Published:Updated:

கைமணத்தையே காசாக்கலாம்! - பிரியா கண்ணன்

பிரியா கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
பிரியா கண்ணன்

வழிகாட்டி

கைமணத்தையே காசாக்கலாம்! - பிரியா கண்ணன்

வழிகாட்டி

Published:Updated:
பிரியா கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
பிரியா கண்ணன்

னக்குத் தெரிந்த சமையற் கலையை பிசினஸாக மாற்றத் தெரிந்த பெண்கள் இன்றைக்கு ஏராளம். குடும்பத்தலைவி பிரியா கண்ணனும் அவர்களில் ஒருவர். தனக்குத் தெரிந்த பாரம்பர்ய ஊறுகாய் மற்றும் பொடி வகைகளை விற்பனைக்கு அனுப்பி, இன்று அந்தத் தொழிலில் முன்னேறிக்கொண்டிருப்பதை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

``என் கணவர் ஐ.பி.எஸ். ஆஃபீசர். ஆனாலும், எனக்கென்று ஓர் அடையாளம் வேண்டுமென்று நினைத்தேன். எனக்கு நூறு சதவிகிதம் தெரிந்த சமையலைக் கையிலெடுத்தேன். என் பாட்டியும் அம்மாவும் ஸ்பெஷலாக செய்கிற ஊறுகாய் மற்றும் பொடி வகைகளை பிசினஸாகச் செய்ய முடிவெடுத்தேன்.

என்னுடைய பொடி வகைகளை ருசித்துப் பார்த்த ஆன்ட்டி, `இதைக் கடைகளில் விற்பனைக்கு வைக்கலாமே' என்று ஐடியா கொடுத்தார். முதன்முதலாக என் பொடி வகைகளை சென்னை, மயிலாப்பூரில் ஒரு கிஃப்ட் ஷாப்பில் விற்பனைக்கு வைத்தேன். அந்தக் கடையின் முதலாளி எனக்குத் தெரிந்தவர்.

கைமணத்தையே காசாக்கலாம்! - பிரியா கண்ணன்

`என் கடைக்கும் மசாலா பொடிக்கும் சம்பந்தமே இல்லீங்க. ஆனா, உங்களுக்காக வெக்கிறேன். விக்கலைன்னா திருப்பிக் கொடுத்திடுவேன்' என்ற கண்டிஷனோடு சம்மதித்தார். ஒருவாரம் கழித்து, `உங்களோட பொடி வகைகள் எல்லாம் வித்துடுச்சு. இன்னும் கொடுக்கிறீங்களா' என்று கேட்டார். ரெகுலராக கொடுக்க ஆரம்பித்தேன். அப்படியே வேறு கடைகளுக்கும் விற்பனை செய்ய ஆரம்பித்தேன்'' என்கிற பிரியா கண்ணன், இதுவரை வத்தக்குழம்பு மிக்ஸ், மிளகுக்குழம்பு மிக்ஸ், புளியோதரை மிக்ஸ், இட்லிப்பொடி, எள்ளுப்பொடி, பூண்டுப்பொடி, சாம்பார் பொடி, பருப்புப்பொடி, புளி இஞ்சி ஊறுகாய், பூண்டு ஊறுகாய், பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் மற்றும் சின்ன வெங்காய ஊறுகாய் ஆகியவற்றை வீட்டுச் சுவையில் தயாரித்து மார்க்கெட்டிங் செய்துகொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``என் ஊறுகாய்களுக்கும் பொடி வகை களுக்கும் இதுவரை நான் எந்த விளம்பரமும் செய்ததில்லை. உபயோகித்தவர்கள் மீண்டும் மீண்டும் தேடி வருவதுதான் என் தயாரிப்பு களுக்கான விளம்பரம். ஆனால், இதற்காக நான் நிறைய மெனக்கெட்டேன். பொடி வகை களுக்கான ஆர்டர் வர வர ஃபிரெஷ்ஷாக தயாரித்துத் தருவேன்.

நிறைய பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் ஊறுகாய்களில் உப்பைக் குறைத்து, செக்கு நல்லெண் ணெய்யை தாராளமாகவிட்டுத் தயாரித்தேன்.

வெங்காயம், பூண்டு போன்றவற்றை விவசாயி களிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதால் விலையை அடிக்கடி ஏற்றுவதில்லை.

உணவுப் பொருள்களை மார்க்கெட்டிங் செய்யும்போது அவற்றின் தரமும் ருசியும் பெஸ்ட்டாக இருந்தால் மட்டும் போதாது. பேக்கிங்கும் பார்ப்பதற்கு அழகாக, சுத்தமாக இருக்க வேண்டும். இதற்காக பேக்கிங் கோர்ஸ் ஒன்றை முடித்தேன்’’ என்கிற பிரியா, அமேசான், நீல்கிரீஸ் போன்ற தளங்களிலும் பிசினஸ் செய்கிறார்.

‘`இந்த பிசினஸில் ஆரம்பத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தேன். அதன்பிறகு சிறுக சிறுக மீண்டுமொரு லட்சம் செலவழித்தேன். இந்த நான்கு வருடங்களில் 10 பேருக்கு சம்பளம் கொடுப்பதுபோக, கையில் மாதத்துக்கு 40,000 ரூபாய் நிற்கிறது. இது ஆரம்ப நிலைதான் என்பதால், லாபத்தை நான் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், மார்க்கெட்டில் நல்ல பெயரை சம்பாதித்து விட்டேன். பெரிய அளவில் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்னைப்போல நீங்களும் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டுமென்றால், உங்கள் தொழிலுக்கான மூலப்பொருள்களை தரமாக, விலைகுறைவாக எங்கு வாங்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். அழகான பேக்கிங்கும் உங்கள் பிராண்டுக்கான ஸ்டிக்கரும் மிக அவசியம்.

fssai-யில் சாம்பிள் கொடுத்து, பரிசோதனை செய்து, லைசென்ஸ் வாங்க வேண்டும். இன்டர்நேஷனல் பார் கோடுக்கு வருடத்துக்கு 25,000 ரூபாய் கட்டி சப்ஸ்கிரைப் செய்து கொண்டால் உங்கள் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கும் அனுப்பலாம்''

- தம்ஸ்அப் காட்டுகிற பிரியா கண்ணனுக்கு வாழ்த்துகளைச் சொன்னோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism