Published:Updated:

மனசுல இருந்த காயத்தையெல்லாம் பலகாரமா சுட்டுத் தள்ளிட்டேன்!

 செளந்தரம் ஆச்சி
பிரீமியம் ஸ்டோரி
செளந்தரம் ஆச்சி

- செளந்தரம் ஆச்சியின் வெற்றிக்கதை

மனசுல இருந்த காயத்தையெல்லாம் பலகாரமா சுட்டுத் தள்ளிட்டேன்!

- செளந்தரம் ஆச்சியின் வெற்றிக்கதை

Published:Updated:
 செளந்தரம் ஆச்சி
பிரீமியம் ஸ்டோரி
செளந்தரம் ஆச்சி

‘`அதிரசத்தை இப்புடி திருப்பி விடணும். மணக்கோலத்துக்கு தேங்கா எடுத்தாச்சா? இன்னிக்கு நைட்டு சென்னை போற அயிட்டம் அது... வெரசா பண்ணுங்க...’’ - ஓர் இசை ஒருங்கிணைப் பாளர்போல தன் பணியாளர்களிடம் கையும் வாயும் பேசிக்கொண்டே இருக்கிறது சௌந்தரம் ஆச்சிக்கு.

‘‘இருங்கப்பா டீ சாப்ட்டு வந்துடுறேன்’’ என்று அவர்களிடம் பிரேக் சொல்லிவிட்டு வந்தவர், ‘‘செட்டிநாடு பெருமையைச் சொல் லால ஆரம்பிக்க முடியாது, சுவையாலதான் ஆரம்பிக்க முடியும்... இந்தாங்க...’’ என்றபடி நம் கையில் இரண்டு இனிப்புச் சீடையைக் கொடுத்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ‘செளந்தரம் செட்டிநாடு ஸ்வீட்ஸ் அன் ஸ்நாக்ஸ்’ என்ற பெயரில் வீட்டுச் சுவையில் தரமான திண்பண்டங்களைத் தயார் செய்து தமிழகம் முழுக்க விற்பனை செய்துவருகிறார் செளந்தரம் ஆச்சி. இவரிடம் பணிபுரியும் 30 பேரில் 28 பேர் பெண்கள். கணவரின் விபத்து, மகனின் இழப்பு எனப் பெரும் துயரங்களை எல்லாம் கடந்து, இன்று தனக்கும் தன்னை நம்பியுள்ள பெண்களுக்கும் ஸ்திரமான பொருளாதாரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும் வெற்றியாளர்.

மனசுல இருந்த காயத்தையெல்லாம்
பலகாரமா சுட்டுத் தள்ளிட்டேன்!

‘`சென்னையில இருந்தோம். வீட்டுக்காரரு பில்டிங் கான்ட்ராக்ட் பொருள்கள் தொழில் பண்ணிட்டு இருந்தாரு. 1980-ல அவருக்கு ஏற்பட்ட விபத்துல வலது கை எலும்பு நொறுங்கிடுச்சு. ஓரளவு சரிபண்ணினாலும், பழைய நிலைமைக்கு வர வாய்ப்பில்லனு டாக்டருங்க சொல்லிட்டாக. காரைக்குடி பக்கத்துல இருக்குற சிறுவயல் கிராமம்தான் எங்க அம்மா வீடு. தொழிலை எல்லாம் மூடிட்டு, பொண்ணையும் பையனையும் கூட்டிக்கிட்டு அங்க வந்துட்டோம். அவுக ஆதரவுல இருந்துக்கிட்டு அக்கம் பக்கத்துல தைச்சுக் கொடுத்துட்டிருந்தேன். அந்த நேரத்துல, மதுரையில இருந்த எனக்குத் தெரிஞ்ச ஒருத்தவுக, செட்டிநாடு கை முறுக்கை வாங்கி அவுகளுக்கு பார்சல் அனுப்பச் சொன்னாக. கையில காசை வாங்கினதும், ‘அதை ஏன் நாம சுட்டு அனுப்பக் கூடாது’னு தோணுச்சு. எங்க ஊருல பலகார பக்குவத்துக்குப் புகழ் பெற்ற சேது ஆச்சிகிட்ட கேட்டேன். ‘நான் சொல்லித் தர்றேன்டி ஆத்தா...’னு தட்டிக்கொடுத்தவுக சொன்ன தைக் கேட்டு, நான் சுத்துன முறுக்கு, நல்லா கல்கண்டு கணக்கா வந்துச்சு. காசு கொடுத்தவங்களுக்குக் கொரியரும் அனுப்பிட்டேன். அவுக முறுக்க சாப்பிட்டுட்டு ஆஹா ஓஹோனு சொன்னப்போதான், இதை தொழிலா செய்ய ஆரம்பிச் சேன். அது ஆச்சு 25 வருஷம்...’’ என்று சிரிப்பவர், தன் ஆரம்பக்கால முயற்சிகளை பகிர்ந்துகொண்டார்.

மனசுல இருந்த காயத்தையெல்லாம்
பலகாரமா சுட்டுத் தள்ளிட்டேன்!

‘`உள்ளூர்லேயே கொஞ்சம் கொஞ்சமா பலகாரம் செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சேன். இதுல எனக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்துச்சு. வாய்வழி விளம்பரம் கிடைச்சு, பல ஊர்களுக்கும் கொரியர் பண்ண ஆரம்பிச்சோம். இதுக்கிடையில

என் வீட்டுக்காரருக்கு கை கொஞ்சம் தேறினாலும், ‘நீ பண்ணுத்தா... நான் கூடமாட பாத்துக்குறேன்’னு சொல்லி எனக்கு உறுதுணையா இருக்க ஆரம்பிச்சாரு. 3,000 ரூபாய்க்கு ஸ்கூட்டர் ஒண்ணு வாங்கி டெலிவரி பண்ணுற அளவுக்கு இதுல காலூன்று னதும் சிறுவயல்ல இருந்து காரைக் குடிக்கு வந்துட்டோம். அதுக்கு அப்புறம்தான் பெரிய கஸ்டமருங்க நிறைய கிடைக்க ஆரம்பிச்சாக’’ என்பவருக்குத் தொழிலில் ஏற்றம் கிடைக்க, இன்னொரு பக்கம் வாழ்வில் துயர் அழுத்தியிருக்கிறது.

மனசுல இருந்த காயத்தையெல்லாம்
பலகாரமா சுட்டுத் தள்ளிட்டேன்!
மனசுல இருந்த காயத்தையெல்லாம்
பலகாரமா சுட்டுத் தள்ளிட்டேன்!

‘`தொழில் நல்லா போய்க்கிட்டு இருந்த நேரத்துல, என் மகன் விபத்துல இறந்துட்டான். ஒடம்புலயும் மனசுலயும் சுத்தமா தெம்பு போச்சு. ஆனாலும், என் மகளுக்காக என்னை நானே தேத்திக்கிட்டு மறுபடியும் அடுப்புல உக்கார ஆரம்பிச்சேன். மனசு சோர்வாகும்போதெல்லாம் எம்.எஸ்.உதயமூர்த்தி புத்தகங்களை படிப்பேன். ஏதோ நாமளும் தொழில் பண்றோம்னு செய்யாம, இந்தத் தொழில்ல நான் தனிச்சுத் தெரியுற அளவுக்கு இப்போ அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கேன். கஸ்டமர் கேட்குற நேரத்துல சரியா டெலிவரி கொடுக்குறது, தரம், சுவைனு இதெல்லாம் நம்மகிட்ட இம்மியளவும் பிசகாது. அதனாலதேன், இப்போ காரைக்குடியிலேயே எங்க பலகாரம் விலை அதிகம்னாலும் கஸ்டமருங்க எங்களைத் தேடி வர்றாக. வி.ஐ.பி கஸ்டமருங்க கிடைச்சதுக்குக் காரணமும் அதான்’’ - இவருடைய கைப்பக்குவத்தில் தயாராகும் ஸ்வீட்ஸ் அன் ஸ்நாக்ஸுக்கு தமிழகம் அறிந்த பேச்சாளர்கள், ஐ.ஏ.எஸ்-கள், சினிமா நடிகர்கள் எனப் பலரும் ரசிகர்கள்.

மனசுல இருந்த காயத்தையெல்லாம்
பலகாரமா சுட்டுத் தள்ளிட்டேன்!
மனசுல இருந்த காயத்தையெல்லாம்
பலகாரமா சுட்டுத் தள்ளிட்டேன்!

‘‘தேன்குழல் முறுக்கு, கலகலா, தட்டை, கார முறுக்கு, அச்சு முறுக்கு, அதிரசம்னு 13 அயிட்டங்களுக்கும் மேல செய்றோம். ஸ்வீட், ஸ்நாக்ஸ் மட்டுமல்லாம ஊறுகா, வத்தலும் செஞ்சு கொடுக்குறோம். எங்க தயாரிப்பு முறையைப் பல நிறுவனங் களும் பாராட்டுறாக. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில

எம்.பி.ஏ படிக்குற புள்ளைக மத்தியில பேச என்னைக் கூப்பிட்டாக. காரைக் குடி அழகப்பா பல்கலைக்கழகம் ‘ஹார்டு வொர்க்கர்’னு எனக்கு விருது கொடுத்திருக்கு’’ எனும்போது பெருமை அவர் முகத்தில்.

‘`எங்கிட்ட வேலைபார்க்குற 30 பேர்ல, 28 பேரு பொண்ணுங்க. ‘குடும்பத்தைக் காப்பாத்த என்ன செய்யலாம்’னு மருகின எனக்கு வழிகாட்டின சேது ஆச்சி மாதிரி, நானும் இவுகளுக்கு ஒரு வழிகாட்டு றதை என் கடமையா நினைக்கிறேன். காலையில 9 மணியில இருந்து நைட்டு 9 மணிவரை வேலை இருக்கும். எல்லா கஷ்டத்தையும் தாண்டி சொந்த வீடு, காருனு இன்னிக்கு நல்லா இருக்கேன். பொண்ணுங்க உழைக்கத் துணிஞ்சுட்டா கஷ்ட மெல்லாம் கரைஞ்சு போயித்தானே ஆகணும்?!’’

- தானே சாட்சியாகக் கேட்கிறார் சௌந்தரம் ஆச்சி.