Published:Updated:

சிங்கப் பெண்ணே: திருமணம் ஆன பிறகும் சாதிக்க முடியும்!

சிங்கப் பெண்ணே: திருமணம் ஆன பிறகும் சாதிக்க முடியும்!
பிரீமியம் ஸ்டோரி
சிங்கப் பெண்ணே: திருமணம் ஆன பிறகும் சாதிக்க முடியும்!

இந்தப் பயிற்சி முகாமின் மூலம் வீட்டிலேயே பொருள்களைத் தயாரித்து விற்கும் வகையில் சிறந்த திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

சிங்கப் பெண்ணே: திருமணம் ஆன பிறகும் சாதிக்க முடியும்!

இந்தப் பயிற்சி முகாமின் மூலம் வீட்டிலேயே பொருள்களைத் தயாரித்து விற்கும் வகையில் சிறந்த திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

Published:Updated:
சிங்கப் பெண்ணே: திருமணம் ஆன பிறகும் சாதிக்க முடியும்!
பிரீமியம் ஸ்டோரி
சிங்கப் பெண்ணே: திருமணம் ஆன பிறகும் சாதிக்க முடியும்!

அவள் விகடன் மற்றும் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் (WEWA) வுமன் சேவா டிரஸ்ட் இணைந்து நடத்திய ‘சிங்கப் பெண்ணே’ நிகழ்ச்சி ஜனவரி 5 அன்று சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்றது. இது பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தொழிற்பயிற்சி முகாம். தொழிற்பயிற்சியை முறையாகக் கற்று, பெண்கள் வல்லுநராக வேண்டும் எனும் நோக்கில் கட்டணமில்லாமல் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

சிங்கப் பெண்ணே
சிங்கப் பெண்ணே

வீவா அமைப்பின் நிறுவனரும் தலைவரு மான கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், “நடுத்தர குடும்பப் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்காகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் வீவா. தமிழ்நாட்டிலுள்ள 37 மாவட்டங்களையும் சென்று சேரும் வகையில் பயிற்சி முகாம்களைத் திட்ட மிட்டுள்ளோம். குறைந்தபட்சம் 50,000 பெண்களுக்கு முறையான தொழிற்பயிற்சி வழங்குவதுதான் எங்களின் குறிக்கோள். பயிற்சியைத் தொடர்ந்து சிறு குறு தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். குறிப்பாக இயற்கை முறையிலேயே பொருள்களை தயாரித்து விற்பனை செய்யும் யுக்திகளையும் கற்றுத் தரவுள்ளோம்” என்று தங்கள் செயல்பாடுகளையும் இலக்கையும் விளக்கினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (சிட்பி) பிராந்திய தலைவர் சித்ரா அலாய், “பொருளாதாரத் தேவைகளுக்கு எந்த தனிநபரையும் பெண்கள் சார்ந்திருத்தல் கூடாது. பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து, அதற்கான தொழில் திட்டங்களைச் சரியான முறையில் வகுக்க வேண்டும். தயாரிப்புப் பொருள்களைச் சுற்றுவட்டாரத்திலேயே விற்பதற்கான வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டும். இன்றைய நிலையில் தொழில் தொடங்குதல் என்பது நல்ல பலனை அளிக்கக் கூடியது” என்று உற்சாகப்படுத்தினார்.

சிட்பி வங்கியின் சார்பில் வீவாவில் பதிவு செய்த பெண்களுக்கென ‘ரோல் மாடல் ரியல் ஹீரோ’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கியில் தொழில் தொடங்க நிதியுதவி கிடைக்காத பெண்களுக்கு 60,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தொழில் மேம்பாட்டுக்கென வழங்கப்படும் இந்த நிதியை அவர்கள் திரும்பச் செலுத்தத் தேவையில்லை.

சிங்கப் பெண்ணே: திருமணம் ஆன பிறகும் சாதிக்க முடியும்!

“நாட்டின் முன்னேற்றம் பெண்களையே சார்ந்திருக்கிறது. பெண்கள் அதிக அளவில் படித்தவர்களாக இருக்கும்பட்சத்தில் அந்த நாடு நிச்சயம் முன்னேறிய நாடாகத்தான் இருக்கும். பெண்கள் கல்வியறிவு பெறுவதோடு தங்களுக்குப் பிடித்த துறையிலும் சாதிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் ஆண்களும் பெண்களின் கனவுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார் மருத்துவர் நிர்மலா ஜெயசங்கர்.

“இந்தப் பயிற்சி முகாமின் மூலம் வீட்டிலேயே பொருள்களைத் தயாரித்து விற்கும் வகையில் சிறந்த திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இதற்கு வணிகர் சங்கம் நிச்சயம் துணை நிற்கும். உங்கள் பொருள்களை எங்கள் கடை களில் விற்பதற்கென தனி இடம் ஒதுக்கப்படும்” என்று நம்பிக்கையளித்தார் வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா.

காவல்துறை ஏடிஜிபி டாக்டர் ரவி ஐ.பி.எஸ், “பெண்களைச் சார்ந்துதான் ஒரு சமூகமே உள்ளது. தொழிலை நல்ல முறையில் செய்வதற்கு எந்த ஒரு சமூகத்திலும் அமைதி இருக்க வேண்டும். பெண் தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை திறம்பட செய்ய தமிழகக் காவல்துறை எப்போதும் அவர்களுக்குத் துணைபுரியும்” என்று நம்பிக்கை அளித்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், “உலகளவில் 66 சதவிகிதப் பெண்கள் வேலை செய்கிறார்கள். அதில் 50 சதவிகிதம் பேர் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், இதில் 10 சத விகிதம் மட்டுமே வருமானம் பெறுகிறார்கள். இதிலும் ஒரு சதவிகிதம் மட்டுமே தனக்கென சேர்த்து வைத்திருக்கிறார்கள். பெண்களுக்கு உயர்கல்வியை அளிக்க வேண்டும். இதன் மூலம் திருமணம் ஆன பிறகும் அவர்களால் தொழிற்துறைகளில் சாதிக்க முடியும்” என்று எடுத்துரைத்தார்.

சிங்கப் பெண்ணே: திருமணம் ஆன பிறகும் சாதிக்க முடியும்!
சிங்கப் பெண்ணே: திருமணம் ஆன பிறகும் சாதிக்க முடியும்!

இந்திய வருவாய் துறையின் கஸ்டம்ஸ் மற்றும் ஜி.எஸ்.டி பிரிவின் இணை ஆணையர் கே.கோமதி, “பெண்கள் நினைத்தால் இந்திய சமூகத்தின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க முடியும்” என்று உறுதிபடக் கூறினார்.

வீவாவின் சிறந்த பெண் தொழில்முனைவோர் விருதுகள் ‘5 மில்லியன் பெண்கள்’ நிறுவனத்தின் தலைவர் சசிகலாவுக்கும், `எஸன்ஸியல்ஸ்' நிர்வாக இயக்குநர் கயல்விழிக்கும் வழங்கப்பட்டன. சிறந்த சமூக சேவைக்கான விருது மைத்ரி சிறப்புப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் சங்கரிக்கு அளிக்கப்பட்டது.

`தாமினி' அமைப்பின் தலைவர் பர்வீன் சிக்கந்தர் அரசின் முத்ரா திட்டம் மற்றும் சிறு குறு தொழில் தொடங்குவதற்கான இதர சேவைகளைப் பற்றியும் அதன் விதிமுறைகளையும் விளக்கினார். பின்னர், சிறுதானியங்களைக் கொண்டு கேக் செய்யும் முறை, சாக்லேட், பழரசம் தயாரிப்பு என உணவுத் தொழில்முறைகள் கற்றுத் தரப்பட்டன. துணியில் பல வடிவங்களை வரைந்து விற்பனை செய்யும் முறை, பினாயில் தயாரிக்கும் முறை, ஹெர்பல் நாப்கின் தயாரிக்கும் முறை ஆகியவற்றிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இரண்டாவது நாளில் கிண்டியில் உள்ள வீவா அலுவலகத்தில் பெண்களுக்கான அழகுக்கலை சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.