Published:Updated:

ஆர்வமும் கிரியேட்டிவிட்டியும் இருந்தால் ஜெயிக்கலாம்! - சுபத்ரா

சுபத்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
சுபத்ரா

ஸ்வீட் சீக்ரெட்ஸ்

‘டாக் ஆஃப் த டவுன்’ கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘சாக் ஆஃப் த டவுன்’ பற்றி தெரியுமா? விதவிதமான வடிவங்களில், கற்பனைத்திறன் மற்றும் கலைத்திறனைக் காட்டி சுவையான ‘ஹோம் மேட்’ சாக்லேட்டுகளை உருவாக்கும் சென்னையைச் சேர்ந்த சுபத்ரா, தன்னுடைய பிராண்டுக்கு வைத்திருக்கும் பெயர்தான் ‘சாக் ஆஃப் த டவுன்.’ இந்த வருட தீபாவளியின்போது பட்டாசு, ராக்கெட், புஸ்வாணம், சக்கரம் மற்றும் குருவிவெடி வடிவங்களில் இவர் செய்திருந்த சாக்லேட் ‘கிஃப்ட் பாக்ஸ்’களுக்கு ஆன்லைனில் ஏக வரவேற்பு!

ஆர்வமும் கிரியேட்டிவிட்டியும் இருந்தால் ஜெயிக்கலாம்! - சுபத்ரா

கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயரை வரவேற்கும் விதமாக கிறிஸ்துமஸ் தாத்தா முதல் மரத்தில் தொங்கவிடும் குட்டிக் குட்டி உருவங்கள் வரை அனைத்தையும் சாக்லேட்டாகப் படைக்கும் பரபரப்பில் இருந்தார் சுபத்ரா. பி.டெக் முடித்துவிட்டு, ஒரு வருடம் ஐ.டி துறையில் பணியாற்றிய சுபத்ரா சட்டென சாக்லேட் தயாரிப்புக்கு மாறியது எப்படி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘சின்ன வயசிலிருந்தே ஆர்ட் அண்டு கிராஃப்ட்டில் எனக்கு ஆர்வம் அதிகம். டிகிரி முடிச்ச பிறகு, பெங்களூரு ஐ.ஐ.எம்மில் பிசினஸ் மேனேஜ்மென்ட் சம்பந்தமா இரண்டரை மாதம் `க்ராஷ் கோர்ஸ்' ஒண்ணு பண்ணினேன். அதில் ஒரு தொழிலை எப்படி ஆரம்பிக்கிறது, தயாரிப்பை எப்படி மார்க்கெட்டிங் பண்றதுன்னு தொழில் மேலாண்மை தொடர்பான எல்லா விஷயங்களையும் சொல்லித் தந்தாங்க. சொந்தமாக ஏதாவது பிசினஸ் பண்ணணும்னு ஆசை இருந்தது. ஆனா, என்ன பண்றதுன்னு ஐடியா இல்லாததால், வேலையில் சேர்ந்துட்டேன்.

ஸ்வீட் சீக்ரெட்ஸ்
ஸ்வீட் சீக்ரெட்ஸ்

திருமணமாகி டெல்லி போய், அங்கேயும் வேலையைத் தொடர்ந்தேன். இடையில் சென்னைக்கு அம்மா வீட்டுக்கு வந்திருந்தப்போ, கிஃப்ட் வாங்குறதுக்காக ஒரு கடைக்குப் போனப்போதான் ‘ஹோம் மேட்’ சாக்லேட்ஸைப் பார்த்தேன். ‘நாமும் இதை முயற்சி பண்ணலாமே’ன்னு நினைச்சு, சென்னையிலேயே இரண்டு நாள் கிளாஸ்ல அடிப்படை விஷயங்களைக் கத்துக்கிட்டேன். டெல்லிக்குப் போனதும் செய்து பார்த்தேன். நல்லா வந்தது. வேலையை விட்டுட்டு, 2010-ல் ‘சாக் ஆஃப் த டவுன்’ தொடங்கினேன். முதலில், என்னுடைய நெருங்கிய நட்பு மற்றும் உறவு வட்டாரத்துக்கு மட்டும் செய்து கொடுத்தேன். அது அப்படியே வாய்மொழி புரொமோஷனா மாற, என் சாக்லேட்க்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்புறம் ஆன்லைனிலும் சேல்ஸ் சூடு பிடிச்சது. இந்தியாவுக்குள் எல்லா நகரங்களுக்கும் அனுப்பினேன்.

