Published:Updated:

டாக்டர் சொன்ன அட்வைஸ்... பிசினஸ் ஆக மாறிய கதை!

புவனேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
புவனேஸ்வரி

கடையில விக்குற கலப்பட எண்ணெயில் இருந்து தப்பிக்க, செக்கு எண்ணெய்க்கு மாறி னோம். அதுலயும் கலப்படம்.

டாக்டர் சொன்ன அட்வைஸ்... பிசினஸ் ஆக மாறிய கதை!

கடையில விக்குற கலப்பட எண்ணெயில் இருந்து தப்பிக்க, செக்கு எண்ணெய்க்கு மாறி னோம். அதுலயும் கலப்படம்.

Published:Updated:
புவனேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
புவனேஸ்வரி

``எங்க வீட்டுல ஏசி, ஃபிரிட்ஜ், கிரைண்டர், கட்டில், மெத்தைனு எதுவும் இல்லை. எளிமை யான தற்சார்பு வாழ்க்கையை வாழப் பழகிட்டு இருக்கோம். அதன் ஒரு அங்கமா நான் தேடிப்போன செக்கு எண்ணெய்தான், இன்னிக்கு என் தொழிலா மாறியிருக்கு’’ என்கிறார் திருச்சியைச் சேர்ந்த புவனேஸ்வரி.

பட்டதாரி பெண்ணான புவனேஸ்வரிக்கு வயது 33. இன்று மூன்று செக்குகளின் உரிமை யாளராக இருக்கும் இவர், ஐந்து வருடங்களுக்கு முன் ஓர் இல்லத்தரசி. எந்தப் புள்ளியில் ஆரம்பித்தது இந்தப் பயணம்? சொல்கிறார்...

``கல்யாணத்துக்கு அப்புறம் அடுத்தடுத்து ரெண்டு குழந்தைகள். அதுக்கு அப்புறம் கொஞ்சம் காலம் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டப்போ, ‘வாழ்க்கை முறையை மாற்றுங்க’னு டாக்டர் சொன்னார். கணவரும் நானும் இது பத்தி நிறைய பேசி, படிச்சு, எடுத்த முதல் முடிவு... வீட்டுல இருந்து ஃபிரிட்ஜுக்கு ‘டாடா’ சொன்னது. கட்டில், மெத்தையை விட்டுட்டு தரையில் பாய் விரிச்சுப் படுத்தோம். சமையலில் நிறைய மாற்றங்கள் செஞ்சோம். அதுல முக்கியமானது, எண்ணெய்.

கடையில விக்குற கலப்பட எண்ணெயில் இருந்து தப்பிக்க, செக்கு எண்ணெய்க்கு மாறி னோம். அதுலயும் கலப்படம். அதனால, எள்ளு, கடலை, தேங்காய்னு எண்ணெய் தயாரிப்புக்கான பொருள்களை நாங்களே வாங்கி, செக்குல கொடுத்து ஆட்டி வாங்கிப் பயன்படுத்தினோம். அப்போ நான் யோகா க்ளாஸ் போயிட்டு இருந்தேன். அங்க பலரும் என்னை பார்த்துட்டு செக்கு எண்ணெய்க்கு மாற விரும்பினதோடு, ‘எங்களுக்கும் நீங்களே பொருள்கள் எல்லாம் வாங்கி ஆட்டிக் கொடுக்குறீங்களா?’னு கேட்க, நானும் செஞ்சேன். ஆனா அப்படி கேட்குறவங்களோட எண்ணிக்கை அதிகமாகிட்டே போக, நாமளே செக்கு போட்டா என்னனு தோணுச்சு. கணவர் முதலீடு செய்து கைக் கொடுக்க, 2017-ல செக்கை ஆரம்பிச்சேன்’’ என்பவர், தொழிலை தொடங்கியபோது எதிர்பார்த்த வரவேற்பு இல்லாதது பற்றி பகிர்ந்தார்.

டாக்டர் சொன்ன அட்வைஸ்... பிசினஸ் ஆக மாறிய கதை!

‘`ஆரம்பத்துல, தெரிஞ்சவங்க மட்டுமே கஸ்டமரா இருந்ததால ஒரு தொழிலை நடத்த அது போதுமானதா இல்ல. இன்னொரு பக்கம், வீடு, குழந்தைகள், செக்குனு எல்லாத் தையும் பார்த்துக்கிறது எனக்கு மலைப்பா இருக்க, கணவர் கொடுத்த சப்போர்ட்ல அதை கடக்க முடிஞ்சது. நாள் ஆக ஆக, எங்க எண்ணெயோட தரமே மக்களை எங்ககிட்ட கொண்டுவந்து சேர்த்து, எங்க தொழிலை காப்பாத்தி கொடுத்துச்சு. எந்தக் கலப்படமும் இல்ல. செக்குல ஆட்டிக்கிட்டு இருக்கும்போதே வந்து பார்க்கலாம்; பாத்திரம் எடுத்துட்டு வந்து வாங்கிட்டுப் போகலாம். இப்படி நாங்க கொடுத்த தர உத்தரவாதம்தான், ஒரு செக்கு, இப்போ மூணு செக்கா வளர்ந்திருக்க கார ணம். மூணு பேர் எங்ககிட்ட வேலை பாக்குறாங்க. ஆரம்பத்துல கஷ்டப்பட்டாலும், இப்போ நல்லாருக்கோம். தொடர்ந்து, பாரம்பர்ய அரிசி, சிறுதானிய தீனி, இயற்கை, மூலிகை பொருள்கள்னு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். மேலும், செக்குல எண்ணெய் ஆட்டுறது குறித்து இலவச பயிற்சியும் கொடுத்துட்டு வர்றோம். நம்மகிட்ட பயிற்சி பெற்ற சிலர் சொந்தமா செக்கு வெச்சிருக்காங்க. லாபநோக்குல இதை நாங்க ஆரம்பிக்கலை னாலும், இப்போ இதுல வர்ற வருமானம் நாங்க எதிர்பார்க்காதது. தொடர்ந்து, செக்கை இன்னும் பல தொழில்முனைவோர்கள்கிட்ட யும், செக்கு எண்ணெயை மக்கள்கிட்டயும் கொண்டுபோய் சேர்க்கணும்’’ என்று அக்கறை யுடன் சொல்லும் புவனேஸ்வரி, தன் வீட்டை யும் மரபு சார்ந்த கட்டுமானங்களுடன் கட்டி யுள்ளார்.

‘`செம்மண், செங்கல் கொண்டும், முடிஞ்ச வரை சிமென்ட்டை தவிர்த்தும் எங்க வீட்டை கட்டினோம். ஓட்டு சீலிங், வெளியே பெரிய திண்ணைனு நினைச்சதையெல்லாம் செயல் படுத்தினோம். வீட்டு கட்டுமானத்துக்கு மரங் களை வெட்டுறதை தவிர்த்து, 50 வருஷத்துக்கு மேலாக பயன்படுத்தின பழைய மரங்களை தேடித் தேடி வாங்கினோம். டைல்ஸ் இல்லை, சிமென்ட் தரைதான். செலவு குறைவு, நிறைவும் ஆரோக்கியமும் நிறைய’’ என்கிறார் உற்சாகமாக.

``செக்கு எண்ணெய் தொழில் பயிற்சி தேவைப்படுறவங்க இங்க வாங்க... இலவசமா கத்துட்டுப் போகலாம். நாம நாலு காசு சம்பாதிக்கிறதோடு மக்களோட ஆரோக்கியத் துக்கும் கைக்கொடுப்போம். அப்படி ஒரு தொழில் செய்யுற திருப்தியை வார்த்தைகள்ல சொல்ல முடியாது’’

- கமகமக்கும் செக்கு நல்லெண்ணெயை வாடிக்கையாளரின் பாத்திரத்தில் ஊற்றிய படியே சொல்கிறார் புவனேஸ்வரி.