Published:Updated:

வாசனை தெரியாது... அறுசுவையோ அத்துப்படி! - ஹோட்டல் பிசினஸில் அசத்தும் செஃப் சிந்தி

செஃப் சிந்தி
பிரீமியம் ஸ்டோரி
செஃப் சிந்தி

வான்கோவர் போனபோது அங்கே சௌத் இந்தியன் உணவுகளுக்கான ரெஸ்டாரன்ட்டே இல்லை. அப்பதான் சௌத் இந்தியன் உணவுகளுக்காக அங்கே ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கிற ஐடியா வந்தது.

வாசனை தெரியாது... அறுசுவையோ அத்துப்படி! - ஹோட்டல் பிசினஸில் அசத்தும் செஃப் சிந்தி

வான்கோவர் போனபோது அங்கே சௌத் இந்தியன் உணவுகளுக்கான ரெஸ்டாரன்ட்டே இல்லை. அப்பதான் சௌத் இந்தியன் உணவுகளுக்காக அங்கே ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கிற ஐடியா வந்தது.

Published:Updated:
செஃப் சிந்தி
பிரீமியம் ஸ்டோரி
செஃப் சிந்தி

‘வாசனையைவிட ஆகச் சிறந்த நினைவு வேறில்லை’ என்றொரு பொன்மொழி உண்டு. வாசனை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா... ஒருவருக்கு பூ வாசம் பிடிக்கும் என்றால், இன்னொருவருக்கு, பிறந்த குழந்தையின் வாசம் பிடிக்கலாம். அந்த வாசம் ஆயுள் வரை நினைவை நிறைக்கும்.

``எனக்கும் அப்படித்தான். மழை பெய்த உடனே கிளம்புற மண் வாசனை, இன்ஸ்டன்ட் எனர்ஜியைத் தரும் காபி வாசனை, தோட்டத்தைக் கடக்கும்போது இழுக்கும் பூ வாசனை, புல் வாசனை... இப்படி நிறைய வாசங்கள் நினைவிலிருக்கு. நினைவா மட்டுமே இருக்கு...’’ என்கிறார், சென்னையைச் சேர்ந்த செஃப் சிந்தி வரதராஜுலு. சென்னையில் இரண்டு, மகாபலிபுரத்தில் ஒன்று என மூன்று ரெஸ்டா ரன்ட்டுகளை நடத்தும் சிந்திக்கு, கடந்த 30 வருடங்களாக வாசனை அறியும் திறன் கிடையாது. வாசமில்லாத வாழ்க்கை என்றாலும் அதில் வசந்தத்துக்குக் குறைவில்லை என்கிறார் சிந்தி.

``சிங்கப்பூர்ல பிறந்து, வளர்ந்தேன். அப்புறம் கனடாவில் 20 வருஷங்கள் இருந்தேன். சிங்கப்பூர்ல இருந்தபோது உலகம் முழுவதுமான அத்தனை உணவுக் கலாசாரத்தையும் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணிருக்கேன். அங்கேருந்து கனடாவுல உள்ள வான்கோவர் போனதும் அங்கேயும் உணவுக் கலாசாரம் தொடர்பான விஷயங்கள் என்னைக் கவர்ந்தன. அந்த ஆர்வம், ஹோட்டல் இண்டஸ்ட்ரிதான் எனக்கான துறைனு உறுதியா முடிவெடுக்கவெச்சது. கனடாவுலேருந்து நிறைய பேரை தென்னிந்தியாவுக்கு சமையல் தொடர்பான சுற்றுலா (கலினரி டூர்) கூட்டிட்டு வந்திருக்கேன். அதாவது, தென்னிந்தியா வோட கலாசாரத்தையும் உணவுமுறைகளையும் காட்டறதுக்கான டூர் அது. என் முன்னோர்கள் தென்னிந்தியாவுல வாழ்ந்திருக்காங்க. அதனால தென்னிந்திய கலாசாரப் பின்னணி எனக்குத் தெரியும்.

வாசனை தெரியாது... அறுசுவையோ அத்துப்படி! - ஹோட்டல் பிசினஸில் அசத்தும் செஃப் சிந்தி

வான்கோவர் போனபோது அங்கே சௌத் இந்தியன் உணவுகளுக்கான ரெஸ்டாரன்ட்டே இல்லை. அப்பதான் சௌத் இந்தியன் உணவுகளுக்காக அங்கே ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கிற ஐடியா வந்தது. பத்து வருஷங்கள் அப்படியொரு ரெஸ்டா ரன்ட் நடத்தின பிறகு அந்த உணவுகள் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு. எனக்குப் பரிச்சயமான கலாசாரம், உணவு, மொழினு தென்னிந்தியாதான் எனக்கான இடம்னு தோணவே இங்கேயே வந்துட்டேன்’’ என்பவர் சென்னையில் செட்டிலாகி 10 வருடங்களாகின்றன. 2012-ல் மகாபலிபுரத்தில் ‘லாட்டிட்யூட் 49’ என்ற உணவகத்தையும், சென்னையில் 2017-ல் ‘ஸோயு’ மற்றும் 2020-ல் ‘பம்ப்கின் டேல்ஸ்’ என மேலும் இரண்டு உணவகங்களையும் தொடங்கியிருக்கிறார். சூர்யா, ஜோதிகா, கவுதம் மேனன், சித் ராம், மணிரத்னம், சுஹாசினி, அனுஹாசன், உன்னி கிருஷ்ணன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என சிந்தியின் உணவகங்களுக்கு பிர பலங்கள் பலரும் வாடிக்கையாளர்கள்.

``2012-ல மாமல்லபுரத்துல என் முதல் ரெஸ்டாரன்ட்டை ஆரம்பிச்சபோது இந்தத் துறை பெண்களுக்கு ரொம்பவே சவாலானதா இருக்கும்னு சொன் னாங்க. சர்வீஸ் வேலைக்குக்கூட இந்தத் துறையில பெண்கள் கிடைக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க. அதை யும் மீறி எனக்கு பெண்கள் வேலைக்குக் கிடைச்சாங்க. இப்போதும் என் பேக்கரி யூனிட்ல, கிச்சன்ல, சர்வீஸ்லனு எல்லா ஏரியாவிலும் பெண்கள் இருக் காங்க. இந்தத் துறை எப்படியிருக்கும்னு தெரியாததுதான் பெண்கள் வரத் தயங்க காரணம். இது எவ்வளவு புரொஃபஷனலானது, இங்கே வளர்ச் சிக்கான வாய்ப்புகள் எப்படியிருக்கும்னு பலருக்கும் தெரியறதில்லை. சமையலும் பரிமாறுவதும் பெண்களோட இயல்பு லயே ஊறிப்போன விஷயங்கள். ஹோட்டல் இண்டஸ்ட்ரி பெண்களுக் கானதில்லைங்கிற பார்வை இப்போ மாற ஆரம்பிச்சிருக்கு. பெண்கள் இந்தத் துறையில அடியெடுத்துவைக்க இதுதான் சரியான நேரம். இந்தத் துறை, ஆண்கள் அதிகமா ஆதிக்கம் செலுத்துற துறைதான். ஆனா, பெண்களால வர முடியாத, சாதிக்க முடியாத துறை இல்லை...’’ நம்பிக்கை அளிப்பவர், ஆரம்பத்தில் பல சவால்களைக் கடந்தே இன்றைய நிலையை எட்டியிருக்கிறார்.

``கனடாவுலேருந்து இந்தியாவுக்கு வந்து ஹோட்டல் பிசினஸ் ஆரம்பிக் கிறேன்னு சொன்னபோது எனக்குத் தெரிஞ்ச பலரும் ஆச்சர்யமா பார்த் தாங்க. ‘அஞ்சு வருஷம் எனக்கான டைம்... அதுக்குள்ள இந்த பிசினஸ் வொர்க் அவுட் ஆகலைனா மறுபடி கனடாவுக்கே போயிடுவேன்’னு சொன் னேன். ஆனா, எதிர்பார்த்ததைவிட சூப் பரா போயிட்டிருக்கு’’ - சபதத்தில் ஜெயித்தவர், 30 ஆண்டுகளாக அசா தாரண சவாலுடன் வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

வாசனை தெரியாது... அறுசுவையோ அத்துப்படி! - ஹோட்டல் பிசினஸில் அசத்தும் செஃப் சிந்தி

``30 வருஷங்களுக்கு முன்னாடி, கனடாவுல இருந்தபோது ஒருமுறை கடுமையான ஃப்ளூ காய்ச்சலால பாதிக்கப்பட்டேன். அதுல எனக்கு வாசனை அறியும் தன்மை போயிடுச்சு. `அனோஸ்மியா'ங்கிற (Anosmia) வார்த்தையே அப்போ புதுசு. பலருக்கும் அது என்ன மாதிரியான பிரச்னைன்னே தெரியாது. கோவிட் காலத்துக்குப் பிறகு தான், வாசனை போற பிரச்னை பற்றி யும் அது நிரந்தரமா போறதை அனோஸ்மியானு சொல்றதையும் கேள்வியேபட்டாங்க பலரும். ஃப்ளூ பாதிச்சு அஞ்சாறு மாசங்களுக்கு எனக்கு வாசனை தெரியலை. பல டெஸ்ட்டுகளை எடுத்து, கடைசியா அனோஸ்மியானு உறுதிபடுத்தினாங்க டாக்டர்ஸ். கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தாலும், உண்மையை ஏத்துக்கப் பழகினேன். இப்போ கோவிட் காலத்துல இந்தப் பிரச்னை பற்றி பேசறதால இத்தனை வருஷங்கள் கழிச்சு மறுபடியும் டாக்டர்ஸ்கிட்ட பேசினேன். வாசனை உணர்வு திரும்ப ஏதாவது வாய்ப்பிருக்கு மானு கேட்டுக்கிட்டிருக்கேன். யாராவது தீர்வு கண்டுபிடிச்சா சந்தோஷம்தான்.

‘வாசனையே தெரியாம சமையல் வேலையா’ங்கிற கேள்வியை இன்னிவரைக்கும் எதிர்கொண்டுட்டு தான் இருக்கேன். சுவைக்கு நிகரா வாசனைதான் இந்தத் தொழிலுக்கு அடிப்படை. சொல்லப்போனா கனடாவுல என் முதல் ரெஸ்டாரன்ட்டை ஆரம்பிச்சபோதே எனக்கு வாசனை அறியும் திறன் போயிருந்தது. நான் நினைச்சிருந்தா வேற துறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்தான். ஆனா, அப்படி நினைக்கலை. வாசனை தெரியாட்டாலும் என்னோட மற்ற உணர்வுகள் முழுமையா இருக்கே... என்னால எல்லா சுவைகளையும் உணர முடியும். எந்த உணவு, எந்தப் பதத்துல இருக்குங்கிறதை என் வாய் மிகச் சரியா கண்டுபிடிச்சிடும். சமைச்சு முடிச்சதும் என் சக செஃப் மற்றும் உதவியாளர்கள் கிட்ட அந்த உணவு எப்படியிருக்குங் கிறதை தவறாம உறுதிபடுத்திக்குவேன். பலருக்கும் ஒரு உணவை பத்தி நினைச்ச தும் அதோட வாசனைதான் ஞாபகத் துக்கு வரும். என் விஷயத்துல ருசிதான் முக்கியம். ஒரு உணவுல என்னென்ன சேர்க்கறோம், எந்தளவு சூட்டில் சமைக்க றோம், சமைக்கிற பாத்திரத்தோட அளவுனு பல விஷயங்களையும் வெச்சு அது சரியா சமைக்கப்பட்டிருக்கா, இல்லையானு என்னால உறுதிசெய்ய முடியும்...’’ ஐம்புலன்களில் ஒன்று குறைந்தாலும் குறையொன்றுமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் சிந்தி.

``ஹோட்டல் இண்டஸ்ட்ரியெல்லாம் பெண்களுக்கு சரிப்பட்டு வராதுனு சொன்ன காலம் இன்னிக்கு இல்லை. இந்தத் துறைக்குள்ள வரணும்னு கனவுகள் இருந்தா உங்களுக்கான கதவுகள் இங்கே திறந்தே இருக்குங்கிறதை புரிஞ்சுக்கோங்க, விமர்சனங்களைக் கண்டுக்காதீங்க...’’ பெண்களுக்கு அழைப்புவிடுக்கும் சிந்திக்கு, சென்னை யிலேயே தொடர்ந்து வசிப்பது, புதுப்புது ரெஸ்டாரன்ட்டுகள் தொடங்குவது, இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாக வாழ்வது என சின்னச்சின்ன ஆசைகள் இருக்கின்றன.

அத்தனையும் வசப்படட்டும், கூடவே வாசமும்!