Published:Updated:

தாய்ப்பாலில் நகைகள்... அசத்தும் தாரிக்கா

தாரிக்கா
பிரீமியம் ஸ்டோரி
தாரிக்கா

குறைந்தபட்சம் ஆறு மாசம் அதிகபட்சம் ரெண்டு வருஷத்துல பல பெண்களும் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுறதை நிப்பாட்டிடுவாங்க.

தாய்ப்பாலில் நகைகள்... அசத்தும் தாரிக்கா

குறைந்தபட்சம் ஆறு மாசம் அதிகபட்சம் ரெண்டு வருஷத்துல பல பெண்களும் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுறதை நிப்பாட்டிடுவாங்க.

Published:Updated:
தாரிக்கா
பிரீமியம் ஸ்டோரி
தாரிக்கா

தாய்ப்பாலைக் கொண்டு விதவிதமான அணிகலன் களை கலைநயத்துடன் உருவாக்கி வியூப்பூட்டுகிறார் ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் தாரிக்கா சல்மான். மேலும், தொப்புள்கொடி முதல் முதன்முறையாக விழும் பல் வரை பலவற்றையும், குழந்தைகளின் சிறப்பான நினைவுகள் சுமந்த கலைப்பொருள்களாக உறைய வைத்துப் பெற்றோர்களுக்குச் செய்து தருகிறார்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டையில் வசித்துவரும் 23 வயதே ஆன தாரிக்கா, தன் வீட்டு மேல்மாடியை அணிகலன்கள் செய்யும் தொழிலகமாக மாற்றி அமைத்துள்ளார். அங்கு, நம் மக்கள் மட்டுமல்லாது அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என வெளிநாடுகளிலிருந்தும் கூரியரில் அனுப்பப்பட்டி ருந்த தாய்ப்பால் பார்சல்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

தாய்ப்பாலில் நகைகள்... அசத்தும் தாரிக்கா

‘‘நான் பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர், கூடவே தாய்ப் பால் ஆலோசகர் படிப்பை முடிச்சிருக்கேன்’’ என்று பேசத் தொடங்கினார் தாரிக்கா... ‘`19 வயசுல, காலேஜ் படிச்சிக்கிட்டு இருக்கும்போதே அம்மா கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. இப்போ மூணு வயசுல ஒரு சுட்டிப்பையன் இருக்கான். திருமணமான புதுசுல, ஆஸ்திரேலியாவுல இருக்கிற என் சொந்தக்கார அக்கா ஒருத்தவங்க முத்து மாதிரியான மோதிரம் போட்டிருந்தாங்க. என்ன மோதிரம் அக்கா இதுனு கேட்டப்போ, தாய்ப்பால்ல செஞ்சதுனு சொன்னாங்க. எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் கர்ப்பமா இருந்தப்போ, குழந்தை பிறந்ததும் குழந்தையின் நினைவை சுமக்கும் பொக்கிஷமா தாய்ப்பால் மோதிரம் போட்டுக்க ஆசைப்பட்டு, தாய்ப் பாலில் நகைகள் செய்யும் ஃபார்முலாவை தேடி இரவு, பகல்னு ஆய்வு பண்ணினேன். எனக்குக் குழந்தை பிறந்தப்போ என் தாய்ப்பால்ல டாலர் செஞ்சு கழுத்துல போட்டுக்கிட்டேன். லீவு முடிஞ்சு காலேஜ் போனப்போ, என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் ‘ஹே என்ன இது..?’னு கேட்க, விவரத்தைச் சொன்னேன். அவங்க தங்களோட அக்கா, சொந்தக்காரங்க, நட்பு வட்டம்னு பலருக்கும் அதே மாதிரி தாய்ப்பால் நகைகள் செஞ்சு கொடுக்கச் சொல்லி வந்து கேட்க ஆரம்பிச் சாங்க. அப்போதான் இது பிசினஸா மாறுச்சு’’ என்பவர், அதன் செய்முறைக்காக காப்புரிமை கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.

தாய்ப்பாலில் நகைகள்... அசத்தும் தாரிக்கா

‘`குறைந்தபட்சம் ஆறு மாசம் அதிகபட்சம் ரெண்டு வருஷத்துல பல பெண்களும் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுறதை நிப்பாட்டிடுவாங்க. ஆனா, தாய்ப்பால் நகைகள் அந்த நினைவுகளை எப்பவும் சுமக்க வைக்கும். தாய்ப்பால்ல அணிகலன் செய்ய அதைப் பதப்படுத்தி, ஜெல் மாதிரி அரை திட நிலைக்குக் கொண்டு வரணும். அதுக்கே குறைந்தது 45 நாள்கள் ஆகும். அதன் பிறகு, அதை அரைத்து, தேவையான வடிவங்களா செஞ்சுக்கணும். பலரும் தாய்ப்பால் நகைகள் செய்தாலும், அதற்கு நான் பின்பற்றும் வழிமுறை நானே ஒவ்வொண்ணா செய்து கத்துக்கிட்டது என்பதால என் தயாரிப்பு முறைக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பிச் சிருக்கேன். அதுவரைக்கும் அந்த ஃபார் முலாவை யாருக்கும் சொல்ல மாட்டேன்’’ என்று சிரிப்பவர், கஸ்டமர்கள் ஆர்டர் கொடுக்கும் முறை பற்றி பகிர்ந்தார்.

தாய்ப்பாலில் நகைகள்... அசத்தும் தாரிக்கா

‘`கஸ்டமர், மோதிரம், டாலர்னு தாய்ப் பாலில் தங்களுக்கு என்ன வடிவமைப்பு வேணுமோ அந்த டிசைனை அனுப்பிடுவாங்க. அதை வெள்ளி, தங்கம், வைரம்னு எதில் அணிகலனா செஞ்சுக்க விரும்புறாங்களோ அதையும் முன்கூட்டியே சொல்லிடுவாங்க. அதுக்கான மதிப்பீடு போட்டு நான் அட்வான்ஸ் பணம் வாங்கி, தாய்ப்பால் கலைப்பொருளை நகையா செஞ்சு கொடுக்குறேன். சின்னத்திரை நடிகை ‘மைனா’ நந்தினிக்கு தாய்ப் பாலில் கம்மல், அவரின் கணவருக்கு பிரேஸ்லெட் செஞ்சு கொடுத்தேன். இப்படி பிரபலங்கள்ல இருந்து சாமானியப் பெண்கள் வரை மாசம் 100 ஆர்டர்களுக்கு மேல வருது. மூணு பொண்ணுங்க என்கிட்ட வேலை பார்க் கிறாங்க’’ என்றவர்,

‘`என் தொழிலுக்கு நான் முறைப்படி அரசு அனுமதி பெற்றிருக்கேன். பலரும் தாய்ப்பால்ல பவுடர் கலந்து அணிகலன் செஞ்சு தர்றாங்க. அது சரியான செய்முறை இல்லை. தாய்ப்பாலைப் பதப்படுத்தி செய்ற வழிமுறைதான் சரி. என் கஸ்டமர்கள் பெரும்பாலும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாத்தான் என்னை அணுகுறாங்க. பொதுவா அம்மாக்கள், தங்கள் குழந்தையோட தொப்புள் கொடி, முதல் முறை வெட்டின நகம், முதல் முறை மொட்டை போட்ட தலைமுடி, முதல் முறை விழுந்த பல்லுனு இதையெல்லாம் ஒரு நினைவா பத்திரப்படுத்தி வெச்சுப்பாங்க. இவை எல்லாவற்றையுமே நான் கலைப் பொருளா வடிவமைச்சுக் கொடுக்குறேன். சொல்லப்போனா, கருவுற்றதை உறுதிப்படுத்தும் டெஸ்ட் கிட்டிலிருக்கும் ரெண்டு பிங்க் லைன்ஸைகூட ஜுவல்ல இணைத்துத் தர்றேன். கூடவே, கருச்சிதைவை சந்திச்ச பெண்களுக்கு அவங்க இழந்த அந்தக் கருவோட ஸ்கேன் ரிப்போர்ட்ல கூட நினைவுப் பொருள் செஞ்சு கொடுத்திருக் கேன்’’ என்பவர், குழந்தைகளின் பிஞ்சுக் கை, கால் அச்சுகளை எடுத்தும் அதில் பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் நிரப்பி ஃபிரேம் செய்து தருகிறார்.

தாய்ப்பாலில் நகைகள்... அசத்தும் தாரிக்கா
தாய்ப்பாலில் நகைகள்... அசத்தும் தாரிக்கா

‘`சமீபத்துல, அப்படி சீரியல் நடிகை ஆல்யா மானசா குழந்தையின் காலடி அச்சு எடுத்து செஞ்சு கொடுத்தேன். அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் அதுதான் கண்ணில் படும்’’ என்று உற்சாகமாகச் சொல்பவர், ஒரு நெகிழ்ச்சி நினைவையும் பகிர்ந்துகொண்டார்.

தாய்ப்பாலில் நகைகள்... அசத்தும் தாரிக்கா

‘`ஒரு பிரபலம், தன் அப்பாவின் தலைமுடியை அனுப்பி, ‘ஏதாச்சும் சர்ப்ரைஸிங்கா பண்ணிக் கொடுங்க’னு கேட்டிருந்தார். ஆனா, அடுத்து போன் பண்ணினப்போ, ‘என் அப்பா இறந்துட்டார்’னு சொன்னார். அவர் அப்பா வோட கேசத்தை இதய வடிவில் வடிவமைத்து, வெள்ளி நகையில இணைத்துக் கொடுத்தேன். இப்போ அந்த பிரபலத்தின் அம்மா, தன் கணவரோட கேசம் இணைக்கப் பட்ட செயினை தாலியைப்போல போட்டிருக்கார். இறந்தவங்களின் அஸ்தியிலும் அணிகலன்கள், கலைப் பொருள்கள் செய்து கொடுக்கிறேன். எனக்குக் கிடைக்கும் வருமானத்துல ஒரு பகுதியை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் ஏழைத் தாய்மார்களுக்கு உதவி செய்ய ஒதுக்குறேன். என் அம்மா ரெய்ஸா பேகம், கணவர் சல்மானின் ஒத்துழைப்பும் ஊக்கமும்தான் என் பயணத்துக்கு பெட்ரோல்’’ என்கிறார் தாரிக்கா.

நினைவுகளை கலைச் சட்டகத்துக்குள் சிறைப்பிடித்துத் தரும் கலைஞர்.