Published:Updated:

ஆன்லைனில் ஆபரணங்கள் விற்பனை... அசத்தும் சேலம் சகோதரிகள்

ஆர்த்தி, அபிராமி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்த்தி, அபிராமி

பெண்களுக்கு எப்போதும் வித்தியாசமான நகைகள் அணியறதுல ஆசை இருக்கும்

ஆன்லைனில் ஆபரணங்கள் விற்பனை... அசத்தும் சேலம் சகோதரிகள்

பெண்களுக்கு எப்போதும் வித்தியாசமான நகைகள் அணியறதுல ஆசை இருக்கும்

Published:Updated:
ஆர்த்தி, அபிராமி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்த்தி, அபிராமி

ஆன்லைனில் உணவு ஆர்டர் பண்ணியிருப் போம், டிக்கெட் புக் பண்ணியிருப்போம். உடைகள் முதல் உடைமைகள்வரை சகலத்தை யும் வாங்கியிருப்போம். தங்க, வைர நகைகள் வாங்கியிருப்போமா?

‘அதெப்படி.... நகைகளை எப்படி ஆன் லைன்ல வாங்குறது?’ என்று கேட்பவர்களுக்கு சேலத்தைச் சேர்ந்த சகோதரிகள் அபிராமி, ஆர்த்தியிடம் பதில் இருக்கிறது. யெஸ்... இவர்கள் இருவரும் yeloo.in என்ற பெயரில் ஆன்லைனில் தங்க, வெள்ளி மற்றும் வைர நகைகளை விற்பனை செய்துவருகிறார்கள், உள்ளூரில் மட்டுமல்ல, உலக அளவில்.

“எங்களுக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூர். ரெண்டு பேருமே எம்.பி.ஏ படிச்சிருக்கோம். எங்க அப்பா பழைய நகை வியாபாரம் பண்றார். நாங்க மூணு பொண்ணுங்க. பசங்க இல்லையேங்கிற அப்பாவோட வருத்தத்தைப் போக்கணும்னுதான் நாங்க ரெண்டு பேரும் பிசினஸ்ல இறங்கினோம்...’’ என்று ஆரம்பிக் கிறார்கள் சகோதரிகள் அபிராமியும் ஆர்த்தியும்.

‘`பெண்களுக்கு எப்போதும் வித்தியாசமான நகைகள் அணியறதுல ஆசை இருக்கும். இப்பல்லாம் ஒவ்வொரு கடையா போய் டிசைன் தேடுறதுக்கு முன்னாடி ஆன்லைன்ல எந்த டிசைன் நல்லா இருக்குன்னு பார்க்க றோம். நாம வாங்க நினைக்கிற கடையில அதே டிசைன் இருக்கா இல்லைன்னா அதே மாதிரி செய்துதர முடியுமான்னு கேப்போம். ஆனா ஆன்லைன்ல நாம பார்க்குற அந்த நகையை ஆன்லைன்லயே வாங்க மாட் டோம்.... காரணம், ஏமாத்திடுவாங்களோ, ஏமாந்துடுவோமோங்கிற பயம். இப்படி ஆன் லைன் நகை விற்பனைக்கும் வாடிக்கையாளர் களுக்குமான இடைவெளியை நம்பிக்கை மூலமா குறைக்கணும்ங்கிற ஆசையில வெறும் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டுல தொடங்கியது தான் இந்த பிசினஸ்’’ என உற்சாகமாகச் சொல்கிறார் அபிராமி.

“நகைக்கடைகளோட ஹால்மார்க் சர்ட்டி ஃபைடு வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை நாங்க எங்க வெப்சைட் மற்றும் ஃபேஸ்புக் மூலமா மக்களுக்குக் கொண்டு சேர்க்குறோம். எங்க நிறுவனத்தை `இ-காமர்ஸ் வெப்சைட் அல்லது அக்ரிகேட்டர்ஸ்'னு சொல்லலாம். 2020 ஆகஸ்ட் மாசம், லாக் டௌன்லதான் எங்க பிசினஸை தொடங்கு னோம். லாக்டௌன்ல வீட்டைவிட்டு வெளியேவர முடியாத நிலையில மக்களுக்கு இந்த பிசினஸ் மாடல் பெரிய அளவுல உபயோகமா இருந்துச்சு. இதுவரைக்கும் 800 டெலிவரிகள் செஞ்சிருக்கோம். ஐடியா எல்லாமே அக்கா அபிராமியோடதுதான்” என ஆர்த்தி சொல்ல, ‘`ஆனா இந்த ஐடியாவை முழுசா செயல்படுத்தினது ஆர்த்திதான்” என்று விட்டுக்கொடுக்காமல் சொல்கிறார் அபிராமி.

நகைகளைக் காப்பீடு செய்திருப்பதால் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வழியில் சேதம் அடைந்தாலோ அல்லது தொலைந்துபோனாலோ, அது வாடிக்கை யாளர்கள் மற்றும் வியாபாரிகள் இருவரையுமே பாதிப்பதில்லை என்கிறார்கள். எடை சரியாக இல்லை என்பது போன்ற நியாயமான காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் நகை களை ரிட்டர்ன் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள விரும்பினால் செய்து கொடுக் கிறார்கள். நகைக்கடைகளுடனான அவர் களின் டைஅப் பற்றியும் விளக்குகிறார்கள் சகோதரிகள்.

``நகைக்கடைகள் எங்க நிறுவனத்தோட டைஅப் பண்றதுக்கு சில விதிமுறைகள் வச்சிருக்கோம். கடைகளோட ஹால்மார்க் சான்றிதழ், ஜி.எஸ்.டி பதிவு, கடைகளோட பாரம்பர்யம் இப்படி இன்னும் பல விஷயங் களை பத்தியெல்லாம் விசாரிச்சிட்டுதான் டைஅப் பண்றோம். இப்போதைக்கு இந்திய அளவுல 18 நகைக்கடைகளோட டைஅப்ல இருக்கோம்” என்கிறார்கள்.

ஆர்த்தி, அபிராமி
ஆர்த்தி, அபிராமி

“சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந் திருக்கு. வெளிநாட்டுல வாழற இந்திய பெற்றோர் அவங்க குழந்தைக்கான முதல் கம்மல் ஆர்டர் பண்ணியிருந்தாங்க. அதை அந்தக் குழந்தைக்கு போட்டுவிட்ட மகிழ்ச்சியை போட்டோஸ், வீடியோஸ் வழியா எங்களுக்குப் பகிர்ந்திருந்தாங்க. தென் கொரியாவுல இருந்த ஜோடிக்குக் கல்யாணம். கோவிட் கட்டுப்பாடுகளால அவங்களால இந்தியாவுக்கு வர முடியல, இந்தியாவுல இருக்கிற அவங்க பெற்றோர், உறவினர்களால அங்கேயும் போக முடியல. தாலியோ இந்தியாவுல இருந்தது. அதை மணமக்கள் கிட்ட சேர்க்க என்னென்னவோ முயற்சிகள் செய்தும், எதுவும் சரியா வரலையாம். அந்த நிலையில எங்களை பத்தி கேள்விப்பட்டு வந்தாங்க. நாங்க பொறுப்பெடுத்துக்கிட்டு தாலியை வெற்றிகரமா தென்கொரியாவுல இருந்த பொண்ணு மாப்பிள்ளைகிட்ட கொண்டு சேர்த்தோம். கல்யாணம் நல்லபடியா நடந்தது. சந்தோஷத்துல அவங்க வாழ்த்தின போது நிறைவா இருந்தது’’ என்கிறார் அபிராமி.

‘`ஆன்லைன் டெலிவரின்னதும் பலரும் சின்ன நகைகளைத்தான் வாங்க முடியும்னு நினைக்கிறாங்க. அப்படியில்லை... ஆரம், ஒட்டியாணம்னு பெரிய ஆர்டர்களும் வருது. சமீபத்துல அமெரிக்காவுக்கு 48 லட்ச ரூபாய் மதிப்புள்ள நெக்லஸ் அனுப்பி வெச்சோம். கேட்லாக்ல உள்ள மாடல்கள்ல மட்டும் இல் லாம கஸ்டமைஸ்டு ஆர்டர்ஸையும் நகைக் கடைகள்ல பேசி பண்ணிக் கொடுக்கறோம்.

ஆன்லைனில் ஆபரணங்கள் விற்பனை... அசத்தும் சேலம் சகோதரிகள்

இது தவிர விருப்பப்படுறவங்களோட முக வடிவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள், தாய்ப்பால் நகைகள், குழந்தையோட முதல் பல், முடி, தொப்புள்கொடியெல்லாம் வெச்சு செய்யற நகைகளும் பண்ணிக்கொடுக்கறோம். இந்த ரெண்டு வருஷங்கள்ல நாங்க சம்பாதிச்ச லாபத்தைவிட, வாடிக்கையாளர்களோட நம்பிக்கையையும் அவங்களுடனான உறவை யும்தான் பெரிசா பார்க்கறோம்” என்று நிறைவுடன் முடிக்கிறார் ஆர்த்தி.