Published:Updated:

வெற்றிக்கொடி கட்டு: ‘இரண்டு சூட்கேஸ்... அரண்மனை நிர்வாகி... பிசினஸ்வுமன்!’

சாந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
சாந்தி

ஆச்சர்யமூட்டும் ‘ஸ்காட்லாந்து’ சாந்தியின் வெற்றிக்கதை

மிழ்ப் பெண் சாந்தி, இன்று ஸ்காட்லாந்தில் வெற்றிகரமான பிசினஸ்வுமன். ஆனால், 2003-ல் கணவர், குழந்தையுடன் அங்கு குடியேறியபோது, அவரது கைவசம் இருந்தவை இரண்டு சூட்கேஸ்களும் தளராத நம்பிக்கையும் மட்டுமே. சென்னை மாகாண ஆளுநராக இருந்த ‘ஆத்தர் ஹோப்’ பேரனின் அரண்மனை மற்றும் எஸ்டேட் நிர்வாகியாகப் பணியாற்றியது முதல் தற்போது தொழிலதிபராக உயர்ந்திருப்பதுவரை சாந்தியின் வாழ்வில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் ஆச்சர்யமானவை. ஸ்காட்லாந்திலிருந்து வீடியோகாலில் இணைந்தவரின் முகத்திலும் பேச்சிலும் உற்சாகம் ஊற்றெடுக்கிறது.

வெற்றிக்கொடி கட்டு: ‘இரண்டு சூட்கேஸ்... அரண்மனை நிர்வாகி... பிசினஸ்வுமன்!’

“ஈரோடு மாவட்டம் கந்தாம்பாளையம் கிராமம்தான் பூர்வீகம். ஏழ்மையான விவசாயக் குடும்பம். அப்போ எங்க ஊர்ல ஸ்கூல் கிடையாது. ரெண்டு மைல் தொலைவிலுள்ள நசியனூர் கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு நடந்துபோய்தான் படிச்சேன். காலேஜ் முடிக்கிறவரை வீட்டில் விவசாய வேலைகளையும் செய்தேன். தனியார் ஸ்கூல் ஆசிரியரா சில காலம் வேலை செஞ்சேன். பிறகு, காதல் திருமணம். பேப்பர் போடுறது உட்பட பல்வேறு வேலைகளைச் செய்துகிட்டிருந்த கணவர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிச்சு முன்னேறினார். அவருக்கு ஸ்காட்லாந்துல வேலை கிடைச்சது. வெற்றி பெறும் லட்சியத்தோடு இந்த நாட்டுக்கு வந்தபோது, எங்ககிட்ட சேமிப்புகூட இல்லை. கணவரின் சம்பளம் வீட்டு வாடகை, குடும்பச் செலவுகளுக்கே போயிடும். ரொம்பவே சிரமப்பட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 ஜார்ஜ் ஹோப் அவர் மனைவியுடன் சாந்தி...
ஜார்ஜ் ஹோப் அவர் மனைவியுடன் சாந்தி...

தமிழகத்துக்கே வந்திடலாம்னு நினைச்சாலும் விமானச் செலவுக்குக்கூட பணம் இல்லை. மகனுடன் தனியா வீடு பிடிச்சு, சில வருஷம் பேக்கரி வேலைக்குப் போனேன். கணவர் வேறு ஊர்ல ஹோட்டல் மேனேஜரா வேலை செய்தார். சுதந்திரத்துக்கு முன்பு ஆளுநரின் நிர்வாகத்தில் இயங்கிய சென்னை மாகாணத்தின் ஆளுநரா 1940 – 1946 வரை இருந்தவர் ஆத்தர் ஹோப். அவருடைய பேரன் ஜார்ஜ் ஹோப், இந்த நாட்டில்தான் வசிக்கிறார். அவரின் உதவியாளர் பணிக்கான தேர்வில் கலந்துகிட்டு தேர்வானேன்” - புன்னகை மாறாமல் பேசுபவர், ஜார்ஜ் ஹோப்பின் அரண்மனை குடியிருப்பிலேயே மகனுடன் குடியேறியிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வெற்றிக்கொடி கட்டு: ‘இரண்டு சூட்கேஸ்... அரண்மனை நிர்வாகி... பிசினஸ்வுமன்!’

“7,000 ஏக்கர்ல பிரமாண்டமான எஸ்டேட்டுடன் அவரது அரண்மனை இருக்கும். அதில், நூறு ஏக்கரை மட்டும் ஜார்ஜ் கவனிச்சுக்கிட்டார். மற்ற நிலங்களைக் குத்தகைக்கு விட்டிருந்தார். பணித்திறன் பிடிச்சுப்போக அந்த எஸ்டேட்டின் நிர்வாகி யாகவும் என்னை நியமிச்சார். விவசாயம் உட்பட அந்த எஸ்டேட் நிர்வாகப் பணிகள் எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டேன். அப்பா மாதிரி என்மீது அன்பு காட்டினார். பசுமையும் பரபரப்புமா அந்தப் பணிச்சூழல் சிறப்பா போச்சு.

 கணவர், மகனுடன் சாந்தி...
கணவர், மகனுடன் சாந்தி...

