Published:Updated:

இன்ஸ்டாகிராம் மூலம் பிசினஸ் செய்வது எப்படி? - ஶ்ரீபு

ஶ்ரீபு
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீபு

வெற்றிக் கதை

“நம் பிசினஸ் ஐடியா தனித்துவத்துடனும், தரத்தில் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தால் குறைவான முதலீட்டிலேயே சாதிக்க முடியும்.

வியாபாரம் பண்ணணும்னா ஒரு பெரிய நிறுவனமோ, கடையோ இருக்கணும், நாலு பேருக்குச் சம்பளம் கொடுக்கணும்கிறதெல்லாம் பழைய டெக்னிக். எந்தச் செலவும் இல்லாம சமூக வலைதளங்களைப் பயன்படுத்தியே இப்போ ஈஸியா பிசினஸ் பண்ணமுடியும்” - உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் ஶ்ரீபு. தையற்கடைகளில் வீணாகும் துணிகளைச் சேகரித்து அவற்றை நகைகளாக மாற்றி இன்ஸ்டாகிராம் மூலம் பிசினஸ் செய்து வருகிறார். கல்லூரிப் பெண்களை பிரதான வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ள ஶ்ரீபு, தான் உருவாக்கும் ஃபேப்ரிக் நகைகள் பற்றியும், அதற்கான வரவேற்பு பற்றியும் பேசுகிறார்.

ஶ்ரீபு
ஶ்ரீபு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“சொந்த ஊர் கோயம்புத்தூர். பி.ஆர்க் முடிச்சிருக்கேன். என் உடைகளில் சின்னச் சின்ன ஸ்டோன், பெயின்டிங் வேலைப்பாடுகள் செய்து வித்தியாசமா உடுத்துவேன். நான் காலேஜ் சேர்ந்த புதிதில் உடல்நிலை சரியில்லாம அப்பா இறந்துட்டாங்க. அப்பா இறந்ததுக்குப் பின் ராப்பகலா தையல் மெஷினே கதியா கிடந்துதான் அம்மா என்னைப் படிக்க வெச்சாங்க. அம்மா தைக்கிற டிரஸ்களுக்கு குஞ்சம் வைக்கிறது, ஸ்டோன் வைக்கிறதுன்னு நானும் செஞ்சு கொடுப்பேன். மீதமாகிற துணியை எடுத்து ஹேர் க்ளிப், பேண்ட் வகைகள் செய்து பார்ப்பேன். அம்மாகிட்ட துணி தைக்கக் கொடுக்கறவங்களுக்கு டிரஸ்ஸுக்கு மேட்சிங்கான பொருள்கள் செய்து கொடுத்தால் சந்தோஷத்துல பாராட்டுவாங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒரு கட்டத்தில் டிரஸ் தைச்ச துணியிலேயே அக்ஸசரீஸ் செஞ்சா எப்படி இருக்கும்னு யோசிச்சு ஒரு கம்மல் தயார் செஞ்சு காலேஜுக்குப் போட்டுட்டுப் போனேன். நிறைய பேர் கம்மல் நல்லா இருக்குன்னு சொல்லி, அவங்களுக்கும் அதே மாதிரி செஞ்சு கொடுக்க முடியுமான்னு கேட்டாங்க. ஒரு கம்மலுக்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் லாபம் கிடைச்சுது. அப்படி ஜீரோ பட்ஜெட்டில் ஆரம்பிச்ச என்னுடைய பிசினஸில் இப்போ மாசம் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்” என்கிற ஶ்ரீபு, கம்மல், வளையல், நெக்பீஸ், க்ளிப், வாட்ச் டிசைனிங் என ஒவ்வொன்றையும் தனித் துவத்துடன் உருவாக்குகிறார்.

அம்மாவுடன்...
அம்மாவுடன்...

``காலேஜ் முடிச்ச பிறகு ஆர்டர்கள் குறைந்ததால் சோஷியல் மீடியா மூலம் பிசினஸ் பண்ணலாம்னு யோசிச்சு, ‘அந்தாதி’ என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கினேன். நான் செய்த நகைகளின் போட்டோக்களை அதில் பதிவிட ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் பெரிய அளவு வரவேற்பு இல்லை. ஆனா, தொடர்ந்து புகைப்படங்கள் பதிவிட பதிவிட நிறைய ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பிச்சது. இப்போ லண்டன், மலேசியா, சிங்கப்பூர்னு நிறைய நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்காங்க. துணியோடு சேர்த்து ஆக்ஸிடைஸ்ட் பிளாக் மெட்டல், கெம்ப் ஸ்டோன் மிக்ஸிங்னு நிறைய வெரைட்டி நகைகள் தயார் செய்றேன். இதுக்காகவே எங்க ஏரியா டெய்லர்கள்கிட்ட தினமும் துணிகள் சேகரிக்கிறேன். நகை செய்ய தேவையான மற்ற பொருள்களை ஆன்லைனிலே வாங்கிடுவேன்.

வேலைப்பாடுகளுக்குத் தகுந்த மாதிரி 200 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்றேன். இப்போ மாசம் மாசம் 200 நகைகளுக்கு மேல ஆர்டர்கள் கிடைச்சுடுது. இப்போ பழைய நாணயங்களோடு துணிகளைச் சேர்த்து ஆன்டிக் ஜுவல்லரி பண்ண ஆரம்பிச்சிருக்கேன். வித்தியாசமாக இருப்பதால் நிறைய ஆர்டர்கள் வருது'' என்கிறவர், ஆன்லைன் மூலமாக ஜுவல்லரி வகுப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``லாக் டெளன் என்பதால் பிசினஸ் இப்போ கொஞ்சம் சுமாராதான் போகுது. ஆனா, இந்த நேரத்துக்குத் தகுந்த மாதிரி மாஸ்க், க்ளவுஸ் தயாரித்து விற்பனை செய்துட்டு இருக்கேன்” என்கிறவர் காலத்துக்கேற்ப பிசினஸ் மாடலை மாற்றியிருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் மூலம் பிசினஸ் செய்வது எப்படி? - ஶ்ரீபு

இன்ஸ்டாகிராம் மூலம் பிசினஸ் செய்ய ஶ்ரீபு பகிரும் யுக்திகள்...

இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பகிர்ந்துகொண்டே இருக்கணும். வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் அவ்வப்போது ஷேர் செய்யலாம்.

சில நகைகளுக்கான விலையை வெளியிட்டு மற்ற புகைப்படங்களை விலையில்லாமல் வெளியிடும்போது வாடிக்கையாளர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு விலை கேட்பார்கள். அப்போது அவர்களிடம் பேசி ஆர்டர்கள் வாங்குவது எளிது.

பொருளுக்கான போட்டோ ஷூட் தனித்துவமாகவும் ரம்மியமாகவும் இருப்பது அவசியம்.

வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பது அவசியம்.

உங்கள் நிறுவனத்தின் பொருள் மட்டுமல்ல, நிறுவனத்தின் பெயரும் தனித்துவமாக இருந்தால் எளிதில் ஜெயிக்கலாம். வாழ்த்துகள்!