Published:Updated:

அன்று ரூ.50 கூலி... இன்று மாசம் ரூ.10 லட்சம் சம்பளம்... மேக்கப் துறையில் சாதிக்கும் ஸ்ரீதேவி

 ஸ்ரீதேவி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதேவி

சின்ன வயசுலேருந்தே எனக்கு மேக்கப்ல ஆர்வம் அதிகம். நிறைய வீடியோக்கள் பார்த்து, மேக்கப் பண்ணக் கத்துக்கிட்டேன். பார்ட் டைமா பியூட்டிஷியன் கோர்ஸும் படிச்சேன்

அன்று ரூ.50 கூலி... இன்று மாசம் ரூ.10 லட்சம் சம்பளம்... மேக்கப் துறையில் சாதிக்கும் ஸ்ரீதேவி

சின்ன வயசுலேருந்தே எனக்கு மேக்கப்ல ஆர்வம் அதிகம். நிறைய வீடியோக்கள் பார்த்து, மேக்கப் பண்ணக் கத்துக்கிட்டேன். பார்ட் டைமா பியூட்டிஷியன் கோர்ஸும் படிச்சேன்

Published:Updated:
 ஸ்ரீதேவி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதேவி

“சேலத்துலேருந்து படிக்கிறதுக்காக சென்னைக்கு வந்தேன். ‘கருவாச்சி, ஊர்நாட்டான்’னு சொல்லி கிண்டல் பண்ணாங்க. சென்னையைவிட்டே விரட்டி அடிக்கப் பார்த்தாங்க. ஆனா, அதே சென்னையில இன்னிக்கு நான் மாசம் பத்து லட்சம் ரூபாய் சம்பாதிக் கிறேன். விமர்சனங்களைக் கண்டு பயந்து ஓடியிருந்தா, இது சாத்தியமாகியிருக் காது’’ - பாசிட்டிவ்வாக ஆரம்பிக்கிறார் ஸ்ரீதேவி.

சேலம், எடப்பாடியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, பாடிஷேமிங்கை கடந்து மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக உருவெடுத்தவர்.

“எங்க அம்மா - அப்பாவுக்கு நாங்க மூணு பொண்ணுங்க. நான் தான் மூத்தவ. ‘மூணும் பொண்ணா?', ‘பொம்பளப் புள்ளைகள ஏன் வெளியூர்ல படிக்க வைக்கிறீங்க?', ‘பொம்பள புள்ளைக்கு ஏன் இவ்வளவு சுதந்திரம் கொடுக்குறீங்க?'னு கேட்டாங்க பலரும்.

அப்பா எதையும் கண்டுக்காம எங் களுக்கு சப்போர்ட் பண்ணாரு. காலேஜ் படிக்கிறதுக்காக ஊர்லேருந்து சென் னைக்கு வந்தேன். ‘சாப்பிடத் தெரியல, டிரஸ் பண்ணத் தெரியல, பேசத் தெரியல’ னு விமர்சனம் பண்ணாங்க. ஒரு கட்டத்துல நமக்கு சென்னையில வாழத் தகுதி இல்லையோனுகூட யோசிச்சிருக் கேன். நான் பின்வாங்கினா, என் தங்கச்சிங் களும் பாதிக்கப்படுவாங்க. அதனால் விமர்சனங்களை பாசிட்டிவ்வா மாத்திக்கப் பழகினேன். சென்னைக்கு ஏத்த மாதிரி மாடர்னா மாறினேன். ‘இந்த மூஞ்சிக்கு மாடர்ன் டிரஸ் தேவையா?’ னு அதையும் கிண்டல் பண்ணாங்க. எதையும் கண்டுக் காம தொடர்ந்து ஓட ஆரம்பிச்சேன்.

சின்ன வயசுலேருந்தே எனக்கு மேக்கப்ல ஆர்வம் அதிகம். நிறைய வீடியோக்கள் பார்த்து, மேக்கப் பண்ணக் கத்துக்கிட்டேன். பார்ட் டைமா பியூட்டிஷியன் கோர்ஸும் படிச்சேன். பிபிஏ படிச்சு முடிச்சிட்டு பியூட்டி பார்லர் வைக்கப் போறேன்னு சொன்னப்போ, ‘படிச்ச படிப்புக்கு ஏத்த வேலையைப் பாரு'ன்னாங்க பலரும். ஆனாலும், நான் உறுதியா இருந்தேன். 2017-ல் சென்னை ஊரப்பாக்கத்துல, நான் தங்கியிருந்த வீட்டுலயே சின்னதா ஒரு பார்லர் ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சாங்க.

அன்று ரூ.50 கூலி... இன்று மாசம் ரூ.10 லட்சம் சம்பளம்... மேக்கப் துறையில் சாதிக்கும் ஸ்ரீதேவி

அடுத்து மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டா என் தகுதியை வளர்த்துக்கிட்டேன். மார்கெட்டி ங்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். இன்ஸ்டாகிராம் வீடியோக்கள், ரீல்ஸ், போஸ்ட், ஸ்டோரீஸ் மூலமா ஃபாலோயர்ஸ் அதிகமானாங்க.

சில செலிபிரிட்டீஸ்கூடவும் வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். செலிபிரிட்டீஸ்கூட வொர்க் பண்ணபோது, ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைக்கிறது, உரிய மரியாதை கொடுக்காததுனு சில விஷயங்கள் என் மனசுக்குப் பிடிக்கலை. அதனால செலிபிரிட்டீஸுக்கு மேக்கப் பண்ணக் கூடாதுன்னு முடிவெடுத்தேன்’’- சம்பாத்தியத்தை விட சுயமரியாதை முக்கியம் என யோசித்த வருக்கு, பிசினஸில் கணவரின் பங்களிப்பும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

“2020-ம் வருஷம் சென்னை, வளசர வாக்கத்தில் என்னுடைய முதல் மேக்கப் ஸ்டூடியோவை தொடங்கினேன். மேக்கப் சார்ந்த பயிற்சி வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சபோது, போட்டோ கிராபரா அறிமுகமானவர்தான் என் கணவர் நவீன். பழகினோம், கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கணவரே பிசினஸ் பார்ட்னராகவும் இருக்கிறதால ஸ்ட்ரெஸ் இல்லாம வேலை செய்ய முடியுது.

50 ரூபாய்க்கு பெடிக்யூர் பண்ணி பிசினஸை தொடங்கின நான், இப்போ மாசம் பத்து லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டா, பயிற்சி யாளரா என் நிலைமையை உயர்த்திக்கிட்டேன்.

கிண்டல், கேலியும், விமர்சனமும் பண்ணவங்க எல்லாம் இப்போ என்னைப் பாராட்டுறாங்க. விமர்சனங்களைக் கண்டு பயந்து ஓடாம, அதையே பாசிட்டிவ்வா பார்க்கப் பழகிட்டா, வாழ்க்கையில ஜெயிச்சிடலாம்... நானே உதாரணம்'' என்று வெற்றிக்குறி காட்டுகிறார் ஸ்ரீதேவி.