Published:Updated:

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: உங்கள் ஐடியாவுக்கு பணம் திரட்டுவது எப்படி?

`பிராஃபிட் அனால்டிகா’ காஜா மைதீன்

பிரீமியம் ஸ்டோரி
`பணம்தான் எல்லாம் என்பதில்லை. ஆனால், அது ஆக்சிஜன் போல முக்கியத்துவம் பெறுகிறது.' - ஜிக் ஜாக்லரின் இந்த வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகிறது.

ஒரு தொழில், வெற்றி பெறாததற்குப் பணத் தட்டுப்பாடுதான் மிகப் பெரிய காரணமாகக் கருதப்படுகிறது. ஏன், பணத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? பின்வரும் காரணங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

முதலாவதாக... அதிக பணத்தை வைத்து தொழிலின் எந்த ஒரு பிரச்னையையும் தீர்க்க முடியாது என்பதே உண்மை. அதேபோல, பிரச்னையே இல்லாத தொழிலே இல்லை என்றும் சொல்லலாம். ஆனால், தொழில் நடத்துவதில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க உதவும் வழிகளை அட்டவணைப்படுத்தினால் ‘பணம்’ முதலிடத்தைப் பெறுகிறது.

ஒருவர் தொழிலை நல்ல பணவளத்துடன் நடத்துவது மற்றவர்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

`தொழில் நடத்தி பணம் சம்பாதிப்பது என்பது எனது குறிக்கோள் இல்லை' என்று சிலர் சொல்வதைக் கேட்டுள்ளேன்.

உண்மையை ஆராய்ந்தால், அவர்கள் பொய் சொல்கிறார்கள் அல்லது பொழுதுபோக்குக்காக எதையோ செய்கிறார்கள் என்பதாகவே நான் கருதுகிறேன். அவர்கள் செய்வதை வணிகமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: உங்கள் ஐடியாவுக்கு பணம் திரட்டுவது எப்படி?

வாடிக்கையாளருக்கு ஒரு மதிப்பை (Value) அளிப்பேன் அல்லது எனது தயாரிப்புப் பொருளின் மூலம் இவ்வுலகத்தை மாற்றப்போகிறேன் என்பதெல்லாம் அவர் பணப் பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது உதவாது. அந்தச் சூழ்நிலையில் எவ்வளவு பேர் அவருக்கு உதவப் போகிறார்கள்? விமானப் பயணத்தின்போது ஆக்சிஜன் கவசத்தை முதலில் உங்களுக்கு அணிந்து விட்டு மற்றவர்களுக்கு அணிய உதவுங்கள் என விமானப் பணிப்பெண் கூறுவார்களே... இது அப்படியே உங்கள் தொழிலுக்கும் சரியாகவே பொருந்தும்.

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: உங்கள் ஐடியாவுக்கு பணம் திரட்டுவது எப்படி?

பணம் என்னும் மூலதனத்தைத் திரட்ட உங்களால் முடியும்!

ஏஞ்சல் முதலீட்டாளர்கள் (Angel Investor) பெரும்பாலும் சிறிய தொகையை முதலீடு செய்வது வழக்கம். பைலட் ரன் (Pilot Run) எனப்படும் நிலையில் உள்ள நம் தயாரிப்புகளையோ, சேவைகளையோ இவர்கள் எளிதாகக் கணிக்கிறார்கள். அது வெறும் திட்டமாக இருப்பதை இவர்கள் விரும்புவதில்லை.

வென்ச்சர் முதலீட்டாளர் (Venture Capital) பெரிய அளவில் முதலீடு செய்கிறார்கள். ஒரு ஸ்டார்ட்அப் தொழிலில் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு அவர்கள் உதவி மிகத் தேவையாக உள்ளது. ஆனால், இவர்கள் ஒப்புதல் அளிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். பொதுவாக நம் வணிகத்தில் இவர்களின் ஈடுபாடு அதிக அளவில் இருக்கும்.

குழுக்களாகப் பணம் திரட்டுதல் (Crowd Funding)... குழுக்களாகப் பணம் திரட்ட இந்திய அளவிலும், வெளிநாட்டைச் சேர்ந்த நிறைய தளங்கள் உள்ளன. இது பலரிடமிருந்து மூலதனத்தைத் திரட்டும் முறையாகும். உங்கள் செயல் திட்டம் சிறப்பானதாகவும், சரியான முறையில் விளக்கப்பட்ட வீடியோவாகவும் இருந்தால் இந்த முறையில் எளிதாக முதலீட்டைத் திரட்டலாம். மருத்துவ மற்றும் இதர உதவிகளுக்காகவும் இதே முறையில் நிதி திரட்டுதல் நடைபெறுகிறது.

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: உங்கள் ஐடியாவுக்கு பணம் திரட்டுவது எப்படி?

கடன் சார் மூலதனம்

தொடக்க நிறுவனங்களாக உள்ள ஸ்டார்ட்அப் தொழில்களுக்குக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தொழில்முனைவோரை மையப்படுத்தி இது வழங்கப்படுகிறது. இந்த மூலதனமானது நிறுவனத்தை `கிக் ஸ்டார்ட்' செய்ய உதவும்.

பணம் கொடுக்கும் முதலீட்டாளர் உங்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள்

1. பேரார்வம் (Passion): இந்த ஸ்டார்ட்அப் தொழில் எது வரை செல்லும் என்கிற தெளிவு வேண்டும். இந்தத் தெளிவுதான் முதலீட்டாளருக்கு உங்கள் தொழிலின் மீதான ஆர்வத்தை உருவாக்கும்.

2. நம்பகத்தன்மை (Validity): தொழில் முனைவோரின் ஐடியா மீதான நம்பகத்தன்மையை வைத்தே முதலீட்டாளர் ஒரு ஸ்டார்ட்அப் தொழிலின் மீது முதலீடு செய்ய முடியும்.

3. குறிப்பிட்ட அளவு சந்தை (Market Size): அதிக அளவு வாடிக்கையாளர் மற்றும் அடிக்கடி வாங்கும் வாடிக்கையாளரைக் கொண்ட சந்தை அளவை முதலீட்டாளர் விரும்புவார். சிறந்த தயாரிப்பாகவே இருந்தாலும் சிறிய அளவு சந்தைக்கு முதலீட்டாளர் பெரிய அளவில் ஆர்வம்காட்ட மாட்டார்.

4. போட்டியாளர்களை விட சிறப்பானது (competitive advantage): எவ்வளவு சிறப்பாகச் செயல்பட போகிறீர்கள் என்று தொழில் முனைவோரை ஆராயும்போது `கடினமாக உழைப்போம்' என்கிற வாக்குறுதி மட்டுமே பணம் போடும் முதலீட்டாளருக்குப் போது மானதல்ல. வாடிக்கையாளரின் கலாசாரம், புவியியல் அமைப்பு மற்றும் திட்டத்தின் சிறப்பு ஆகியவற்றைச் சார்ந்தே இருக்க வேண்டும்.

5. குழு (Team): ஒரு தனிநபராகச் செயல்படுகிறவரைவிட குழுவாக இருப்பதே முதலீட்டாளரின் சிறந்த தேர்வாக இருக்கும்.

6. முதலீட்டாளர் வெளியேறும் திட்டம் (Exit Statergy): ஒரு முதலீட்டாளர் மூன்று அல்லது ஐந்து வருடங்களில் லாபத்துடன் வெளியேறும் சூழ்நிலையை தொழில்முனைவோர் உருவாக்க வேண்டும். சராசரி லாபம் மட்டுமே முதலீட்டாளரின் விருப்பமல்ல. அவர் அதிக ரிஸ்க் எடுப்பதற்கான காரணம் என்ன? அபரிமிதமான லாபம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்க வேண்டும் என்பதுதானே? அதனால் சராசரி விகிதங்களை முதலீட்டாளர் விரும்ப மாட்டார்.

எக்ஸ் காரணங்கள் (X Factors)

நெறிமுறைகளைப் போற்றும் தெளிவான சிந்தனை உள்ள ஒருவரின் தொழில் திட்டத்தில் முதலீட்டாளர் முதலீடு செய்ய விரும்புவார். அறம் இல்லாத ஒருவராக மாறி பணம் ஈட்ட தொழில்முனைவோர் ஒருபோதும் முயற்சி செய்ய வேண்டாம். ஒழுங்கற்ற மாற்றங்கள் ஒப்பந்தத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். ஆகவே... கவனம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு