லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: ஐஸ்க்ரீம் சொல்லும் பாடம்!

ஸ்டார்ட் அப்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார்ட் அப்

`பிராஃபிட் அனால்டிகா’ காஜா மைதீன்

புதிய ஐஸ்க்ரீம் கவுன்டர் கூட்டமாக இருந்தது. அந்த சேல்ஸ் கேர்ள் அனைவருக்கும் ஏதோ ஒன்றை கொடுத்துக்கொண்டிருந்தார். நானும் ஆர்வம் தாங்காமல் கூட்டத்தில் ஒருவராக நின்றேன்.

அந்தக் கூட்ட ரகசியம் எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. ஒரு சிறிய ஸ்பூனில் வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் ஐஸ்க்ரீம் வகைகளை டெஸ்ட் செய்ய சளைக்காமல் கொடுத்துக்கொண்டே இருந்தார். பல வகை ஐஸ்க்ரீம் வகைகளை டெஸ்ட் செய்தபின், வேண்டிய சுவையை வாடிக்கையாளர் தேர்வு செய்ய எளிதாக இருந்தது. அந்தத் தருணத்தில் ஐஸ்க்ரீம் வாங்க வேண்டிய எண்ணமே இல்லாத நான், மூன்று வகை ஐஸ்க்ரீமைகளை வாங்கி வந்தேன்.

தேர்வு செய்யும் குழப்பத்தில் இருப்பவர் அல்லது அவசியம் வாங்க வேண்டுமா என்கிற யோசனையில் வரும் வாடிக்கையாளரைக்கூட இந்த சிறிய அளவிலான இலவச யுக்தி (Free Sample Strategy) கவர்ந்திழுக்கும்; நிபந்தனையற்ற ஓர் உணர்வை வாடிக்கையாளருக்குக் கொடுக்கும்.

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: ஐஸ்க்ரீம் சொல்லும் பாடம்!

நன்றாக இருக்குமோ, இருக்காதோ என்கிற நிச்சயமற்ற தயக்க உணர்வுடன் வாடிக்கையாளரை வைத்திருப்பது விற்பனையைத் தடுக்கும். சில வாடிக்கையாளர் டெஸ்ட் செய்துவிட்டு வாங்காமல் சென்று விட்டாலும், கடை நடத்துபவருக்கு நஷ்டமில்லை. அவர்கள் மீண்டும் அங்கே வருவதற்கு ஒரு வாய்ப்பை அந்த ஐஸ்க்ரீம் சாம்பிள் உருவாக்கியுள்ளது.

இன்று மிகப்பெரிய நிறுவனங்கள், விலைமதிப்புள்ள பொருள்களை வாடிக்கையாளருக்கு வாய்ப்பே அளிக்காமல் `வாங்கிச்செல்லுங்கள், நாங்கள் விற்பது தரமானவையே... உங்களுக்குக் கண்டிப்பாக பிடிக்கும்’ என ஒருவகையான மிரட்டல் போக்கையே கடைப்பிடிக்கின்றன.

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: ஐஸ்க்ரீம் சொல்லும் பாடம்!

ஆனால், விருப்பம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறும் என்பதை ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் மறந்துவிடக் கூடாது.

ஒரு சராசரி தொழிலுக்கும் ஸ்டார்ட்அப் தொழிலுக்கும் உள்ள வித்தியாசமே புதுமைகள்தாம்.இங்குள்ள விளம்பரங்கள் ஒரு புது முயற்சியாகவும் சிந்தனையை தூண்டுவதாகவும் இருந்தன.

உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்பு அல்லது சேவையில் புதிய முன்னேற்றம், எளிதாக விரிவுப்படுத்தக்கூடிய தொழில்முறைகள், அதிகபட்ச வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு ஆகிய அம்சங்கள் உள்ள தொழில்களே ஸ்டார்ட்அப் தொழில்கள் என்று நிர்ணயிக்கப்படுகின்றன.

உங்கள் தொழில் மேற்கண்ட அம்சங்களைக் கொண்டிருந்தால், நீங்களும் ஸ்டார்ட்அப் தொழில் களுக்கான பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: ஐஸ்க்ரீம் சொல்லும் பாடம்!

இதில் இரண்டு முக்கிய அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நிறுவனம் ஆரம்பித்து

10 வருடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்; 100 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை இருக்கக் கூடாது.

