறங்காத பெண்கள் குறைவே. நான் தேடிய புடவை கிடைக்கவே இல்லியே என்கிற மன வருத்தத்துடன் பல சமயங்களில் கடைகளைவிட்டு அகன்ற தருணமும் நம்முள் குடிகொண்டிருக்கலாம். அந்த மனவருத்தம் எனக்குள்ளேயும் இருந்துச்சு. அதுதான் என்னை இன்னைக்கு பிசினஸ் உமனா மாத்தியிருக்கு'' என்றபடியே ஒரு புடவையை வடிவமைப்பதில் உள்ள சிக்கல்பற்றி பேசுகிறார், நான்சி.

Designer sarees
Designer sarees
pixabay

"எனக்கு சொந்த ஊர், சென்னை. படிச்சது பி.இ. நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் பி.இ படிப்பு சுவாரஸ்யம் இல்லாமலேயே இருந்துச்சு. அதனால் பார்ட் டைமாக ஜூவல்லரி மேக்கிங், பிரின்ட் டிசைனிங் கோர்ஸ்கள் படிச்சேன். படிப்பு முடிஞ்சதும் ஒரு டிசைனர்கிட்ட வேலைக்குச் சேர்ந்தேன். ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படிக்கலைனாலும் அனுபவரீதியாக நிறைய கத்துக்கிட்டேன். அதன்பின், ஃபேஷன் டிசைனிங் என்னுடைய தொழில்னு முடிவு பண்ணி களத்தில் இறங்கிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரம்பத்தில் ஃபேஷன் நகைளை உருவாக்கி விற்பனை செய்துட்டு இருந்தேன். ஒரு நகைக்கு 300 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். நகைகளைப் பொறுத்தவரை அவ்வப்போது டிரெண்டு மாறிட்டே இருக்கும். அதுக்குத் தகுந்த மாதிரி நாமளும் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில்தான் புடவைகள் வடிவமைக்கலாம்னு ஒரு ஐடியா வந்துச்சு. புடவைகளை வடிவமைக்கிறது ஒரு புது கான்செப்ட். புடவை தயாரிக்கிறவங்ககிட்ட இருந்து அதை வாங்கி, கூடுதல் விலை வைச்சு விற்பாங்க, அதை வடிவமைக்க மாட்டாங்க. அதனால என் கான்செப்ட் க்ளிக் ஆகும்னு தோணுச்சு.

ஐந்தரை மீட்டர் நீள அகலம் கொண்ட ஒரு துணியை புடவையில் உடல் பகுதிக்கு வாங்குகிறீர்கள் எனில், பார்டருக்கு என்றே குறைவான அகலத்துடன் விற்கும் பார்டர் துணிகளை 9 மீட்டர் வாங்க வேண்டும்.
நான்சி

ஆரம்பத்தில், புடவை வடிவமைப்பு பத்தி சுத்தமா தெரியாது. நிறைய யூடியூப் வீடியோக்கள் பார்த்துதான் கத்துக்கிட்டேன். ஆரம்பத்தில் நிறைய துணி வீணாச்சு. எந்த வீடியோவிலும் தெளிவான விளக்கம் இல்லை. ஆனால், அதுக்காக கவலைப்பட்டால் கத்துக்க முடியாதில்லையா... செய்தித்தாள்கள் பயன்படுத்தி கத்துக்க ஆரம்பிச்சேன். புடவை வடிவமைப்பில் ஓரளவு தெளிவு ஏற்பட்ட பின், புடவையின் பார்டர்களை டிசைன் செய்யும் வேலையை கையில் எடுத்தேன். ஒரு பிளைன் புடவை வாங்கி, அதில் கலர் ஃபுல் பார்டர்களைச் சேர்த்துத் தைத்து டிசைன் பண்ண ஆரம்பிச்சேன்" என்ற நான்சி, புடவை வடிவமைக்கும் முறைபற்றி விளக்க ஆரம்பித்தார்.

"அடுத்தபடியாக ரெண்டு நிறங்கள், ரெண்டு மெட்டீரியலை ஒன்று சேர்க்கும் முறையை கத்துக்க ஆரம்பிச்சேன். வீட்டில் இருந்த பழைய புடவைகளைப் பயன்படுத்தி முயற்சி பண்ணேன். ஆரம்பத்தில், நான் வடிவமைத்த புடவைகள் எதிர்பார்த்த மாதிரி வரலை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி முறையில் கட்டுவாங்க. அதனால் கீழ் மடிப்புக்கு மட்டும் ஒரு கலர் என்ற கான்செப்ட்டில் நிறைய சிரமப்பட்டேன். கீழ் மடிப்பில் மட்டும் ஒரு கலர் என ரெடி பண்ணும் புடவைகளைக் கட்டும்போது, ப்ளீட்ஸ் கொஞ்சம் தள்ளிப்போனாலும் அது ஒட்டுமொத்த புடவையோட அழகையே கெடுக்கிற மாதிரி இருந்துச்சு. இப்படி தவறுகளில் இருந்துதான் நிறைய கத்துக்கிட்டேன்.

Designer sarees
Designer sarees

"கடைகளில் விற்கும் பிளைன் புடவைகளை வாங்கி, அதில் சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்தால், அதிக விலையில் கடைகளில் விற்கும் டிசைனர் புடவைகளை வீட்டிலேயே உருவாக்கிக்கொள்ள முடியும். ஒரு டிசைனர் புடவையோட விலை 1000 ரூபாயில் இருந்து 50,000 வரை விற்கிறாங்க. அதோட மெட்டீரியல் சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனா, வடிவமைக்கப்பட்ட டிசைனுக்காக நாம் ஆயிரக்கணக்கில் காசு கொடுக்கிறோம்னா, அப்படிப்பட்ட டிசைனர் புடவையை நாம உருவாக்க முடியும்.

