Published:Updated:

அன்று ரூ.5 லட்சம் முதலீடு, இன்று ரூ.15 கோடி டர்ன் ஓவர்... 'ஃப்ளை ஆஷ்' தொழிலில் சாதிக்கும் நஜ்முனிஷா!

நஜ்முனிஷா
நஜ்முனிஷா

எதிர்காலத்தில் கட்டுமானத் துறையில் ஃப்ளை ஆஷ் கற்களின் பயன்பாடு தவிர்க்க இயலாததாக மாறும்னு உணர்ந்தேன். ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கிற தொழிற்கூடங்களுக்குச் சென்று தொழில் வாய்ப்புகளைத் தெரிஞ்சுக்கிட்டேன்.

பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர் இது. இந்த இதழில், சென்னை 'பிஸ்மில்லா டிரேடர்ஸ்' நிறுவன உரிமையாளர் நஜ்முனிஷா.

தெளிவான திட்டமிடலுடன், மாற்றி யோசித்தால் வெற்றி உறுதி. அதற்கு உதாரணம், நஜ்முனிஷா!

எதிர்கால வரவேற்பை முன்கூட்டியே கணித்து, 'நிலக்கரிச் சாம்பல்' தொழிலில் களமிறங்கியவர். தடைகளைச் சாமர்த்தியமாக கடந்து இன்று இந்தத் தொழிலில் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

வடசென்னையிலுள்ள இரண்டு அனல்மின் நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையம் ஆகியவற்றிலிருந்து பல ஆண்டு களாக டெண்டர் முறையில் ஃப்ளை ஆஷ் எடுக்கிறார். ராம்கோ, அல்ட்ரா டெக், டால்மியா, ஜூவாரி, செட்டிநாடு உட்பட 15-க்கும் மேற்பட்ட சிமென்ட் நிறுவனங்கள் இவரது நிறுவன வாடிக்கையாளர்கள். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் ஃப்ளை ஆஷ் சப்ளை செய்கிறார். இவரது நிறுவனத்திலிருந்து தினமும் 1,000 டன்னுக்கும் அதிகமாக ஃப்ளை ஆஷ் சப்ளையாகிறது. 65 ஊழியர்களுக்கு முதலாளியான நஜ்முனிஷா, ஆண்டுக்கு 15 கோடி ரூபாய்க்கு மேல் டர்ன் ஓவர் ஈட்டுகிறார். இவரின் அடுத்த ஆண்டு டர்ன் ஓவர் இலக்கு 20 கோடி!

சேமிப்புப் பணம் அஞ்சு லட்சம் ரூபாயை முதலீடாக்கி பிசினஸ்ல இறங்கினேன். 'இந்தத் துறையில பெண்கள் இல்லாத நிலையில், உங்களால சரியா பிசினஸ் பண்ண முடியுமா?'னு கேட்டாங்க. நிறைய புறக்கணிப்புகளை எதிர்கொண்டேன்.

சவாலான துறையில் உற்சாகமாக நடைபோடும் இவர், தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசும்போது, ''சென்னையில் நடுத்தரக் குடும்பம். அரசுப் பள்ளியில்தான் படிச்சேன். பத்தாவது படிக்கிறப்போ அப்பா இறந்துட்டதால, குடும்பச் சூழல் சிக்கலாச்சு. அதனால, பி.காம் முதல் வருடம் முடிச்சதுமே கல்லூரியிலிருந்து நின்னுட்டேன். வங்கித் தேர்வில் வெற்றி பெற்று ஒரு வருஷம் வேலை செய்ததுடன், கரஸ்ல எம்.பி.ஏ முடிச்சேன். திருமணமானதும், இளம் வயது பிசினஸ் கனவை சாத்தியமாக்கும் முனைப்பில் இறங்கினேன். அந்தத் தருணத்துல நாங்க வீடு கட்டும்போது, ஹாலோ பிளாக் கற்களைப் பயன்படுத்தினோம். அந்தக் கற்களைத் தயாரிக்க முக்கிய மூலப்பொருள் 'ஃப்ளை ஆஷ்' எனப்படும் நிலக்கரிச் சாம்பல். இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறதாலே, செங்கல்லுக்கு மாற்றாக அதிகளவில் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. அதைப்பத்தி கூடுதலா தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/37xauym

எதிர்காலத்தில் கட்டுமானத் துறையில் ஃப்ளை ஆஷ் கற்களின் பயன்பாடு தவிர்க்க இயலாததாக மாறும்னு உணர்ந்தேன். ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கிற தொழிற்கூடங்களுக்குச் சென்று தொழில் வாய்ப்புகளைத் தெரிஞ்சுக்கிட்டேன். பிறகு, ஃப்ளை ஆஷ் கிடைக்கும் அனல்மின் நிலையங்களுக்கும் போய் நிறைய விஷயங்களைக் கத்துகிட்டேன். ‘ஃப்ளை ஆஷ் டிரேடிங்' தொழில் செய்யலாம்னு நான் முடிவெடுக்க, கணவரும் ஆதரவு கொடுத்தார். தமிழ் தவிர, எனக்கு ஆங்கிலம், இந்தி, உருது மொழிகள் தெரியும். எனவே, வெளியிடங்கள்லயும் வெளி நிறுவனங்கள்லயும் தொழில்ரீதியா பயப்படாம பேசினேன். தெரியாத விஷயங்களை ஆர்வமா தெரிஞ்சுக்கிட்டேன். இந்த அனுபவங்களால், தொழில் தொடங்குவதற்கான முழுமையான நம்பிக்கை கிடைச்சுது.

சேமிப்புப் பணம் அஞ்சு லட்சம் ரூபாயை முதலீடாக்கி பிசினஸ்ல இறங்கினேன். 'இந்தத் துறையில பெண்கள் இல்லாத நிலையில், உங்களால சரியா பிசினஸ் பண்ண முடியுமா?'னு கேட்டாங்க. நிறைய புறக்கணிப்புகளை எதிர்கொண்டேன். பல நிறுவனங்கள் ஆர்டர் கொடுக்க முன்வரலை. 'தரம் மற்றும் டெலிவரி செய்யும் நேரம் ஆகியவை சரியான முறையில் இருந்தால் மட்டும் பணம் கொடுங்க'ன்னு ரொம்பவே வலியுறுத்தியும், நம்பிக்கையை ஏற்படுத்தியும் படிப்படியா பல நிறுவனங்களிடமிருந்து ஆர்டர் எடுத்தேன். ஆன்லைன் தேடலில் அனுபவம் இருந்ததால், ஆன்லைன் டெண்டர் எடுத்தும் 2009-ம் ஆண்டு, நிலக்கரிச் சாம்பலை டிரேடிங் செய்ய ஆரம்பிச்சேன். அப்போ டெலிவரிக்கு கனரக வாகனங்களை வாடகைக்கு எடுத்துத்தான் பயன்படுத்தினேன். அதனால, லாபம் பெரிசா இல்லை.

அன்று ரூ.5 லட்சம் முதலீடு, இன்று ரூ.15 கோடி டர்ன் ஓவர்... 'ஃப்ளை ஆஷ்' தொழிலில் சாதிக்கும் நஜ்முனிஷா!

பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, வங்கிக் கடன் கிடைச்சுது. செகண்டு ஹேண்டா, தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மூணு பல்கர்ஸ் வகை டிரக் வாகனங்களை வாங்கினேன். அடுத்த ரெண்டு வருஷத்துல போட்டியாளர்கள் அதிகமாகிட்டதால, என் தொழிலில் சரியான வளர்ச்சியில்லை. மூணு டிரைவர்கள் - க்ளீனர்கள், ரெண்டு அலுவலக வேலையாட்களுக்கே சம்பளம் கொடுக்க சிரமப்பட்டேன். வாகனங்களுக்கான வங்கிக் கடன் கட்டுறதும் சிரமமாகி, நஷ்டம் அதிகமாகிட்டே இருந்துச்சு. எல்லாரும் பிசினஸை விட்டுடுன்னு சொன்னாங்க. அப்படிச் செய்திருந்தா, பிசினஸ்ல வெற்றி பெற முடியாம தோல்வியைத் தழுவினதா பேச்சு எழுந்திருக்கும். அதுக்கு இடம் கொடுக்கவே கூடாதுன்னு உறுதியா இருந்தேன்.

பிசினஸை வெற்றிகரமா கொண்டுபோக, சின்னச் சின்ன நிறுவனங்களுக்கு சப்ளை பண்றது மட்டுமே பயன் தராது; பெரிய நிறுவனங்களிலும் ஆர்டர் எடுக்கணும். அதுக்கு ஃப்ளை ஆஷ்ஷை டன் கணக்கில் வாங்கணும்னு முடிவெடுத்தேன். அதைச் சரியா செயல்படுத்துறது மட்டும்தான் அப்போதைய ஒரே சாய்ஸ். அதற்கான முன்னெடுப்புகளை முறையாகச் செய்ததால் முன்னணி சிமென்ட் நிறுவனத்தின் ஆர்டர் கிடைச்சுது. அந்த ஆர்டரை சரியான முறையில் பயன்படுத்திகிட்டதால, படிப்படியா என் நிறுவனத்தின் பெயர் பிரபலமாச்சு."

- தன் வெற்றி இலக்கு சாத்தியமானதன் பின்னணியை முழுமையாகப் பகிர்ந்திருக்கிறார் நஜ்முனிஷா. அதை அவள் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > என் பிசினஸ் கதை - 8: புறக்கணிப்புகளுக்கெல்லாம் என் வெற்றி பதில் சொல்லும்! - நஜ்முனிஷா https://www.vikatan.com/business/women/successful-business-story-of-najmunisha

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு