Published:Updated:

டிஜிட்டல் பெயின்டிங்... டாப் கியரில் வாழ்க்கை... கலக்கும் பெண்கள்!

டிஜிட்டல் பெயின்டிங்
பிரீமியம் ஸ்டோரி
டிஜிட்டல் பெயின்டிங்

திருச்செந்தூர் பக்கத்துல இருக்கிற மூலக்கரைன்ற சின்ன கிராமத்துல இருந்துதான் டிஜிட்டல் பெயின்டிங் பண்ணிட்டு இருக்கேன்.

ஆதி மனிதன் குகையில் வரைந்த ஓவியங்கள் நவ யுகத்தில் டிஜிட்டல் பெயின்டிங்காக பரிணமித்திருக்கின்றன. டிஜிட்டல் பெயின்டிங்கில் கலக்கும் இரண்டு இளம்பெண்கள் தங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கின்றனர்.

நவீன தொழில்நுட்பத்தையும் தமிழ் பாரம்பர்யத்தையும் இணைத்து டிஜிட்டல் ஓவியங்கள் உருவாக்குகிறார் திருச்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினி. பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள், மீன் மற்றும் பூ விற்கும் பெண்களின் நவீன ஓவியங்கள் என இவரின் படைப்புகள் கவனம் ஈர்க்கின்றன.

பிரியதர்ஷினி
பிரியதர்ஷினி
 திவ்யா
திவ்யா

``சின்ன வயசுலேருந்தே ஓவியங்கள் வரையறேன். முறையா ஓவியம் கத்துக்கிட்டேன். ஆர்கிடெக்ச்சர் படிச்சிட்டிருந்தபோது விட்டுப்போன ஓவியப் பயிற்சியை, வேலைக்குப் போன பிறகு தான் மறுபடியும் தொடர்ந்தேன். நண்பர்களுக்கு திருமண வாழ்த்து, அழைப்பிதழ்கள் வரைஞ்சு கொடுத்துட்டு இருந்தேன். 2020-ல இங்கிலாந்து நிறுவனம் மூலமா குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு ஓவியங்கள் வரையும் வாய்ப்பு வந்ததும், முழு நேரமா இதுல இறங்கிட்டேன். தமிழகம் உள்பட கனடா, இலங்கையில இருந்து வெளியாகுற குழந்தைகளுக்கான தமிழ், ஆங்கில புத்தகங்களுக்கு கதாபாத்திரங்களை பெயின்ட் பண்ணிக் கொடுத்தேன். ஆன்லைன் ஸ்டோரையும் தொடங்கி, டி-ஷர்ட், காபி கப், ஹேண்ட் பேக்னு பல பொருள்கள்ல நான் வடிவமைச்ச கதாபாத்திரங்களை பிரின்ட் பண்ணி விற்பனை செய்யுறேன். ஆர்க்கிடெக்ட்டா சம்பாதிச்சதைவிட இப்போ அதிகமாவே சம்பாதிக்கிறேன். அடிப்படை பெயின்டிங் தெரிஞ்ச வங்களுக்கு டிஜிட்டல் பெயின்டிங் துறையில நல்ல எதிர்காலம் இருக்கு” என்கிறார் பிரியதர்ஷினி.

மனித முகங்களைத் தத்ரூபமாக கம்ப்யூட்டரில் வரைவது திருச்செந்தூரைச் சேர்ந்த திவ்யாவின் ஸ்பெஷல். தான் சம்பாதித்த பணத்தைச் சேர்த்து வைத்து ஆப்பிள் டேப் வாங்கி, டிஜிட்டல் பெயின்டிங் கில் அடுத்த கியரைத் தட்டியிருக்கிறார்.

``திருச்செந்தூர் பக்கத்துல இருக்கிற மூலக்கரைன்ற சின்ன கிராமத்துல இருந்துதான் டிஜிட்டல் பெயின்டிங் பண்ணிட்டு இருக்கேன். விருதுநகர்ல ஒரு தனியார் பல்கலைக்கழகத்துல விஸ்காம் முடிச்சேன். மனித முகங்களை வரையக் கத்துக்கிட்டு, நண்பர்களுக்கு வரைஞ்சு கொடுக்கத் தொடங்கினேன். முதன்முதல்ல ஓர் ஓவியத்துக்கு 100 ரூபாய் வாங்கினேன். யுனிவர்சிட்டியிலேயே முகம் தெரியாதவங்ககூட என்னைத் தேடி வந்து வரைஞ்சு வாங்கிட்டுப் போவாங்க. அப்பவே கம்ப் யூட்டர்லயும் வரைய கத்துக்கிட்டேன். படிப்பை முடிச்சதும் சென்னையில ஒரு தனியார் நிறுவனத்துல டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட்டா கொஞ்ச நாள் வேலை செஞ்சேன். முதல் லாக்டெளன்ல ஊருக்கு வந்தேன். அப்பதான், ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆரம்பிச்சு என் பெயின்ட்டிங்ஸை போஸ்ட் பண்ணினேன். மணமக்கள் முகத்தையே கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல வரையுற திருமண இன்விடேஷன், பிறந்தநாள் வாழ்த்துன்னு நிறைய ஆர்டர்ஸ் வர ஆரம்பிச்சுது. குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கும் வரைஞ்சு கொடுக்குறேன். சினிமா பாடல்கள், டீசர்களுக்கும் வொர்க் பண்ணச்சொல்லிக் கேட்டிருக்காங்க. லைஃப் இப்போ டாப் கியர்ல போயிட்டு இருக்கு” என்கிறார் திவ்யா.

ரைட்... ரைட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism