Published:Updated:

40 ப்ளஸ்ஸில் சேமிப்பும் முதலீடும்! - சவால்கள்... தீர்வுகள்...

40 ப்ளஸ்ஸில் சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
40 ப்ளஸ்ஸில் சேமிப்பும் முதலீடும்

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர் களென்றால், தங்கக் கடன் பத்திரத்தில் (Sovereign Gold Bond) முதலீடு செய்யலாம்.

40 ப்ளஸ்ஸில் சேமிப்பும் முதலீடும்! - சவால்கள்... தீர்வுகள்...

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர் களென்றால், தங்கக் கடன் பத்திரத்தில் (Sovereign Gold Bond) முதலீடு செய்யலாம்.

Published:Updated:
40 ப்ளஸ்ஸில் சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
40 ப்ளஸ்ஸில் சேமிப்பும் முதலீடும்

படித்து, வேலைக்குப் போனாலுமே, சேமிப்பு தொடர்பான விஷயங் களைக் கணவர் பார்த்துக்கொள்ளட் டும் என நினைக் கிறார்கள் பல பெண்கள். குறிப்பாக, 40 வயது வரை பெரிய அளவிலான சேமிப்பிலோ, முதலீடுகளிலோ ஈடுபடாத பெண்கள் பலர் இருக்கிறார்கள். முதன் முறையாக சேமிப்பு மற்றும் முதலீடுகளில் ஈடுபடும்போது நடுத்தர வயதுப் பெண்கள் சந்திக்கக்கூடிய சவால்களுக்கான தீர்வு களுடன், வழிகாட்டல்களையும் கொடுக் கிறார் நிதி ஆலோசகர் சித்ரா நாகப்பன்.

 சித்ரா நாகப்பன்
சித்ரா நாகப்பன்

சவால்கள்...

‘`இந்த வயதில் குடும்பம், குழந்தைகள் சார்ந்து நிறைய செலவுகள் இருக்கு மென்பதால், ஓரளவுக்கே சேமிக்க முடியும். ‘இவ்வளவு குறைவான பணத்தையா முதலீடு பண்றது’ என்று தயங்காமல் ஆரம்பித்து விடுங்கள்.

சேமிப்பு, முதலீடு போன்ற விஷயங்களில், ‘ஏதாவது தப்பாயிடுமோ' என்ற பயமிருந்தால், கணவரிடம், உடன் பிறந்தவர்களிடம், தேவைப்பட்டால் நிபுணர்களிடமிருந்தும் இதுதொடர்பான தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, ‘எதில் சேமிக்கலாம்’ என்ற முடிவை நீங்கள் எடுக்கலாம். முதலீட்டுக்கான தொகையை எக்காரணம் கொண்டும் மற்ற தேவைகளுக்குச் செலவழிக்கக் கூடாது. தொடர்ந்து சேமிப்பது என்பது ஓர் ஒழுக்கம். அதைக் கைவிடாதீர்கள். நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பித்த புதிதில், சரிவுகள் ஏற்படலாம். நீண்டகால முதலீட்டில் அது சரியாகிவிடும் என்பதால், பதற்றம் வேண்டாம். சேமிப்பையும் முதலீட்டையும் தொடர்ந்து 10 வருடங்கள் செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.

எவற்றில் சேமிக்கலாம் அல்லது முதலீடு செய்யலாம்?

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர் களென்றால், தங்கக் கடன் பத்திரத்தில் (Sovereign Gold Bond) முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச அளவாக, ஒரு கிராம் மதிப்புள்ள தங்கக் கடன் பத்திரத்தில் ஆரம்பித்து 5, 10, 50 மற்றும் 100 கிராம் மதிப்பிலான தங்கக் கடன் பத்திரங்கள் வரை தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கி களில் வாங்கிக்கொள்ளலாம்.

ஒரு வருடத்துக்கு இத்தனை முறை, இந்தத் தேதிகளில் ‘தங்கக் கடன் பத்திரம்’ வெளியிடப்படும் என்கிற தகவல், தபால் அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் ஒட்டப் பட்டிருக்கும். அந்த நேரங்களில் தங்கக் கடன் பத்திரங்களை வாங்கிக்கொள்ளலாம்.

தங்கக் கடன் பத்திரத்தில் எட்டு வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். முதல் ஐந்து வருடங்கள் ‘லாக் இன்’ காலம். அதன் பிறகு தேவைப்படும்போது பத்திரங் களை விற்று அன்றைய தங்க விலையை வாங்கிக்கொள்ளலாம். செய்கூலி, சேதாரம் கொடுத்து தங்க நகைகளை வாங்கிச் சேமிப்பதைவிடவும், நாணயமாக வாங்கி நகையாக மாற்றும்போது செய்கூலி, சேதாரம் கொடுப்பதைவிடவும் இது லாபம். தவிர, வருடத்துக்கு 2.5% வட்டியும் கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்டை பொறுத்தவரை, சீரான முதலீட்டுத் திட்டத்தில் (Systematic Investment Plans) முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். மாதம்தோறும் பணம் போடலாம். 1,000 ரூபாய்கூட போதும்.’’

40 ப்ளஸ்ஸில் சேமிப்பும் முதலீடும்! - சவால்கள்... தீர்வுகள்...

சிட் ஃபண்ட்

சிட் ஃபண்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் அதைப் பெண்களுக்கான சேமிப்பாகவோ, முதலீடாகவோ நான் அறிவுறுத்துவதில்லை. வைப்பு நிதிக்கு வட்டி மிகவும் குறைந்துவிட்டதால், இப்போது அதையும் அறிவுறுத்த முடியாது.

பிள்ளைகளுக்குப் பழக்கப்படுத்துங்கள்!

பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு, பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை பரிசாகக் கொடுத்து, சிறிய வயதிலிருந்தே சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தை அவர் களுக்குப் புரிய வைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism