Published:Updated:

உழைப்பைச் சுரண்டிய தொண்டு நிறுவனங்கள்; சுயமாக களத்தில் இறங்கிய பழங்குடியினப் பெண்கள்!

சுரண்டலுக்கு எதிராக களமிறங்கிய பழங்குடி பெண்கள்
News
சுரண்டலுக்கு எதிராக களமிறங்கிய பழங்குடி பெண்கள்

``காட்டுல அலைஞ்சி பொருளை கொண்டு வருவோம். சாராயம் குடிக்கு ஆம்பளைங்கள அடிமையாக்கி 1,000 ரூபாய் மதிப்புள்ள தேனை 200 ரூபாய்க்கு கூட ஏமாத்தி வாங்கிட்டு போயிடுவாங்க‌. அதுல ஆர்கானிக் அது இதுன்னு லேபிள் ஒட்டி பல மடங்கு லாபம் வச்சி வித்து சம்பாரிக்கிறாங்க. எங்களுக்கு ஒன்னுமே இல்லை‌."

மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர, பனியர், காட்டு நாயக்கர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடியின மக்களும் தங்களுக்கே உரித்தான பாரம்பர்ய உணவு, உடை, மொழி, வழிபாடு நடனம், பாடல் போன்றவற்றை பன்னெடுங்காலமாக பின்பற்றி வருகின்றனர்.

சுரண்டலுக்கு எதிராக களமிறங்கிய பழங்குடி பெண்கள்
சுரண்டலுக்கு எதிராக களமிறங்கிய பழங்குடி பெண்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீலகிரியின் மக்கள் தொகையை ஒப்படுகையில், பழங்குடி மக்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருக்கிறது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி, அடிப்படை வசதிகள் கூட சென்று சேராத பல பழங்குடியின கிராமங்கள் இன்றளவும் இருப்பது வேதனையான உண்மை. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை வகுத்தும் அவை இந்த மக்களுக்கு முறையாக சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.

`மைனர் ஃபாரஸ்ட் புரொடியூஸ்' எனப்படும் சிறு வன சேகரிப்பு பொருள்களை காட்டிலிருந்து சேகரித்து, விற்பனை செய்துகொள்ள பழங்குடிகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அப்படி அவர்கள் சேகரிக்கும் விலை உயர்ந்த வன சேகரிப்பு பொருள்களை சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மலிவான விலைக்கு கொள்முதல் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பழங்குடியின செயற்பாட்டாளர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

சுரண்டலுக்கு எதிராக களமிறங்கிய பழங்குடி பெண்கள்
சுரண்டலுக்கு எதிராக களமிறங்கிய பழங்குடி பெண்கள்

சில தனியார் தொண்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிராக பழங்குடியின மக்களே தற்போது நேரடி விற்பனையில் இறங்கி உள்ளனர். இதன் ஒரு முன் முயற்சியாக பந்தலூர் அருகில் இருக்கும் கொட்டயமேடு, அச்சன்மூலா பழங்குடியின பெண்கள் சிலர் குழுவாக இணைந்து வன சேகரிப்பு பொருள் விற்பனை நிலையம் ஒன்றை துவக்கியுள்ளனர். பழங்குடி பெண்களின் இந்த நம்பிக்கை முயற்சியை கூடலூர் வருவாய் கோட்டாசியர் மற்றும் பந்தலூர் வட்டாட்சியர் ஆகியோர் துவக்கி வைத்து பாராட்டினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த முன்னெடுப்பு குறித்து நம்மிடம் பேசிய பழங்குடி பெண் சுஜாதா, ``காட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் தேன், காட்டு குறுமிளகு, மர மஞ்சள், மரப்பாசி, சாம்பிராணி, நெல்லிக்காய், காட்டு கிழங்கு மற்றும் மூலிகைகளை ஆண்கள் பெண்களாக காட்டிலிருந்து சேகரித்து வருகிறோம். கடினமான உழைப்பை கொடுத்து சேகரித்தும் இவற்றை விற்பனை செய்ய போதிய வசதிகள் இல்லாததால், குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதை சரி செய்ய `நெலாக்கோட்டை காட்டு நாயக்கன் பழங்குடியின பெண்கள் சுய உதவிக் குழு' என்ற பெயரில் நாங்களாகவே குழு ஒன்றை ஆரம்பித்தோம். வன சேகரிப்பு பொருள்களை உரிய விலையில் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய இருக்கிறோம். முதலில் 80 கிலோ தேனை முதலீடாக வைத்து தொழிலை தொடங்கியிருக்கிறோம். மக்கள் ஆதரவு கொடுத்தால் இதை மேலும் பல பெண்களின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்துவோம்" என்றார் நம்பிக்கையுடன்.

சுரண்டலுக்கு எதிராக களமிறங்கிய பழங்குடி பெண்கள்
சுரண்டலுக்கு எதிராக களமிறங்கிய பழங்குடி பெண்கள்

சில தனியார் தொண்டு நிறுவனங்களின் சுரண்டல் குறித்து பேசிய மற்றொரு பழங்குடி பெண், ``நாங்களும் எங்க வீட்டு ஆம்பளைகளும் வாரக்கணக்குல காட்டுல அலைஞ்சி திரிஞ்சி பொருளை கொண்டு வருவோம். சாராயம் குடிக்கு ஆம்பளைங்கள அடிமையாக்கி 1,000 ரூபாய் மதிப்புள்ள தேனை 200 ரூபாய்க்கு கூட ஏமாத்தி வாங்கிட்டு போயிடுவாங்க‌. அதுல ஆர்கானிக் அது இதுன்னு லேபிள் ஒட்டி பல மடங்கு லாபம் வச்சி வித்து சம்பாரிக்கிறாங்க. எங்களுக்கு ஒன்னுமே இல்லை‌. சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பும் நீலகிரி பண்டைய பழங்குடிகள் பாதுகாப்பு அமைப்பும் உதவி பண்ணி இந்த மையத்தை தொடங்க உதவி செஞ்சிருக்காங்க. இதுக்கு அப்புறம் எங்க நிலைமை மாறும்னு நம்புறோம். இதுக்கு அரசாங்கமும் உதவி செஞ்சா நல்லா இருக்கும்" என்றார்.