புடவையைப் பொறுத்தவரை மெட்டீரியலில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டவை, புடவையின் மேல் பகுதி ஒரு நிறம், கீழ் பகுதி ஒரு நிறம் என வடிவமைக்கப்பட்டவை, கீழ் வரும் மடிப்பில் மட்டும் தனி நிறம் கொண்டவை, பள்ளுவில் மல்டி கலர்,வித்தியாசமான பார்டர்கள் கொண்ட புடவைகள்,ரெண்டு மெட்டீரியல்கள் கலந்த புடவைகள் என்பதுதான் மொத்த ரகங்களே. இதில் சின்னச்சின்ன அப்டேட்டுகளுடன்தான் விதவிதமான புடவைகளை உருவாக்குறாங்க.

Designer sarees
Designer sarees

ஒரு புடவையை உருவாக்க ஐந்தரை மீட்டரில் இருந்து ஆறு மீட்டர் வரை துணி தேவைப்படும்.முதலில்,பிளைன் புடவைகளில் பார்டர்கள் வைத்து தைக்க பயிற்சி எடுத்துக்கணும். ஐந்தரை மீட்டர் நீள அகலம் கொண்ட துணியை, புடவையில் உடல் பகுதிக்கு வாங்குகிறீர்கள் எனில், பார்டருக்கு என்றே குறைவான அகலத்துடன் விற்கும் பார்டர் துணிகள் 9 மீட்டர் வாங்க வேண்டும். அதன்பின், புடவைக்கு என்று வாங்கிய பிளைன் மெட்டீரியலில் பார்டர் வைத்து தைத்துக் கொள்ளுங்கள். பார்டரில் ஸ்டோன் வேலைப்பாடுகள் அல்லது மிரர் வேலைப்பாடுகள் செய்தால் 400 முதல் 500 ரூபாயிலேயே ஒரு டிசைனர் புடவைவை உருவாக்கிவிடலாம். கூடுதல் வேலைப்பாடுகள் தேவைப்படுபவர்கள், பார்டரின் நிறத்திற்கு ஏற்ப புடவையில் ஸ்டோன் வேலைப்பாடுகள் செய்து கொள்ளலாம்.

சிலர், இரண்டு நிற புடவைகளை வாங்கி, அதை சரிபாதியாகக் கத்தரித்து, ஒரு நிறத்தோடு மற்றொரு நிற புடவையைத் தைப்பார்கள். இதற்கு செலவு அதிகம் ஆகும் என்பதால், விரும்புகிற நிறத்தில் துணிகளைத் தலா 3 மீட்டர் துணி வாங்கி அதை ஒன்றிணைத்தால், டபுள் கலர் புடவை ரெடி. சாதாரணமான துணி வகைகள், ஒரு மீட்டர் குறைந்தபட்சம் 40 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 75 ரூபாய் வரைதான் இருக்கும். பிசினஸாக பண்ண விரும்புறவங்க, மொத்தமாகத் துணி வாங்கினால் இன்னும் குறைந்த விலைக்குக் கிடைக்கும். எந்தத் துணி வாங்கினாலும் 25 மீட்டருக்கு மேல் வாங்காதீர்கள். டிரெண்டு எப்போது வேண்டுமானாலும் மாறலாம். இப்படித்தான் நான் பிசினஸ் உமனாக மாறினேன்'' என்றவர், தன் பிசினஸ் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

"ஆரம்பத்தில் நான் உருவாக்கிய புடவைகளை என் நண்பர்கள், சொந்தக்காரர்களுக்கு விற்க ஆரம்பிச்சேன். சிலர், டிசைனை எனக்கு சொல்லி அதை வடிவமைச்சுத் தர சொல்லுவாங்க. அப்படி செய்றப்ப, ஒரு புடவைக்கு குறைந்தபட்சம் 300 ரூபாய் வரை லாபம் கிடைச்சது. வேலைப்பாடுகள் அதிகம் இருந்தா 1500 ரூபாய் வரை லாபம் பார்க்க ஆரம்பிச்சேன். நான் வடிவைமைச்ச புடவையோட நேர்த்தி பிடிச்சவங்க, வாய்வழி பிரசாரம் பண்ண ஆரம்பிச்சாங்க.

இப்போ கவிதா,சுஜிதா,ஹேமா உட்பட இன்னும் சில சீரியல் செலிபிரிட்டிகளுக்கு புடவைகளை டிசைன் செய்து கொடுக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. அடிக்கடி மார்க்கெட் அப்டேட் என்னங்கிறதை அப்டேட் பண்ணிட்டே இருப்பேன்.

விளையாட்டாக ஆரம்பிச்ச என்னுடைய பிசினஸ் மூலம், இப்போ மாதம் 40,000 வரை சம்பாதிக்கிறேன்.பண்டிகை சமயங்களில் லாபம் இன்னும் அதிகமாக இருக்கும். அடுத்தபடியாக வெஸ்டர்ன் உடைகள் தைக்கவும் ஆரம்பிச்சிருக்கேன். நம்மளோட திறமை எதில் இருக்கோ அதில் தீவிரமாக இறங்கினால் வெற்றி நிச்சயம்" என்கிறார் நான்சி.