Published:Updated:

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: லாபம் சொல்லும் மேஜிக் நம்பர்!

ஸ்டார்ட் அப்... சக்சஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட் அப்... சக்சஸ்

`பிராஃபிட் அனால்டிகா’ காஜா மைதீன்

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: லாபம் சொல்லும் மேஜிக் நம்பர்!

`பிராஃபிட் அனால்டிகா’ காஜா மைதீன்

Published:Updated:
ஸ்டார்ட் அப்... சக்சஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட் அப்... சக்சஸ்
தொழிலை மூடிவிட்டுச் செல்ல லாமா அல்லது புதிய தொழில் தொடங்குவதற்குச் சரியான நேரமா எனப் பெரும்பாலான தொழில்முனைவோரை இந்த கோவிட்-19 யோசிக்க வைத்துவிட்டது. கவனம் (Care) மற்றும் நேர்மறை (Positive Thinking) சிந்தனையுடன் இருக்க வேண்டிய நேரமிது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொழில்முனைவோர் இயற்கையாகவே ஆக்கபூர்வமானவர்கள், புதிய வெற்றிகரமான நாளை காண வாழ்பவர்கள். எந்த ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோரையும் ஆராய்ந்தால், அவர்கள் முயற்சி செய்த தொழில்கள் எல்லாமே வெற்றியடைந்தது இல்லை.

வெற்றிகரமான தொழிலை அடைய குறைந்தது இரண்டு அல்லது மூன்று தொழில் களிலாவது தோல்வியை அடைந்திருப்பார்கள். உலகம் அவர்களது வெற்றியை மட்டுமே கொண்டாடுவதால், தோல்வியடைந்த தொழில்கள் வெளியே தெரிவதில்லை.

மார்க்கெட்டில் உங்களுக்கு வாய்ப்புள்ளது என்று தெரியும்போது புதிய தொழில் தொடங்குவதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை. அதேநேரத்தில் ஒரு தொழிலில் இனி வாய்ப்பு இல்லை என உணர்ந்தால் அதை விட்டு வெளியேறுவதில் எந்த வெட்கமும் வேண்டாம்.

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: லாபம் சொல்லும் மேஜிக் நம்பர்!

20 சதவிகித சிறிய தொழில்கள் இந்தப் பெருந்தொற்று காலத்தில் புதிய தொழில் முறையைக் கண்டுபிடிக்க முடியாமல் மூடும் நிலையை நாம் பார்க்கிறோம்.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்... வெற்றிகரமான தொழில் ஒன்றே போதும், வாழ்நாள் முழுவதும் பொருளாதார சுதந்திரம் பெறுவதற்கு. ஏன் இந்த கொரோனா காலம் அந்த வாய்ப்பைக்கூட கொடுக்கலாம்.

இந்த கோவிட்டின் மூலம் சுகாதார நெருக்கடிகள் உருவாகியுள்ளன. மக்கள் சுதந்திரமாக கடைகளுக்குச் சென்று பொருள் களை வாங்க விரும்பவில்லை. இது வணிகத்தின் செயல்பாட்டை மாற்றிவிட்டது. பயணம், பொழுதுபோக்கு மற்றும் திருமணம் சார்ந்த தொழில்கள் முற்றிலுமாக முடங்கிவிட்டன. தடுப்பூசி வரும்வரை மேற்கண்ட தொழில்கள் அடுத்த நிலையை நினைக்க முடியாது.

இந்தியா போன்ற பெரிய நாட்டில் மக்களின் பாதுகாப்பையும் தொழில் வளர்ச்சியையும் பேலன்ஸ் செய்வது என்பது அரசாங்கத்துக்குப் பெரிய சவாலாகவே இருக்கிறது.

இதுபோன்ற நெருக்கடியை உலகம் சந்தித்தது இல்லை. தொழில்முனைவோரின் நிறுவனங்கள் பெரிய செயல்பாட்டில் இல்லாவிட்டாலும் அல்லது நிறுவனம் அடைக்கப்பட்டு இருந்தாலும் தாங்கள் தொழில் தொடர்வதை வாடிக்கையாளர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.

Shopping, Facebook போன்ற நிறு வனங்கள் உங்களுக்கு ஒரு டிஜிட்டல் தளத்தை உருவாக்க உதவுகின்றன. டிஜிட்டல் சார்ந்த தொழில்கள், வாடகை விநியோகம் மற்றும் இயக்க செலவுகளில் பெரும்பகுதியைக் குறைக்க இயலும். அதேநேரத்தில் நீங்கள் ஒரு முக்கிய காரணியை மதிப்பிட வேண்டும்.

ஒரு வாடிக்கையாளரைக் கையகப்படுத்த என்ன செலவாகிறது, அவர்கள் மூலம் வாழ்நாள் முழுவதும் பெறும் மதிப்பு என்ன என்பதைச் சரியாகக் கணக்கிட வேண்டும்.

உதாரணமாக, ஒரு வாடிக்கையாளரை கையகப்படுத்த (Customer Aquisition) 500 ரூபாய் செலவாகிறது என்றால், அந்த வாடிக்கையாளர் மூலம் 250 ரூபாய் மட்டுமே வாழ்நாள் லாபம் (Lifetime Income) ஈட்டினால், நீங்கள் திவால் ஆகிவிடுவீர்கள். இந்த எளிய ஃபார்முலாவை அனைவரும் அவர்கள் தொழிலில் பயன்படுத்திப் பார்க்கலாம்.

வாடிக்கையாளர் வாழ்நாள் முழுவதும் தரும் லாபம் எப்போதும் அவர்களை அடைய செலவழிக்கும் தொகையைவிட அதிகமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், உங்கள் தொழில் ஒருபோதும் வளம் பெறாது.

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: லாபம் சொல்லும் மேஜிக் நம்பர்!

தொழில் சிரமத்தில் இருக்கும் போது மேலும் மேலும் கடன் பெறுவது என்பது அவ்வளவு சிறந்தது அல்ல. நிறுவனத்தின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் கடனுக்கான அசலாகவோ, வட்டியாகவோ போகக் கூடாது. இதுவே உங்கள் தொழிலின் மேஜிக் நம்பர்.

ஒரு தொழிலில் கடனை அடைக்க பணம் வெளியேறினால் அது தொழிலின் மீது அதிக அழுத்தத்தைத் தரும். அந்தத் தொழில், மேல் முதலீடு செய்ய வாய்ப்பில்லாமல் போகிறது. வளர்ச்சியைத் தடுப்பதாகவும் இந்தக் கடன் அமைகிறது. தொழில்முனைவோருக்கு மன அழுத்தத்தையும் தரும்.

சில நேரங்களில் அந்தத் தொழிலில் இருந்து விலகுவது அதிக அர்த்தம் உள்ளதாகவே உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நுகர்வோர் நடத்தைகள் மாறிவிட்டன!

டிஜிட்டல் பொருளாதாரத்தில் உங்கள் வணிகத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியத்தை கொரோனா காலம் உணர்த்துகிறது. மூன்றில் ஒரு பங்கு மேலான வருமானம், உங்கள் நிறுவனக் கடனை அடைக்க பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு உங்கள் பணம் செல்லுமானால் வருமானத்தை மேல் முதலீடு செய்து நிறுவனத்தை வளர்க்க முடியாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism