ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோமில் டெய்லரிங் பிசினஸ்!

சுஜாதா தங்கமணி
பிரீமியம் ஸ்டோரி
News
சுஜாதா தங்கமணி

கொரோனா காலத்திலும் கெத்து காட்டும் சுஜாதா தங்கமணி

வீட்டிலிருந்தபடியே செய்கிற பிசினஸில்கூட 10 பேருக்கு வேலை கொடுக்க முடியும்; மாதம் ஒரு லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் கோவில்பட்டியைச் சேர்ந்த டெய்லர் சுஜாதா தங்கமணி.

``காலேஜ் படிக்கிறப்போ டெய்லரிங் கத்துக்கிட்டேன். கல்யாணத்துக்குப் பிறகு, அப்படியொரு விஷயத்தையே மறந்துட்டு குடும்பம், குழந்தைகள்னு இருந்துட்டேன். தனிக்குடித்தனம் போனதும் நமக்குத் தெரிஞ்ச டெய்லரிங்கை வெச்சு நாமளும் வீட்ல இருந்தபடியே பிசினஸ் செய்யலாமேன்னு ஆரி எம்ப்ராய்டரி கத்துக்கிட்டேன். என் ஜாக்கெட்ல நான் பண்ணியிருந்த வொர்க்கை பார்த்த பக்கத்துவீட்டு காலேஜ் பொண்ணு சுடிதார் தைச்சு தரச்சொல்லிக் கேட்டாங்க. தைச்சுக் கொடுத்தேன். அதைப் பார்த்த அவங் களோட ஃப்ரெண்ட்ஸும் கேட்க, அவங்களுக் கும் தைச்சுக் கொடுத்தேன். கூடவே, ஆரி வொர்க்ல கிளாஸும் எடுக்க ஆரம்பிச்சேன்.

இந்த நேரத்துல, எங்க ஏரியாவுல தையல் கடை நடத்திக்கிட்டிருந்த ஒருத்தங்க, அதைத் தொடர்ந்து நடத்த முடியாம, மெஷின்களை எனக்கு வித்தாங்க. கூடவே அவங்க கிட்ட வேலைபார்த்த பொண்ணுக்கும் வேலை கொடுக்கச் சொன்னாங்க. வாங்கின மெஷின்களை எங்க வீட் டோட தரை தளத்துல வெச்சு சின்னதா பிசினஸை ஆரம்பிச்சேன்.

இதைப் பார்த்துட்டு, கஷ்டப்படுற குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பொண்ணு வேலைகேட்டு வந்தாங்க. இதுக்கு நடுவுல ஒரு கண்ணுல மட்டும் பார்வை இருக்கிற பொண்ணு ஒருத்தங்க என்கிட்ட ஆரி வொர்க் கத்துக்கிட்டு, `எனக்கும் வேலை கொடுங்கக்கா’ன்னு கேட்டாங்க. இந்த மூணு பேரைப் பார்த்துட்டு கணவரை இழந்த லேடி ஒருத்தங்க `எனக்கு டெய்லரிங், எம்ப்ராய்டரிங் ரெண்டுமே தெரியாது. சொல்லித் தந்து வேலை தர்றீங்களா’ன்னு கேட்டாங்க. இப்போ எங்க ஏரியாவுல இருக்கிற பத்து பெண்கள் என்கிட்ட வேலை பார்க்கிறாங்க. பிசினஸ் ஆரம்பிச்சு 15 வருஷங்களாச்சு’’ என்கிற சுஜாதா, வாய் வழி விளம்பரத் தாலேயே வளர்ந்திருக்கிறார்.

‘‘என்கிட்ட வேலை பார்க்குற வங்க வீட்டு வேலைகளை முடிச்சிட்டு அவங்களுக்கு வசதிப் பட்ட நேரத்துல வந்துதான் வேலைபார்ப்பாங்க. ஆனா, வாரக்கூலியா ஐயாயிரம், ஆறாயிரம் வாங்குற அளவுக்கு கடினமா உழைப்பாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் குடும்பத் துக்குத்தான் முதலிடம்” என்ப வருடைய பிசினஸ், கொரோனா நேரத்திலும் தொய்வின்றி போகிறதாம்.

‘‘கொரோனா நேரத்துலேயும் எளிமையா திருமணங்கள் நடந்து கிட்டுத்தான் இருக்கு. `திடீர்னு கல்யாணம் ஃபிக்ஸாயிடுச்சு. பிளவுஸ் தைச்சுக் கொடுங்க’ன்னு வராங்க. என்கிட்ட வேலை பார்க் கிறவங்க இப்போ வொர்க் ஃப்ரம் ஹோம்ல பிளவுஸ் தைச்சுக் கொடுக் கறாங்க... பிசினஸ் ஓரளவுக்கு நல்லா போயிட்டிருக்கு’’ என்கிறார் சுஜாதா.