சுபத்ரா
சுபத்ரா

டெல்லியிலிருந்து 2013-ல் சென்னை வந்தோம். அம்மா வீட்டுக்குப் பக்கத்திலேயே குடி போனதுனால முக்கியமான வேலைகளை அம்மா கவனிச்சுக் கிட்டாங்க. ஒவ்வொரு பண்டிகைக் கும் ஏதாவது வித்தியாசமா பண்ணலாமேன்னு யோசிச்சு தீபாவளிக்கு தீபம், பட்டாசு மாதிரி சாக்லேட்ஸ் செய்து என் கணவரின் நண்பர்களுக்குக் கொடுத்தேன். ஏகப்பட்ட பாராட்டு!’’ என்கிற சுபத்ராவின் மாத வருமானம் சீஸன் நேரங்களில் 40,000 ரூபாயை எட்டுகிறதாம்.

ஸ்வீட் சீக்ரெட்ஸ்
ஸ்வீட் சீக்ரெட்ஸ்

டெல்லியில் தனிநபராகச் செய்து வந்த பிசினஸை சென்னை வந்ததும் சற்று விரிவு படுத்தியிருக்கிறார். மற்ற வேலைகளை கவனிக்க மூன்று பெண்கள் உதவுகிறார்கள்.

நான் பண்ணின செஸ் போர்டு, ஹேண்டு பேக், தஞ்சைப் பெரிய கோயில், நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா, ஜுவல்லரி மாதிரியான கஸ்டமைஸ்டு சாக்லேட்ஸ் கஸ்டமர்களை அதிகம் ஈர்த்துச்சு.

‘‘இப்போ கஸ்டமைஸ்டு சாக்லேட்டுக்கு மவுசு அதிகம். சமீபத்தில், நான் செய்த செஸ் போர்டு, ஹேண்டு பேக், தஞ்சைப் பெரிய கோயில், தட்டில் இருக்கும் நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா, ஜுவல்லரி மாதிரியான கஸ்டமைஸ்டு சாக்லேட்ஸ் கஸ்டமர்களை அதிகம் ஈர்த்துச்சு. குழந்தைங்க சாப்பிடறதுனால சாக்லேட் தயாரிப்பில் பிரிசர்வேடிவ் எதுவும் சேர்க்க மாட்டேன்.

ஸ்வீட் சீக்ரெட்ஸ்
ஸ்வீட் சீக்ரெட்ஸ்

எங்களுக்கு ஒரு பொண்ணு... அவளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வேலையைத் தொடங்கிடுவேன். அப்பப்ப இந்தத் தொழிலில் புதுசா வர்ற நுட்பங்களைக் கத்துக்கறேன். சாக்லேட்டோடு, குக்கீஸ், கேக்ஸ், மக்ரூன்ஸும் செய்து கொடுக்கிறேன்.

இந்தத் தொழிலில் இருக்கிற மிகப்பெரிய சிரமமே, அதிக வெப்பநிலை இருந்தா சாக்லேட் உருகும் என்கிறதுதான். அதனால வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு சாக்லேட்டைக் கொண்டு போய் சேர்க்கிறவரை ரொம்ப கவனமா இருக்க வேண்டியிருக்கும்'' என்கிறவர், தன் தொழிலின் அடுத்தகட்டமாக `பீன் டூ பார்' எனும் சாக்லேட் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.

‘‘யெஸ். இதுக்காக கோர்ஸ் படிச்சுட்டு வந்திருக்கேன். கோகோ பயற்றை பக்குவமா அரைச்சு பண்ற சாக்லேட். இதில் சர்க்கரை சேர்க்காமல் செய்தால் நீரிழிவுக் குறைபாடு உடையவர்கள்கூட சாப்பிடலாம். கஸ்டமைஸ்டு போட்டோ பெயின்டிங் சாக்லேட்கூட பண்ணிட்டு இருக்கேன். கஸ்டமர்ஸ் விரும்புகிற புகைப்படத்தை கேக் மேல பெயின்ட் பண்ணி கொடுப்பேன். நான் நல்லா வரைவேன். அதுவும் இப்போ கேக் தயாரிப்பில் உதவுது. நாம பண்ற ஒவ்வொரு சின்ன விஷயம்கூட வாங்கறவங்க மனசைத் தொடணும். பொறுமையும் அப்டேட்டும் இருந்தா இந்தத் தொழிலில் ஈசியா ஜெயிக்கலாம்'' என்று தம்ஸ் அப் காட்டுகிறார் சாக்லேட் ராணி சுபத்ரா!