Published:Updated:

‘36 வயதினிலே..!’ - நிஜத்தில் ஜெயித்த டிசைனர் சிந்து

சிந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்து

சொந்தமா ஒரு பொட்டிக் ஆரம்பிக்கலாம்னு வாடகைக்கு இடம் தேடிப்போனபோது, சிங்கிள் மதருக்கு கடையெல்லாம் வாடகைக்கு விட முடியாதுனு மறுத்திருக்காங்க

‘36 வயதினிலே..!’ - நிஜத்தில் ஜெயித்த டிசைனர் சிந்து

சொந்தமா ஒரு பொட்டிக் ஆரம்பிக்கலாம்னு வாடகைக்கு இடம் தேடிப்போனபோது, சிங்கிள் மதருக்கு கடையெல்லாம் வாடகைக்கு விட முடியாதுனு மறுத்திருக்காங்க

Published:Updated:
சிந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்து

“வாழ்க்கை நெருக்கடிகளைக் கொடுத்து என்னை மரணத்தை நோக்கித் தள்ளுச்சு. இந்த உலகத்துல வாழ்ந்தா... ஊர், உலகம் என்ன சொல்லும்னு பயந்த காலம் உண்டு. ஒருகட்டத்துல யாரு என்ன சொன்னா என்ன... நமக்காக நாம வாழணும்னு முடிவு பண்ணேன். அந்த முடிவுதான் இன்னிக்கு எனக்கான அடையாளமா மாறியிருக்கு'' - நம்பிக்கை பொங்கப் பேசுகிறார் சிந்து. சென்னையைச் சேர்ந்த காஸ்டியூம் டிசைனர், பொட்டிக் உரிமையாளர், இரண்டு குழந்தைகளின் சிங்கிள் மாம்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வரும் பல பிரபலங் களுக்கும் சிந்து காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி யுள்ளார். டிசைனிங் துறையில் பலருக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். தன்னுடைய வெற்றிப் பயணத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

‘36 வயதினிலே..!’ - நிஜத்தில் ஜெயித்த டிசைனர் சிந்து

``பெற்றோர் சம்மதத்தோடு லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு முழு நேர ஹோம்மேக்கரா என்னோட உலகம் வீட்டுக் குள்ளே சுருங்கிப் போச்சு. நிறைய கருத்து வேறுபாடுகள்... 16 வருஷங்களுக்குப் பிறகு என்னுடைய காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்துச்சு. ரெண்டு குழந்தைகளோட நிலைகுலைஞ்சு நின்னேன்.

16 வருஷங்கள் கழிச்சு இந்தச் சமூகத்தை தனியா எதிர்கொள்றது அவ்வளவு சுலபமா இல்ல. போற இடத்துல எல்லாம் அவமானங்கள்... நான் அழகா இல்லையோ, திறமை இல்லையோ, சாதிக்க முடியா தோனு எனக்குள்ள ஆயிரம் கேள்விகள். பலமுறை தற்கொலை முயற்சிவரை போயிருக்கேன். ஒரு கட்டத்துல, என்னை அவமானப்படுத்துனவங்க முன்னாடி நானும் என் பிள்ளைகளும் வாழ்ந்து காட்டணுங்கிற வைராக்கியம் வந்தது.

‘36 வயதினிலே..!’ - நிஜத்தில் ஜெயித்த டிசைனர் சிந்து

எனக்குத் தெரிஞ்ச டெய்லரிங்ல இறங்கினேன். அதுல கிடைச்ச வருமானத்தை வெச்சு 36 வயசுல ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ்ல சேர்ந்து கோல்டு மெடல் வாங்கினேன். ஒரு டிசைனர் கிட்ட ஆறு மாசம் வேலை செஞ்சு தொழில் நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன்.

சொந்தமா ஒரு பொட்டிக் ஆரம்பிக்கலாம்னு வாடகைக்கு இடம் தேடிப்போனபோது, சிங்கிள் மதருக்கு கடையெல்லாம் வாடகைக்கு விட முடியாதுனு மறுத்திருக்காங்க. சிங்கிள் மதரா இருக்கிறது ஒரு பொண்ணோட குற்றம் இல்லைனு மக்களுக்கு எப்படிப் புரியவைக் கிறதுனு தெரியல...'' நியாயமான கோபத்துடன் கேட்பவர், பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஒரு கடையை வாடகைக்கு எடுத்து பொட்டிக் ஆரம்பித்திருக்கிறார்.

‘36 வயதினிலே..!’ - நிஜத்தில் ஜெயித்த டிசைனர் சிந்து

``பொட்டிக்ல கலெக்‌ஷன்ஸ் வைக்கிற அளவுக்கு துணிகள்ல முதலீடு செய்ய என் கிட்ட காசு இல்ல. மணப்பெண்களுக்கு மெஹெந்தி போடுறது, சேலை கட்டி விடுறது, கேட்டரிங் சர்வீஸ்ல வேலை செய்யுறதுனு கிடைச்ச வேலைகளை யெல்லாம் பண்ணி காசு சேர்த்தேன்'' - சில நிமிடங்கள் அமைதியாகிறார் சிந்து.

``என் பொட்டிக்கை கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணேன். டிசைனர் ஆடைகளை எல்லா தரப்பு மக்களும் பயன்படுத்தனுங்கிற எண்ணத் துல நான் டிசைன் பண்ண ஆடைகளை வாடகைக்கு விட ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல சில மேக்கப் ஆர்ட்டிஸ்ட், போட்டோ கிராபர்ஸ்கூட சேர்ந்து வேலை செய்திட்டிருந் தேன். அப்பதான் மைனா நந்தினிக்கு டிசைன் பண்ற வாய்ப்பு கிடைச்சுது. அவங்களுக்கு நான் டிசைன் பண்ண டிரஸ் சோஷியல் மீடியாவுல வைரல் ஆச்சு. அடுத்து யாஷிகா ஆனந்த், ரோஷினி ஹரிப்பிரியன், பவித்ர லட்சுமி, வி.ஜே பார்வதினு நிறைய செலி பிரிட்டிகளுக்கு டிசைன் பண்ணிட்டேன். செலிபிரிட்டீஸ் நான் டிசைன் பண்ண டிரஸ்ல போட்டோஷூட் எடுத்து சோஷியல் மீடியாவுல அப்லோட் பண்ணுவாங்க. அது மூலமா எனக்கு நிறைய ஆர்டர் வர ஆரம்பிச் சுது. இன்னிக்கு நான் சக்சஸ்ஃபுல் பிசினஸ் வுமனா வளர்ந்திருக்கேன்.

‘36 வயதினிலே..!’ - நிஜத்தில் ஜெயித்த டிசைனர் சிந்து
‘36 வயதினிலே..!’ - நிஜத்தில் ஜெயித்த டிசைனர் சிந்து

டீன் ஏஜ்ல இருக்குற என் மகள், `அம்மா நீதான் என்னோட ரோல் மாடல்'னு சொல்றா. இதைவிட எனக்கு என்ன சந்தோஷம் இருக்கப்போகுது. கல்யாணத் துல நான் தொலைச்ச வாழ்க்கையை முழுமையா வாழணுங்கிற கனவு இருக்கு. ஒவ்வொரு தோல்வியிலும் ஒரு வாய்ப்பு இருக்கத்தான் செய்யுது. அதைத் தேடிக் கண்டுபிடிச்சிட்டா ஜெயிச்சிடலாம்'' என்கிற சிந்துவின் முகத்தில் சாதித்த பெருமிதம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism