Published:Updated:

“பிடிச்ச விஷயத்தை பிசினஸா மாத்துங்க... சீக்கிரம் ஜெயிப்பீங்க!”

 ஷாமா
பிரீமியம் ஸ்டோரி
ஷாமா

- டெய்லரிங்கில் சாதிக்கும் ஷாமா

“பிடிச்ச விஷயத்தை பிசினஸா மாத்துங்க... சீக்கிரம் ஜெயிப்பீங்க!”

- டெய்லரிங்கில் சாதிக்கும் ஷாமா

Published:Updated:
 ஷாமா
பிரீமியம் ஸ்டோரி
ஷாமா

படித்த வேலையில் ஜெயிப் பவர்கள் ஒரு பிரிவினர் என்றால் பிடித்த வேலையில் சாதிப்பவர்கள் இன்னொரு பிரிவினர். சென்னையைச் சேர்ந்த ஷாமா, இரண்டாவது ரகம். படித்தது எம்.பி.ஏ. ஆனாலும் பிடித்த தையல்கலை வேலையில் உச்சம் தொட்டிருக்கிறார். அவரது தன்னம்பிக்கைக் கதை பலருக்கும் உத்வேகம் தரும். உழைக்கத் தூண்டும்.

“எனக்கு சொந்த ஊர் சென்னை. எம்.பி.ஏ படிச்சுட்டு ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்த்துட்டு இருந்தேன். திருமணம், குழந்தைனு பல பெண்களும் கரியர்ல சந்திக்கிற பிரேக் எனக்கும் வந்தது. தொடர்ந்து வேலைக்குப் போக முடியல. பிஸியா இருந்துட்டு வீட்டுல முடங்கினபோது அதுவே மிகப்பெரிய மன அழுத்தமா மாறுச்சு. அதுலேருந்து வெளிய வர என் மனசுக்குப் பிடிச்ச விஷயங்களைச் செய்ய ஆரம்பிச்சேன். எனக்கு விதவிதமா டிரஸ் பண்ணிக்கப் பிடிக்கும். எனக்கான ஆடைகளை நானே டிசைன் செய்யலாம்னு தையல் கத்துக்க ஆரம்பிச்சேன். தையல் தொடர்பா நிறைய கோர்ஸ் படிச்சேன். நான் தைக்கிற டிரஸ் டிசைன்ஸை பலரும் பாராட்ட ஆரம்பிச்சாங்க. சிலர் தனக்கும் அதே மாதிரி தைச்சுக்கொடுக்க முடியுமான்னு கேட்டாங்க. அப்பதான் டெய்லரிங்கை பிசினஸா மாத்துற எண்ணம் வந்தது. வெறும் ஏழாயிரம் ரூபாயையும் நம்பிக்கையையும் நம்பி பிசினஸ்ல இறங்கினேன்...’’ அறிமுகம் சொல்பவரின் அடுத்தடுத்த வளர்ச்சி ஆச்சர்யமளிக்கிறது.

“பிடிச்ச விஷயத்தை பிசினஸா மாத்துங்க... சீக்கிரம் ஜெயிப்பீங்க!”

‘`ஒரு கட்டத்துல தையல் சொல்லிக் கொடுக்க ஆசைப்பட்டு, எட்டு வருஷங்களுக்கு முன்னாடி ஆங்கிலத்துல யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். எனக்குத் தெரிஞ்ச டிசைனர் பிளவுஸ் மாடல்கள், தொடங்கி குழந்தைகளுக்கான ஆடைகள் வரை எல்லாத்துக்கும் வீடியோக்கள் பதிவிட ஆரம்பிச்சேன். வீடியோ தமிழ்ல இருந்தா இன்னும் பயனுள்ளதா இருக்கும்னு நிறைய பேர் சொன்னதால தமிழ்லயும் ஒரு சேனல் ஆரம்பிச்சேன். நேர்ல வந்து பயிற்சி எடுக்க ஆசைப்பட்டவங்களுக்காக சென்னை ஆலந்தூர்ல ஃபேஷன் இன்ஸ்டிட்யூட் ஒன்று ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி ஒரே ஒரு தையல் மெஷினோட ஆரம்பிச்ச பிசினஸ் இப்போ 40 மெஷின்களோடு வளர்ந்திருக்கு.கொரோனா சூழல்ல ஆன்லைன் மூலமா பயிற்சி வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சேன். அமெரிக்கா, துபாய், லங்கா, மலேசியா, கனடானு வெளிநாடுகள்ல வாழும் தமிழர்கள்கூட ஆன்லைன் மூலமா என்கிட்ட டெய்லரிங் கத்துக்கிட்டாங்க. பயிற்சி எடுத் துக்கிட்ட பல பெண்கள் இன்னிக்கு பிசினஸ் ஆரம்பிச்சிருக்காங்க.

‘எம்.பி.ஏ படிச்சிட்டு டெய்லரிங் பண்ணப்போறியா’ன்னு என்னை ஆரம்பத்துல பலர் கிண்டல் பண்ணியிருக்காங்க. ஆனா, அதையெல்லாம் நான் பெரிசா எடுத்துக்கல. என் கணவர் எனக்கு சப்போர்ட் பண்ணினார். நாம் படிச்ச துறையைவிட நமக்குப் பிடிச்ச துறையை கரியரா தேர்வு செஞ்சா ஈஸியா சக்சஸ் பார்க்க லாம்...'' தன்னம்பிக்கை குறையாமல் பேசும் ஷாமா, டெய்லரிங் பிசினஸில் ஈடுபட விரும்புவோருக்கான ஆலோசனைகளையும் பகிர்கிறார்.

“யார் வேணாலும் டெய்லரிங்கை பிசினஸா தொடங்கலாம். புது மெஷின் வாங்க முடியாதவங்க செகண்டு ஹேண்டு மெஷின் வாங்கி பிசினஸை தொடங்கலாம். ஒரு நாளைக்கு நாலு மணிநேரம் செலவு பண்ணாலே 500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஆனா, தொடர் பயிற்சி அவசியம். உங்க ஏரியா மக்களின் தேவைக்கேற்ப குர்தி, சல்வார், டிஷர்ட், டிசைனர் பிளவுஸ், ஷர்ட்டுனு எல்லாவிதமான டிரெஸ்ஸையும் தைக்கத் தெரிஞ்சுக்கோங்க. பயிற்சியாளராக ஆசையிருந்தா சான்றிதழ் படிப்பு முடிச்சு, அனுபவத்தோடு வகுப்புகள் எடுக்க ஆரம்பிக்கலாம். உங்களை எந்த அளவுக்கு அப்டேட் பண்ணிக்கிறீங்களோ, அந்த அளவுக்கு அடுத்தடுத்த வெற்றி தொடரும்’’ - மற்றவர்களுக்கும் நம்பிக்கை அளிக்கிறார் ஷாமா.