Published:Updated:

`ஆம் என் கழுத்து வளைந்திருக்கிறது. உங்கள் தனித்துவம் என்ன?’ - இளம் சி.இ.ஓ ராதிகா குப்தா

இளம் சி.இ.ஓ ராதிகா குப்தா ( Instagram )

பிரசவத்தின்போது தாய்க்கு ஏற்பட்ட சிக்கலால் பிறவியிலேயே கழுத்து வளைந்த நிலையில், மாறுகண் பிரச்னையுடன் பிறந்தார் ராதிகா. தனது வளைந்த கழுத்துக்காக கேலிக்கு உள்ளாக்கப்பட்டதிலிருந்து, நாட்டின் இளைய தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக வளர்ச்சி அடைந்தது வரை பகிர்ந்திருக்கிறார் அவர்.

`ஆம் என் கழுத்து வளைந்திருக்கிறது. உங்கள் தனித்துவம் என்ன?’ - இளம் சி.இ.ஓ ராதிகா குப்தா

பிரசவத்தின்போது தாய்க்கு ஏற்பட்ட சிக்கலால் பிறவியிலேயே கழுத்து வளைந்த நிலையில், மாறுகண் பிரச்னையுடன் பிறந்தார் ராதிகா. தனது வளைந்த கழுத்துக்காக கேலிக்கு உள்ளாக்கப்பட்டதிலிருந்து, நாட்டின் இளைய தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக வளர்ச்சி அடைந்தது வரை பகிர்ந்திருக்கிறார் அவர்.

Published:Updated:
இளம் சி.இ.ஓ ராதிகா குப்தா ( Instagram )

இந்தியாவின் இளம் சி.இ.ஓக்களில் ஒருவரான, மும்பையை சேர்ந்த ராதிகா குப்தா, தன் தன்னம்பிக்கைக் கதையை சமூகவலைதளத்தில் சமீபத்தில் பதிவு செய்தார். ராதிகா குப்தா, தனது வளைந்த கழுத்துக்காக கேலிக்கு உள்ளாக்கப்பட்டதிலிருந்து, நாட்டின் இளைய தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக வளர்ச்சி அடைந்தது வரை அவர் பகிர்ந்திருக்கும் அவரது பாதை, பலருக்கும் உத்வேகமளிக்கும் வளர்ச்சிப் பயணம்.

Radhika Gupta
Radhika Gupta
Instagram

பிரசவத்தின்போது தாய்க்கு ஏற்பட்ட சிக்கலால் பிறவியிலேயே கழுத்து வளைந்த நிலையிலும், மாறுகண் பிரச்னையுடனும் பிறந்த ராதிகாவின் அப்பா வெளிநாடுகளுக்கான இந்தியாவின் தூதர். பாகிஸ்தான், அமெரிக்கா, டெல்லி என அடிக்கடி இடம் மாறிக்கொண்டிருக்க வேண்டிய சூழல். ’நான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியாற்றிய என் அம்மாவின் தோற்றத்தை என்னுடன் ஒப்பிட்டு கேலி செய்தனர். அம்மா மிகவும் அழகாக இருப்பார். அவருடன் ஒப்பிட்டு நான் அசிங்கமாக இருப்பதாகப் பலரும் கிண்டல் செய்தனர். அது என் தன்னம்பிக்கையைப் பெரிதும் குறைத்தது’ என்கிறார் ராதிகா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனது 22-வது வயதில் ஏழாவது முறையாக ஒரு நேர்காணலில் தோல்வி அடைந்த பின்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ராதிகா. நண்பர் ஒருவர் அதனைத் தடுத்து பின் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். மனச்சோர்வுக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதற்கு பிறகு, வேறு ஒரு நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்றவருக்கு வேலை கிடைத்தது.

கணவர் நலின் மோனிஸுடன் ராதிகா
கணவர் நலின் மோனிஸுடன் ராதிகா
Instagram

தனது 25-ஆவது வயதில், ராதிகா தன் கணவர், மற்றும் ஒரு நண்பருடன் இணைந்து சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றை தொடங்கினார். பின்னாளில் ’ஈடல்வைஸ்’ என்ற நிறுவனம் ராதிகாவின் நிறுவனத்தை வாங்கிக்கொண்டது. இவரின் கணவர் ஊக்கமளிக்கவே, ’ஈடல்வைஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்தார் ராதிகா.

"நீதான் அந்தப் பொறுப்புக்குச் சரியான நபர்" என கணவர் அளித்த ஊக்கத்தின் பேரில், நிறுவனத்தின் பாஸிடம் சென்று பேசியிருக்கிறார் ராதிகா. ’’சி.இ.ஓ பதவிக்கு என்னைப் பரிசீலியுங்கள். எனக்கு குறைவான அனுபவம்தான். ஆனால் அதனை என் கடின உழைப்பின் மூலம் ஈடுசெய்வேன் என்று கூறினேன். சில மாதங்களுக்குப் பிறகு என் 33-வது வயதில் அந்தப் பதவியில் அமர்ந்தேன்’’ என்கிறார்.

ராதிகா குப்தா
ராதிகா குப்தா
Instagram

ராதிகா 'லிமிட்லெஸ்' என்று தனது வாழ்க்கையை மையப்படுத்தி புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். தனது வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வெற்றியாக இவர் கருதுவது ஒன்றுதான் இதுதான்: “என்னை நானே ஏற்றுக்கொள்ள (self acceptance) பலநாள் ஆனது. நான் அழகு என இப்போது நம்புகிறேன். இப்போதெல்லாம் என் தோற்றம் குறித்து யாரேனும் கிண்டல் செய்தால், ஆமாம் என் கழுத்து ஒரு பக்கம் வளைந்திருக்கிறது, என் கண்கள் இப்படித்தான் இருக்கும், உங்களிடம் தனித்துவமாக என்ன இருக்கிறது எனக் கேட்கிறேன்!”

கெத்தாக சொல்கிறார் ராதிகா!