Published:Updated:

2K kids: தொழில் தொடங்க காலதாமதம்னு ஒண்ணு இல்ல!

2K kids
பிரீமியம் ஸ்டோரி
2K kids

சுவேதா.வி.கே, கார்த்திகா.சி

2K kids: தொழில் தொடங்க காலதாமதம்னு ஒண்ணு இல்ல!

சுவேதா.வி.கே, கார்த்திகா.சி

Published:Updated:
2K kids
பிரீமியம் ஸ்டோரி
2K kids

‘`எனக்கு இப்போ 48 வயசாகுது. ரெண்டு வருஷத்துக்கு முன் எனக்கு கர்ப்பப்பை அறுவைசிகிச்சை நடந்தது. ஒரு மாச ஓய்வுக்கு அப்புறம், `டெசர்ட் டோர் (Dessert Door)’ என்ற கேக் பிசினஸ் தொழிலை ரொம்ப சின்ன அளவில் தொடங்கினேன். இன்னிக்கு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர் நான். தொழில் தொடங்குவதற்கு காலதாமதம்னு ஒண்ணு இல்ல. எப்போ நினைச்சாலும் கிக் ஸ்டார்ட் பண்ணலாம்’’ - பிசினஸ் மெசேஜுடன் ஆரம்பிக்கிறார், சென்னையைச் சேர்ந்த சுரபி பச்சியா. ‘வீட்லயிருந்தே ஏதாச்சும்...’ என்ற தேடலில் இருக்கும் பெண்களுக்கு, அந்தத் தேடல் வெற்றியில் முடிந்திருக்கும் சுரபியின் ஸ்டோரி இங்கே.

சுரபி
சுரபி

ஆரம்பம்

கொல்கத்தாவில் பிறந்தேன். திருமணத்துக்குப் பின் சென்னைக்கு வந்தேன். மகன், மகள்னு ரெண்டு குழந்தைகள். பி.காம் பட்டதாரியான நான், சுய சம்பாத்தியம் பற்றி நெனச்சுப் பார்க்காமலேயே இருந்துட்டேன். 46 வயசுல, ஏதாச்சும் பண்ண ணும்னு தோணுச்சு. நான் செய்யுறதுலேயே பெஸ்ட், கேக்தான். அதையே பிசினஸ் ஆக்கலாம்னு முடிவு பண்ணி னேன். கணவர், மாமியார், பிள்ளைகள்னு எல்லாரும் சப்போர்ட்டிவ்வா இருந்தாங்க. ‘டெசர்ட் டோர்’னு பெயர் செலக்ட் பண்ணிக்கொடுத்தாள் என் பொண்ணு.

2K kids: தொழில் தொடங்க காலதாமதம்னு ஒண்ணு இல்ல!

முதலீடு

வீட்லயிருந்தே செய்ற ஒரு தொழில் முயற்சிதான் என்பதால, முதலீடு அதிகமா தேவைப்படலை. டெசர்கள் செய்வதற்கான மூலப்பொருள்கள், அப்புறம் செஞ்ச இனிப்புகளை பேக் செய்றதுக்கான அட்டைப் பெட்டிகள், சில அலங்கரப் பொருள்கள்னு இதுக்கு மட்டும்தான் செலவாச்சு.

பாஸ்கெட் கேக் - ஸ்ட்ராபெரி கப் கேக்
பாஸ்கெட் கேக் - ஸ்ட்ராபெரி கப் கேக்

விற்பனை வாய்ப்பு

ஆரம்பத்தில், ஒரு வகை இனிப்பான மூஸ் (Mousse) தயாரிச்சு, சூப்பர் மார்கெட்ல விற்கத் தொடங்கினேன். எல்லாமே வித்துத் தீர்ந்துடுச்சு. அது எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத் துச்சு. தொடர்ந்து பிரவுனி, கேக் பாப்ஸ், சாக்லேட்னு பல ரெசிப்பிகளை முயன்றேன். ஆரம்பத்தில் தெரிந்தவர்கள், நண்பர்களும், பின்னர் சமூக வலைதளங்கள் மூலம் கஸ்டர்மர்கள் கிடைச்சாங்க.

கற்றல்

‘ஃபால்ட் லைன் (Fault Line)' கேக்னு ஒரு டெசர்ட். அதை நான் பலமுறை தயாரிச்சிருந்தாலும், ஒவ்வொரு முறையும் சவாலாதான் இருக்கு. அதேபோல, வலைதளங்கள்ல புதுவகையான இனிப்பு மற்றும் கேக்குகளைத் தேடித் தேடிப் பார்த்து செய்றேன். கஸ்டமர்கள் யாராவது இதுவரை நான் செய்யாத இனிப்புகளைக் கேட்கும்போது ஆர்வமா செய்வேன். இப்படி, இதில் நான் மேலும் மேலும் கத்துக்கிற ஆர்வம்தான் தொழில் போட்டியில என்னை தக்கவைக்குது.

 சாக்லேட் ட்ரஃபுல் கேக் - டோனட்
சாக்லேட் ட்ரஃபுல் கேக் - டோனட்

ஹைலைட்ஸ்

நான் செய்றதுலேயே எனக்கு மிகவும் பிடிச்சது, காபி ஃப்ளேவர்டு இட்டாலியன் இனிப்பான டிராமிசு (Tiramisu); எல்லாருக்கும் பிடிச்சது ஓரியோ மூஸ் (Oreo Mousse), டிராமிசு. என்னோட சிக்னேச்சர் டெசர்ட் அன்னாசி கேக், சாக்லேட் கேக், ஓரியோ மூஸ் (Oreo mousse).

வருமானம்

சில மாதங்கள், நாள்களில் நிறைய ஆர்டர் வரும், சில நேரம் ஒண்ணுமே இருக்காது. தீபாவளி போன்ற பண்டிகை நேரத்துல நல்ல லாபம் கிடைக்கும். ஒட்டு மொத்தத் துல சமாளிக்கிற அளவுக்கு வருமானம் ஈட்ட முடியுது.

ஸ்வீட் ரிட்டர்ன்ஸ்!