Published:Updated:

பத்தாவது ஃபெயில்... வாழ்க்கையில பாஸ்! - பெட்ஸ் உணவு பிசினஸில் கோடிகள் பார்க்கும் தம்பதி

ஜீரோ டு ஹீரோஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜீரோ டு ஹீரோஸ்

ஜீரோ டு ஹீரோஸ்

பத்தாவது ஃபெயில்... வாழ்க்கையில பாஸ்! - பெட்ஸ் உணவு பிசினஸில் கோடிகள் பார்க்கும் தம்பதி

ஜீரோ டு ஹீரோஸ்

Published:Updated:
ஜீரோ டு ஹீரோஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜீரோ டு ஹீரோஸ்
பிசினஸ்ல ஏற்கெனவே பிரபலமான தொழில்ல இறங்கி வெற்றி பெறுவது ஒரு ரகம். புது சந்தை வாய்ப்பை அறிமுகப்படுத்தி வெற்றி பெறுவது மற்றொரு ரகம். நாங்க இரண்டாவது ரகம். போட்டியாளர்கள் அதிகமிருந்தால் ஆட்டக்களம் இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்’’ என்கிற பிரமிளா லக்ஷ்மி - பிரபாகர் தம்பதி வெற்றிப் புன்னகையுடன் வரவேற்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

25 ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாடுகளில் இருந்துதான் வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவுகள் இந்தியாவுக்கு இறக்குமதியாகின. இந்தத் தொழிலுக்கான எதிர்கால வரவேற்பை முன்கூட்டியே கணித்த பிரமிளா - பிரபாகர் தம்பதி, ‘Taiyo’ (உதிக்கும் சூரியன்) என்ற பெயரில் மீன் உணவுக்கான உற்பத்தி நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கினர். தற்போது மீன்கள் மட்டுமல்லாமல் நாய், பூனை, ஆமை, ஊர்வன இனத்தைச் சேர்ந்த இகுவானா உள்ளிட்ட பல வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவுகளைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

பத்தாவது ஃபெயில்... வாழ்க்கையில பாஸ்! - பெட்ஸ் உணவு பிசினஸில் கோடிகள் பார்க்கும் தம்பதி

சென்னை, கொளத்தூரில் உள்ள ஷோரூமில் தங்கள் வெற்றிக்கதையை பகிர்ந்தனர்... “கல்யாணமான புதுசுல, சென்னை பர்மா பஜார்ல எலெக்ட்ரானிக் ஷோரூம்ல கணவர் வேலை செய்தார். பெரிசா வருமானமில்லை. 1994-ல், மீன் பண்ணைகள்ல வண்ண மீன்களை வாங்கி, எழும்பூர்ல சின்ன கடையில் வெச்சு விற்பனை செஞ்சோம். தினமும் 200 ரூபாய் கிடைக்கும். அப்போ சீனா, மலேசியாவில் இருந்துதான் மீன்களுக்கான உணவுகள் இந்தியாவுக்கு இறக்குமதியாகும்.

வியாபாரத்துக்காக அடிக்கடி மலேசியா போகிற உறவினர்கள் மூலமா, அங்கிருந்து மீன் உணவுகளை நாங்க ஹோல்சேலா வாங்கினோம். அதை டூவீலர்ல நிறைய கடைகளுக்குக் கொண்டுபோய் விற்பனை செய்தார் கணவர். நான் கடையைக் கவனிச்சுக்கிட்டேன். இந்தத் தொழிலுக்கு அப்போ வரவேற்பில்லை. 2002-க்குள் எங்க பிசினஸ் சூடுபிடிச்சு வாடிக்கையாளர்கள் அதிகமானாங்க.

வெளிநாடுகளுக்குப் போய் மீன் உணவுத் தொழில் பத்தி கணவர் விவரங்கள் தெரிஞ்சுக்கிட்டு வந்தார். திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்கரணை கிராமத்தில் ஃபேக்டரி தொடங்கினோம். இந்தியாவில் மீன் உணவு உற்பத்திக்கான முதல் நிறுவனம் எங்களுடையதுதான். ஆரம்பத்துல ஒரு மாசத்தில் சில நாள்களுக்குத்தான் உற்பத்தி நடக்கும். பிறகு, படிப்படியா வருஷம் முழுக்கவும் உற்பத்தியை அதிகரிச்சோம். விற்பனைக்கான இந்த ஷோரூமையும் தொடங்கினோம். அடுத்த பத்தே வருஷத்துக்குள் இந்தியா முழுவதும் மட்டுமல்லாம, சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிற அளவுக்கு வளர்ந்தோம்” என்று புன்னகைக்கிறார் நிறுவனத்தின் இயக்குநரான பிரமிளா.

பிசினஸில் தங்கள் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து விவரிக்கிறார், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பிரபாகர்... “அப்பல்லாம் நடுத்தர மக்களும் வசதியானவங்களும்தாம் வளர்ப்புப் பிராணிகள் வெச்சிருப்பாங்க. அதனால குறைவான விலைக்கு விற்பது, அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களையும் கவர்வதுன்னு பல யுக்திகளைக் கையாண்டோம். உலகில் எங்கு வளர்ப்புப் பிராணிகளுக்கான கண்காட்சி நடந்தாலும் கலந்துகிட்டு ஸ்டால் போட்டோம். புது விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, தொழில் வாய்ப்புகளாக மாற்றினோம்.

2014-லிருந்து எங்க பிசினஸ் பெரிய அளவில் வளர்ந்துச்சு. ஆமையை வீட்டில் வளர்த்தா அந்த வீடு வௌங்காதுன்னு சொல்வாங்க. ஆனா, ஆமைக்கான உணவை மாசத்துக்கு 30 டன் தயாரிக்கிறோம். அப்போ ஆமை வளர்ப்போர் எண்ணிக்கையை யூகிச்சுக்கோங்க. முயல், வெள்ளெலி, லவ் பேர்ட்ஸ், இகுவானா உட்பட பத்துக்கும் மேற்பட்ட வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவுகளைத் தயாரிக்கிறோம்” - படபடவெனப் பேசுபவர், பத்தாவது ஃபெயில் என்பது ஆச்சர்யமான உண்மை. பிரமிளா பி.காம் பட்டதாரி. இருவரையும் இணைத்திருக்கிறது காதல்.

பத்தாவது ஃபெயில்... வாழ்க்கையில பாஸ்! - பெட்ஸ் உணவு பிசினஸில் கோடிகள் பார்க்கும் தம்பதி

‘`படிப்பு இல்லைன்னாலும் திறமையும் உழைப்பும் இருந்தா வெற்றி பெறலாம் என்பதற்கு என் கணவர் உதாரணம்’’ என்ற பிரமிளா, “மீன் தொட்டியில் வைக்கும் மீன் பொம்மைகள் உள்ளிட்ட அலங்கார பொம்மை களுக்கான வரவேற்பும் இப்போ அதிகமாகிடுச்சு. அதுக்காகவும் ஓர் உற்பத்திக்கூடத்தை வெச்சிருக்கோம். அதிலும் கணிசமான வருவாய் கிடைக்குது. மீன் தொட்டி, பறவைகளுக்கான கூண்டு உட்பட நாங்க தயாரிக்காத, அதேநேரம் வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பதற்குத் தேவையான மற்ற பொருள்களையும் இறக்குமதி செஞ்சு விற்கிறோம்” என்றார்.

இந்திய மார்க்கெட்தான் இவர்களின் முதல் சாய்ஸ். ஆண்டுக்கு 4,000 டன் உற்பத்தி, 200 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு, ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் டர்ன் ஓவர் என இந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.

“26 வருஷத்துக்கு முன்பு 25,000 முதலீட்டில்தான் தொழிலைத் தொடங்கினோம். லாபத்தை, தொழில்லயே முதலீடு செஞ்சோம். சவால்களையெல்லாம் சரிசெய்தோம். வெற்றி கிடைச்சது. லாக்டெளனால் வெளியில் போக முடியாத சூழலில், வீட்டில் பெட்ஸ் வளர்ப்போர் எண்ணிக்கை அதிகமாகிடுச்சு. உற்பத்தியும் விற்பனையும் எங்களுக்கு 25 சதவிகிதம் அதிகமாகியிருக்கு. எங்க மகள்கள் ரெண்டு பேரும் இப்போ ஆன்லைன் வியாபாரத்தைத் தொடங்கியிருக்காங்க. வருங்காலத்தில் பெட்ஸுக்கான பொழுதுபோக்கு ஷாப் ஆரம்பிக்கும் திட்டம் வெச்சிருக் கோம்” - தம்ஸ்அப் காட்டிச் சிரிக்கின்றனர் இருவரும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1,000 ரூபாய் முதலீடு... பல ஆயிரங்கள் வருமானம்!

வீட்டிலிருந்தபடியே மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருமானம் ஈட்ட விரும்புபவர்களுக்கு பிரபாகர் - பிரமிளா தம்பதி கூறும் ஆலோசனைகள்...

பத்தாவது ஃபெயில்... வாழ்க்கையில பாஸ்! - பெட்ஸ் உணவு பிசினஸில் கோடிகள் பார்க்கும் தம்பதி
  • ஆரம்பகட்டத்தில் மீன் வளர்க்க பழைய ஹார்லிக்ஸ் பாட்டில்களே போதும். 50 பாட்டில்களைச் சிறிய இடத்தில் நெருக்கமாக அடுக்கிவைத்து மீன்களை வளர்க்கலாம்.

  • தரமான ஆண், பெண் மீன்களை வாங்குவது முக்கியம். இனச்சேர்க்கை நேரம் தவிர, மற்ற நேரங்களில் அனைத்து மீன்களையும் தனித்தனி பாட்டில்களில் மட்டுமே வளர்க்க வேண்டும்.

  • வீட்டில் வளர்த்து விற்க கப்பீஸ் ஃபிஷ் (Guppies Fish), ஃபைட்டர் ஃபிஷ் (Betta Fish) மீன்கள் சிறந்தவை.

  • மீன் வளர்ப்புக்குச் சுத்தமான நிலத்தடி நீர் முக்கியம். அவ்வப்போது தண்ணீர் மாற்றுவது, உணவு தவிர வேறு செலவுகள் இல்லை. பிறந்து மூன்று மாதத்திலிருந்து மீன்களை விற்கலாம்.

  • மீன்களின் நிறத்தைப் பொறுத்து அவற்றின் மதிப்பு அதிகரிக்கும். நீண்டகால அனுபவத்தின் மூலம், இனக்கலப்பு முறையில் மீன்களின் நிறத்தை மாற்றி விற்பனை வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம்.

  • இந்தத் தொழிலைச் சிறப்பாக செய்துவரும் சிலரை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்று, முதலில் சோதனை முயற்சியில் ஈடுபட்டு சாதகமான சூழல் ஏற்பட்டால் பிறகு, தொழிலை படிப்படியாக விரிவுபடுத்தலாம்.

  • 1,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கி னாலே, மாதம் சில ஆயிரங்கள் லாபம் ஈட்டலாம். அனுபவம் கூடக்கூட தொழிலை விரிவுபடுத்தினால் வருமானம் அதிகரிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism