Published:Updated:

திடீர் பிசினஸ் வாய்ப்பு... திகைப்பூட்டிய வெற்றி! - தனலட்சுமியின் சக்சஸ் ஸ்டோரி

தனலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
தனலட்சுமி

இந்த வேலைக்காகவே டூ வீலர் ஓட்டக் கத்துக்கிட்டேன். அதுவரைக் கும் இல்லத்தரசியா மட்டுமே இருந்ததால எனக்கு வெளியுலக அனுபவம் கிடையாது

திடீர் பிசினஸ் வாய்ப்பு... திகைப்பூட்டிய வெற்றி! - தனலட்சுமியின் சக்சஸ் ஸ்டோரி

இந்த வேலைக்காகவே டூ வீலர் ஓட்டக் கத்துக்கிட்டேன். அதுவரைக் கும் இல்லத்தரசியா மட்டுமே இருந்ததால எனக்கு வெளியுலக அனுபவம் கிடையாது

Published:Updated:
தனலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
தனலட்சுமி

“நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். அவசியம் வந்தா வேலைக்குப் போகலாம்னு நினைச்சேனே தவிர, பிசினஸ் பண்ணுவோம்னு கனவுலயும் நினைச்சதில்ல. ஆனா, அப்படி யான வாய்ப்பு வந்தபோது முடியும்னு உறுதியா நம்பினேன். அதுவே என்னை இவ்வளவு தூரம் நகர்த்தியிருக்கு”

- கார்ப்பரேட் கிஃப்டிங் துறை யில் கலக்கும் தனலட்சுமியின் நம்பிக்கை வார்த்தைகள் இவை. இல்லத்தரசியாக இருந்தவர்,

இன்று, பெரு நிறுவனங்களுடனான வர்த்தக நட்புறவைப் பெருக்கி, தொழில்முனைவோராக வெற்றி நடைபோடுகிறார்.

“அப்பா ரிட்டையர்டு தலைமை ஆசிரியர். தன் நாலு பிள்ளை களையும் முழு சுதந்திரத்துடன் வளர்த்தார். காலேஜ் முடிச்சதுமே கல்யாணம். கணவர் பெங்களூருல கார்ப்பரேட் கிஃப்டிங் கம்பெனி ஒண்ணுல வேலை செஞ்சார். சென்னையில் குடியேறினதும் கணவர் வேறு வேலைக்குப் போயிட்டார். அவர் முன்பு வேலை செஞ்ச கிஃப்டிங் கம்பெனியோடு வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. நானே ஆர்டர் பிடிச்சு, அந்த பெங்களூரு கம்பெனி கிட்ட இருந்து கிஃப்ட் பொருள்களை வாங்கி விற்பனை செய்யணும். சென்னை யிலுள்ள முன்னணி தனியார் கம்பெனியில மூணு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முதல் ஆர்டரைப் பிடிச்சேன்.

இந்த வேலைக்காகவே டூ வீலர் ஓட்டக் கத்துக்கிட்டேன். அதுவரைக் கும் இல்லத்தரசியா மட்டுமே இருந்ததால எனக்கு வெளியுலக அனுபவம் கிடையாது. சரளமா ஆங்கிலம் பேசத் தெரியாது. மார்க் கெட்டிங் விஷயமா தினமும் அலைவேன். அப்போ கூகுள் மேப் வசதிகள் இல்லாததால, வெளி யிடத்துக்குப் போயிட்டு சரியா வீடு திரும்ப முடியாம தவிச்சிருக்கேன். இப்படி பல விஷயங்கள் எனக்கு சவாலா இருந்தாலும், என்னால சுயமா பிசினஸ் பண்ண முடியும்னு நிரூபிக்கணும் என்ற உறுதியோடு உழைச்சேன். மார்க்கெட்டிங் தொடர்பான எல்லா விஷயங்களை யும் போராடி கத்துகிட்டேன்.”

- விடாமுயற்சியுடன் உழைத்த தனலட்சுமி, முதல் வருடத்திலேயே ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து திறமையை நிரூபித்திருக்கிறார்.

“அப்போ கார்ப்பரேட் கிஃப்டிங் துறை பெரிசா பிரபலமாகலை. பலருக்கும் எங்களோட வேலையைப் பத்தி புரிய வைக்கிறதே சவாலா இருந்துச்சு. அதேசமயம், கார்ப்பரேட் கம்பெனிகளோட வளர்ச்சியும், ஊழியர்களை உற்சாகப்படுத்த அவங்க நடத்தும் பலவிதமான கொண்டாட்டங்களும் எங்க துறையினரின் வளர்ச்சிக்குப் பெரிசா உதவுச்சு. பெங்களூரு நிறுவனத்துடன் இணைஞ்சு சில வருஷங்கள் வேலை செஞ்ச நிலையில, ‘Mivik Ventures’ என்ற பெயர்ல தனி நிறுவனம் தொடங்கினேன்.

வாடிக்கையாளர் நிறுவனங்களின் தேவையை உணர்ந்து, அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி பரிசுப் பொருள்களை நாங்களே டிசைன் பண்ணிக் கொடுப்போம். அதேபோல அந்த நிறுவனங்களே டிசைன் செஞ்சு கேட்குறதுக்கு ஏற்பவும் பரிசுப் பொருளைத் தயாரிச்சு கொடுப்போம். வாடிக்கையாளர்களின் எதிர் பார்ப்பை, தரம், நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட் மற்றும் கால அளவுக்குள் டெலிவரி கொடுக்கிறதுலதான் எங்க வெற்றியே அடங்கியிருக்கு.

தனலட்சுமி
தனலட்சுமி

மருத்துவத்துறையிலுள்ள ஒரு கம்பெனி, தன்னோட வாடிக்கை யாளர்களுக்குப் பரிசா கொடுக்க பேனாக்கள் கேட்டிருந்தாங்க. எழுதும் போது மட்டும் பேனாவின் மேற் பகுதியில லோகோவுடன், அவங்க தயாரிக்கும் மாத்திரை மினியேச்சர் வடிவில் தெரியும்படி கேட்டிருந்தாங்க. இது மாதிரியான நுணுக்கமான வேலைகளை யெல்லாம், பேனா தயாரிக்கிற கம்பெனிகள் பெரும்பாலும் செய்துகொடுக்க மாட்டாங்க.

எனவே, இதுபோன்ற பரிசுப் பொருள்களுக்காக இந்தியாவின் பல்வேறு நகரங்கள்ல அல்லது வெளி நாடுகள்ல இருந்தும் உதிரி பாகங்களை வாங்குறதுன்னு நிறையவே மெனக் கெடணும். இதனாலதான், கார்ப்ப ரேட் கிஃப்டிங் நிறுவனங்களின் தேவை அதிகளவுல இருக்கு.

அன்பையும் நட்பையும் காலம் கடந்தும் நினைவு வெச்சுக்கவே பரிசுகள் கொடுக்கிறோம். ஒரு நிறுவனம் தன் வாடிக்கையாளர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புல உள்ளவங்களுக்கும், தன் பணியாளர் களுக்கும் பயன்பாட்டு அடிப்படை யிலான பரிசுப் பொருள்களைக் கொடுக்கவே அதிகம் விரும்புது. அந்த வகையில, விளையாட்டு வீரர் களுக்கான பொருள்கள், கைக் கடிகாரம், பைகள், பேனா, கேடயம், பெயின்டிங், போட்டோ ஆல்பம், கீ செயின், டி ஷர்ட், டைரி போன்ற பரிசுப் பொருள்களுக்கான ஆர்டர்கள் அதிகம் வரும். மருத்துவ மனை மற்றும் கல்வி நிறுவனங் களுக்கான பயன்பாட்டுப் பொருள்கள், கல்யாண ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் ஆர்டர்களுக்கும் வேலை செய்யுறோம்”

- சுவாரஸ்யம் நிறைந்த இந்தத் துறையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக நடைபோடும் தனலட்சுமி, ஆண்டுக்குச் சில கோடி ரூபாய் வர்த்தகம் செய்து அசத்து கிறார்.

திடீர் பிசினஸ் வாய்ப்பு... திகைப்பூட்டிய வெற்றி! - தனலட்சுமியின் சக்சஸ் ஸ்டோரி

“இந்த கோவிட் நேரத்துல மருத் துவத்துறை சார்ந்த பயன்பாட்டுப் பொருள்களுக்கான ஆர்டர்கள் அதிகம் வருது. மாஸ்க், தெர்மா மீட்டர், ஆக்ஸிமீட்டர், சானிட்டைசர் அடங்கிய கிஃப்ட் பாக்ஸை, சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களோட பணியாளர்களுக்குக் கொடுக்கிறாங்க. சி.எஸ்.ஆர் (Corporate Social Responsibility) சேவையின் கீழ சில தனியார் நிறுவனங்களும், பிற அமைப்புகளும் பல்வேறு அத்தியாவசியப் பொருள்களையும் மக்களுக்குக் கொடுத்து உதவுறாங்க.

ஆஸ்பத்திரிகளுக்கான பயன் பாட்டுப் பொருள்களுக்கான தேவையும் அதிகமிருக்கு. அதனால, வழக்கத்தை விடவும் கோவிட் நேரத்துல வியாபார வளர்ச்சி கூடியிருக்கு. நமக்கான வாய்ப்பு எப்படி வேணாலும் வரலாம். அதைச் சரியா பயன்படுத்தி, நம்பிக்கையோடு உழைச்சா நிச்சயம் ஜெயிக்கலாம்”

- தனலட்சுமியின் முகத்தில் வெற்றிப் புன்னகை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism