Published:Updated:

இன்ஜினீயரிங் டு ஹோம் பேக்கிங்... ஸ்வேதாவின் ஸ்வீட் பிசினஸ்!

ஸ்வேதா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வேதா

நான் பார்த்திட்டிருந்த 9-5 வேலையில பெரிய ஆர்வம் இல்ல. வேற யாருக்காகவோ வேலை பார்க்குறதுக்கு பதிலா நாமளே முதலாளியானா என்னன்னு தோணுச்சு

காபி மக் பிடிக்காதவர்கள் யாராவது இருப் பார்களா..? காபி மக் பிடித்தவர்களுக்கு அதிலேயே கேக் செய்து கொடுத்தால் எப்படியிருக்கும் என்ற ஆர்வம்தான், சென்னையைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஸ்வேதாவை இந்தியாவின் டாப் 10 பெண் ஸ்டார்ட அப் தொழில்முனைவோராக அடையாளப் படுத்தியிருக்கிறது. ‘மக் கேக்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்திவரும் ஸ்வேதா, சன் டி.வியில் ஒளிபரப்பான ‘மாஸ்டர் செஃப்’ தமிழ் நிகழ்ச்சியில் டாப் 18 போட்டியாளராக வந்து கவனம் ஈர்த்தவர்.

இன்ஜினீயரிங் டு ஹோம் பேக்கிங்... ஸ்வேதாவின் ஸ்வீட் பிசினஸ்!

“நான் பார்த்திட்டிருந்த 9-5 வேலையில பெரிய ஆர்வம் இல்ல. வேற யாருக்காகவோ வேலை பார்க்குறதுக்கு பதிலா நாமளே முதலாளியானா என்னன்னு தோணுச்சு. நான் நல்லா கேக் செய்வேன். அதையே பிசினஸா பண்ணலாம்னு ஒரு பொறி தட்டுச்சு. கப் கேக் செஞ்சு 30 ரூபாய்க்கு விற்க ஆரம்பிச்சேன். சோஷியல் மீடியா மூலமா என் பேக்கிங் பிசினஸுக்கு வரவேற்பு அதிகரிக்க ஆரம்பிச்சது” - இன்ஜினீயர், ஹோம் பேக்கரான அனுபவத் துடன் பேச ஆரம்பித்தார் ஸ்வேதா.

இன்ஜினீயரிங் டு ஹோம் பேக்கிங்... ஸ்வேதாவின் ஸ்வீட் பிசினஸ்!
இன்ஜினீயரிங் டு ஹோம் பேக்கிங்... ஸ்வேதாவின் ஸ்வீட் பிசினஸ்!

“தினமும் புதுசா ஏதாவது முயற்சி பண்ணுவேன். அப்படிதான் ஒருநாள் கப் கேக்குக்காக தயாரிச்ச மாவை காபி மக்ல ஊத்தி ஓவன்ல வெச்சுப் பார்த்தேன். அழகான கேக் கிடைச்சுது. மக் கேக்ஸ் பிசினஸை ஆரம்பிச்சேன். கேக் வாங்குனா காபி மக் ஃப்ரீனு மார்க்கெட்டிங் பண்ணினேன்.

இன்ஜினீயரிங் டு ஹோம் பேக்கிங்... ஸ்வேதாவின் ஸ்வீட் பிசினஸ்!
இன்ஜினீயரிங் டு ஹோம் பேக்கிங்... ஸ்வேதாவின் ஸ்வீட் பிசினஸ்!

இப்போ கல்யாணம், பிறந்தநாள்களுக்கான கேக்குகளுக்கும் ஆர்டர் எடுத்துப் பண்றேன். பேக்கிங் பயிற்சிகளும் எடுக்கறேன். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு அப்புறம் இன்னும் நிறைய புது விஷயங்களைப் பண்ண முடியுது” எனும் ஸ்வேதாவின் கிரியேட்டி விட்டிக்கு அவர் செய்கிற வாழைப்பூ சில்லி கேக், கேரட் - சர்க்கரைவள்ளிக்கிழங்கு கேக், பச்சைப் பட்டாணி கேக் உள்ளிட்ட புதுமைகளே சாட்சி. இந்தியா முழுக்க மக் கேக் பிசினஸுக்கான கிளைகள் தொடங்குவதுதான் ஸ்வேதாவின் அடுத்த லட்சியமாம்.

ஆல் தி பெஸ்ட்!