இதுக்கிடையே பிசினஸ் செய்யும் முனைப்புடன் கணவர் டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆரம்பிச்சார். வார இறுதியில நானும் மகனும் கணவரின் தொழிலுக்கு உதவினோம். வெற்றி பெறணும்ங்கிற வைராக்கியத்துடன் நேரம் காலம் பார்க்காம கடுமையா உழைச்சோம். ஒயின் ஸ்டோர் ஒண்ணும் நடத்தினோம். இந்த நிலையில் 2017-ல் அம்மாவும் மாமியாரும் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. அப்போ கணவருக்கும் உடல்நிலை சரியில்லாமல்போக, மன அழுத்தத்தால் வேலையில் கவனம் செலுத்த முடியாம சிரமப்பட்டேன். ஜார்ஜின் வேண்டுகோளை மறுத்து, 2018-ல் எஸ்டேட் பணியிலிருந்து விலகினேன். மிக அரிதாகக் கிடைக்கும் அந்த எஸ்டேட் வேலை, என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். பிறகு, தற்போது வசிக்கும் ஹாட்டிங்டன் நகருக்குக் குடியேறி, கணவரின் பிசினஸில் முழு கவனம் செலுத்தினேன்

வெற்றிக்கொடி கட்டு: ‘இரண்டு சூட்கேஸ்... அரண்மனை நிர்வாகி... பிசினஸ்வுமன்!’

நம்மூர்ல டீ, காபி குடிக்கிற மாதிரி இங்க ஆண், பெண் வேறுபாடில்லாம ஒயின் குடிப்பது சாதாரணமானது. இந்தத் தொழிலை வெற்றிகரமாகவும் பெண்ணாக இருந்து செய்வதும் சவாலானது. ஒயின் ஸ்டோருடன், டிபார்ட்மென்டல் ஸ்டோரையும் கவனிச்சுக்கிறேன். பையன் விக்ரம் எம்.பி.பி.எஸ் படிப்புக்காக இங்கு வேறு ஊர்ல தனியா வசிக்கிறான். கணவர், இந்தியாவில்தான் அதிகம் இருப்பார். நாம ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட நிலையில், பிறர் முன்னேற்றத்துக்கு உதவலாம்னு சொந்த ஊர்ல கவர்ன்மென்ட் ஸ்கூல் வளர்ச்சி, விவசாயப் பணி, பிளாஸ்டிக் தடை, மழைநீர் சேகரிப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துறார்” – பெருமிதத்துடன் கூறும் சாந்தி, ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோ தமிழ்ச் சங்க நிர்வாகியாகவும் இருக்கிறார்.

மனைவியின் பேச்சை ரசித்தபடி தொடர்கிறார் சிவக்குமார். “முறைப்படி தமிழ் கத்துக்கணும்னு ஆண்டுதோறும் மகனை கந்தாம்பாளையம் கிராமத்துக்கு அனுப்புவோம். அந்த ரெண்டு மாசமும் ஊரிலுள்ள கவர்ன்மென்ட் ஸ்கூலுக்குப் படிக்கப்போவான். அந்த ஸ்கூல்ல அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறைவா இருப்பது தெரிஞ்சது. ஸ்மார்ட் கிளாஸ், கணினிப் பயிற்சி, டைல்ஸ் தரை, உட்கார்ந்து படிக்க டேபிள் சேர், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை நண்பர்கள் பலரின் ஒத்துழைப்போடு ஏற்படுத்தியிருக்கோம். 10 குழந்தைகளுக்குக் குறைவாக இருந்த ஸ்கூல்ல இப்ப 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறாங்க. பின்தங்கிய சமூகக் குழந்தைகளை இந்த ஸ்கூல்ல சேர்த்துவிட்டு காலேஜ்வரை படிக்க வைக்கிறோம். மாணவர்களுக்கு இயற்கை விவசாய விழிப்புணர்வும் ஏற்படுத்துறோம். இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கு” - தன்னடக்கத்துடன் சொல்பவரை பெருமையோடு பார்க்கிறார் சாந்தி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆச்சர்யங்கள் நிறைந்த அரண்மனை!

“ஜார்ஜ் ஹோப் கவனிச்சுக்கிட்ட 100 ஏக்கர் நிலத்திலும், குத்தகைக்கு விடப்பட்டிருந்த மற்ற நிலங்கள்லயும் முதல் தரமான ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி உட்பட நிறைய பழங்களும் காய்கறிகளும் தனித்தனி பிரிவுகளாக விளைவிக்கப்படும். ஆண்டுக்குப் பல டன் ஆப்பிள் விளைச்சல் இருக்கும். தேனீ வளர்ப்பும் நடக்கும். அந்த எஸ்டேட் முழுவதும் பசுமையால் சூழ்ந்திருக்கும். பழங்கள் விற்பனை தவிர, ஜாம், ஜூஸ் தயாரிச்சும் விற்பனை செய்தோம். எஸ்டேட்டில் பல ஆயிரம் மான்கள் துள்ளித்திரியும். அவற்றை வேட்டையாடும் உரிமை ஜார்ஜுக்கு மட்டுமே உண்டு.

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தனக்குத் தெரிஞ்ச எல்லோருக்கும் கிலோ கணக்கில் மான் கறியைப் பரிசாகக் கொடுப்பார். மிக எளிமையானவர். உதவி கேட்டு யார் வந்தாலும் மறுக்காமல் உதவுவார். தன் நூலகத்தில் பல்வேறு தமிழ்ப் புத்தகங்களையும் வெச்சிருந்தார்” என்று ஆச்சர்யங்கள் கூட்டுகிறார் சாந்தி.