ஸ்டார்ட்அப் தொழில் வரைமுறைக்குள் இப்போது நீங்கள் செய்யும் தொழில் வந்தால் பின்வரும் நன்மைகளைப் பெறலாம்.

1. அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) நன்மைகள்.

2. பொது கொள்முதல் (Public Procurement) விதிமுறைகளில் தளர்வு.

3. தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களின்கீழ் சுய சான்றிதழ் பெறுவதற்கான வாய்ப்பு.

4. ஸ்டார்ட்அப்புக்கென பிரத்யேக நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு.

5. எளிதான வெளியேறும் முறை (Easy Exit Procedure).

6. செக்‌ஷன்-8 IAC-ன்படி முதல் மூன்று வருடங்களுக்கு வருமான வரி விலக்கு.

7. புதிய ஸ்டார்ட்அப் தொழில் தொடங்குவதற்கான படிப்படியான வழிமுறைகள்.

8. ஸ்டார்ட்அப் திட்டத்தின்கீழ் பதிவு பெற்ற தொழில்களுக்கு மத்திய அரசாங்கத்தின் அனைத்து நலத் திட்டங்களையும் பெறக்கூடிய வாய்ப்பு.

9. அந்தந்த மாநில அரசாங்கத்தில் அறிவிக்கப்படும் அனைத்துச் சலுகைகளையும் பெறுவதற்கான வாய்ப்பு.

10. ஸ்டார்ட்அப் இந்தியா கூட்டங்களின் சட்டம் மற்றும் வங்கி ஆதரவைப் பெறும் வாய்ப்பு.

11. முதலீட்டாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு.

வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது வெறுமனே அரசு சேவைகள் அல்லது தொழிற்சாலைகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. இப்போது வேலை தேடுகிறவர்கள், வேலையை உருவாக்குகிறவர்களாக மாறுகிறார்கள்.

எங்கள் இளைஞர்களின் கடின உழைப்பு மற்றும் புதுமையான யோசனைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்!

- வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், இந்திய அரசு.

வெற்றிக்கு வித்திடும் வித்தியாசமான விளம்பரங்கள்

உங்கள் கார் முக்கியமானது!

Yes... Your Car Matters!

ஆமாம்... ஆரம்ப விலையிலே, உங்கள் பட்ஜெட்டிலே ஒரு கார் வாங்குங்க.

உங்க பைக்கிலிருந்து கார் கனவுக்கு மாறுங்க.

இது வெறுமனே ஒரு கனவு மட்டுமே அல்ல...

உங்க சிறிய பிசினஸுக்கும் வேலைக்கும்கூட இது உதவியாக இருக்கும்.

எப்படி என்கிறீர்களா?

1. உங்கள் வாடிக்கையாளரின் முன் உங்கள் மதிப்பு உயரும். செய்யும் வேலைக்கு, அட்வான்ஸ் தொகை எளிதாகக் கிட்டும். நம்பிக்கை வளரும்.

2. மேலதிகாரி முன் உங்கள் மதிப்பு உயரும்.

இப்போ எல்லோரும் கண்ணுலதான் யோசிக்கிறாங்க. ஒரு காரை வாங்கி வாழ்க்கையை உங்களை நோக்கி வசப்படுத்துங்கள்!

24 மணி நேர சோதனை ஓட்டம்...

வாங்க பழகுவோம்!

  • ஆமாம், எங்கள் காரை 10 நிமிடம் மட்டுமே டெஸ்ட் டிரைவ் பண்ணி முடிவு பண்ண வேண்டாம்.

  • 24 மணி நேரம் இந்த கார் உங்களுக்கே சொந்தம்.

  • காருடன் பழகுங்க!

  • அப்புறம் முடிவு பண்ணுங்க!

  • நல்லா பழகினால்தானே, ஒரு முடிவு எடுக்க முடியும்.

பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

தமிழகம் 4,850

கேரளம் 2,332

கர்நாடகம் 10,133

ஆந்திரம் 1,654

தெலங்கானா 4,448

மகாராஷ்டிரம் 16,127

உத்தரப்பிரதேசம் 8,432

மத்தியப்பிரதேசம் 2,987

குஜராத் 5,454

மேற்கு வங்காளம் 2,932