Published:Updated:

மண்புழு உரம் தயாரிப்பில் மாதம் ₹60,000 லாபம் ஈட்டும் ரம்யா... நீங்களும் கலக்கலாம்... எப்படி?

ரம்யா
ரம்யா

"மாசத்துக்கு 25 டன் மண்புழு உரம் விற்பனை செய்றேன். கிராமப் பெண்கள் எட்டு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறேன்."

"தொழுவத்துல கொட்டும் சாணம்தானே'ன்னு நானும் ஆரம்பத்துல மாட்டுச் சாணத்தைக் குறைவா எடை போட்டேன். ஆனா, அது அள்ள அள்ள வருமானம் தரும் அட்சயப் பாத்திரம்னு அனுபவபூர்வமாதான் தெரிஞ்சுகிட்டேன். எங்ககிட்ட மாடு இல்லை. ஆனா, மண்புழு உரம் தயாரிக்க ஆர்வமும் அனுபவமும் இருந்தா போதும்னு உணர்ந்து, சாணத்தை விலைக்கு வாங்கி மண்புழு உற்பத்தி பண்றேன்."

மண்புழு உரம் தயாரிப்பில் வெற்றி பெற்றுள்ள ரம்யாவின் அனுபவ வார்த்தைகள் இவை.

ரம்யா
ரம்யா

திருப்பத்தூர் மாவட்டம் சொக்கலாம்பட்டி கிராமத்தில் வசிப்பவர், வீட்டில் இருந்தபடியே மண்புழு உரம் தயாரிப்பில் அசத்திக்கொண்டிருக்கிறார்.

"இயற்கை விவசாயம் மேற்கொள்ள நிறைய விவசாயிகளுக்கு ஆர்வம் இருக்கும். ஆனா, சாணம் உள்ளிட்ட இடுபொருள்கள் இல்லாததும், நேரப் பற்றாக்குறையும் பலருக்கும் தடையா அமையும். அதனாலயே பலரும் ரசாயன உரப் பயன்பாடுகளை அதிகப்படுத்தறாங்க. இந்தச் சூழலை இயன்ற அளவுக்கு மாத்தணும்னு நினைச்சு, மண்புழு உரம் தயாரிப்பில் இறங்கினேன்.

60,000 ரூபாய் முதலீட்டுல, சின்ன அளவுலதான் உற்பத்திக்கூடத்தை ஆரம்பிச்சேன். படிப்படியா விரிவுபடுத்தி, இன்னிக்கு 1,800 சதுர அடியில தலா 48 தொட்டிகளுடன்கூடிய மூணு உற்பத்திக்கூடங்களை வெச்சிருக்கேன். மாசத்துக்கு 25 டன் மண்புழு உரம் விற்பனை செய்றேன். கிராமப் பெண்கள் எட்டுப் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கறேன். தொய்வின்றி மண்புழு உரம் உற்பத்தி நடக்குது.

மண்புழுத் தொட்டியில் சரியான கால அளவுல சாணத்தை நிரப்பணும். தொட்டியில் இருக்கும் மண்புழுக்கள் சாணத்தைச் சாப்பிட்டு வெளியேற்றும் கழிவுதான் ஊட்டமேற்றிய உரம். இதை உலர்த்தி சலிச்சு, ஆர்டரைப் பொறுத்து விற்பனை செய்யலாம். இயற்கை விவசாயிகள் தவிர, வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் வெச்சிருக்கிற எல்லோருக்கும் மண்புழு உரம் உதவும். எனவே, விற்பனை வாய்ப்புக்குப் பிரச்னையே இருக்காது.

ரம்யா - Ramya
ரம்யா - Ramya

அதிக வெப்பமும் குளிரும் இல்லாத சூழல்லதான் மண்புழுக்கள் நல்லா வளரும். சரியான வழிமுறைகளுடன் மண்புழுத் தொட்டிகளைப் பராமரிச்சா, மாதம்தோறும் மண்புழு உரத்தை அள்ளி சிறப்பான முறையில் வருமானம் ஈட்டலாம்" என்று நம்பிக்கையூட்டும் ரம்யா, மண்புழு உரம் தயாரிப்பில் மாதம் 60,000 ரூபாய் லாபம் ஈட்டுகிறார்!

ரம்யாவைப் போலவே, மண்புழு உரம் தயாரிப்பில் வெற்றி பெற நீங்களும் விரும்புகிறீர்களா?

அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்கும் 'மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி'யில் கலந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டுத் தோட்டத்துக்கான மண்புழு உரத்தை குறைந்த செலவில், தரமான முறையில் தயாரிக்கும் வழிமுறைகள், மண்புழு உரத்துக்கான வரவேற்பு மற்றும் பயன்பாடு, விற்பனை வாய்ப்புகள் உள்ளிட்ட பயனுள்ள ஆலோசனைகள் குறித்து ரம்யா வழிகாட்ட இருக்கிறார்.

பயிற்சி வகுப்புக்கான அறிவிப்பு...
பயிற்சி வகுப்புக்கான அறிவிப்பு...

டிசம்பர் 19-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 3 முதல் 5 மணிவரை பயிற்சி நடைபெறும்.

பயிற்சிக்கான கட்டணம் ரூ.100. ஆன்லைனில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யவும். https://bit.ly/3mcyjTE

அடுத்த கட்டுரைக்கு