`பிராஃபிட் அனால்டிகா' காஜா மைதீன்

பெண்ணாகிய நீங்கள் ஒரு முழு வட்டம். உங்களுக்குள் உருவாக்கு வதற்கும் வளர்ப்பதற்கும் மாற்று வதற்குமான சக்தி இருக்கிறது.

பெண் சக்தி என்பது வாழ்க்கையை உருவாக்குவதற்கான சக்தி மட்டுமல்ல... அதை அடைகாத்து உலகுக்கு வழங்கவும் கூடியது. இது ஓர் அற்புத அனுபவம். உங்களுக்குள் இந்த சக்தி உள்ளது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

இந்த சக்தி உங்கள் வாழ்க்கையில் இணையும்போது, இயற்கையாகவே நீங்கள் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவது உறுதி!

ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்குவதற்கான ஆர்வம் பல பெண்களுக்கு உண்டு. ஆனால், அதில் இறங்கவிடாமல் தடுப்பது அவர்களின் பயம்தான். `எனக்கு எந்தத் திறமையும் இல்லை, ஸ்டார்ட்அப் ஆரம்பிக்க முடியாது. ஏனெனில், எனக்கு பணத் தேவைகள் அதிகம் உள்ளன. பாதுகாப்பான வேலை மட்டுமே என் வாழ்க்கைக்குப் போதுமானது' என்பது போன்ற எண்ணங்களுடன் அவர்கள் தங்களை குறுக்கிக்கொள்கிறார்கள். உங்களிடம் இது போன்ற எண்ணம் ஏதேனும் இருந்தால்..? கவலை வேண்டாம்... இந்தக் கட்டுரை உங்களுக்கானதே!

இந்த உண்மையை வெளிப்படையாகச் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒரு ஸ்டார்ட்அப் தொழில்முனைவோராக உருவாவது அவ்வளவு எளிதல்ல... நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டும். அதிலும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். சுய கேள்விகள், சமூக அழுத்தங்கள் மற்றும் பல குழப்பமான சூழ்நிலைகளைக் கடந்துவர வேண்டியிருக்கும். அதே பெண் தாயாக இருந்தால்..? குழந்தையைக் கவனிப்பதற்காக வீட்டுக்கு விரைவாகச் செல்லவேண்டிய சூழ்நிலை, ஓர் அவசர மெயில் அனுப்ப வேண்டிய நேரத்தில் குழந்தைப் பராமரிப்புப் பணி எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சவால்கள் பல இருந்தாலும்கூட, எந்தவொரு நெருக்கடி நிலையிலும் சரியாகத் திட்ட மிடப்பட்ட பட்டியல் ஒன்று போதும்... அதைக் கொண்டு உங்களால் தெளிவான சிந்தனையோடு முன்னேறிச் செல்ல முடியும். செக் லிஸ்ட் என்ற திட்டப் பட்டியலை தயார் செய்வது என்பது நீங்கள் பலமுறை அறிந்த விஷயமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கான திட்டமிடலை உருவாக்கித்தான் பாருங்களேன்... அன்றைய தினமே உங்கள் திட்டப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் கடந்து செல்லும்போது, அது எவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று. இது மிகப்பெரிய வெற்றியை அடைவதற்கான ஆரம்பம்.

ஸ்டார்ட்அப் தொழில்முனைவோராக இருப்பதிலுள்ள மிகப்பெரிய சிரமம் என்ன? நீங்களே உழைக்கிறீர்கள்... உங்கள் வேலையைத் தணிக்கை செய்ய யாரும் இல்லை என்பதுதான்.

கவலை வேண்டாம்... நீங்கள் சிறந்த முறையில் பணியாற்றுகிறீர்கள் என்பதற்கு உத்தர வாதம் அளிக்க உங்களை நீங்களே மனதார தயார்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஆன்லைன் நெட்வொர்க்கிங் என்பது ஒருபுறம் உதவியாகவும் மறுபுறம் தடையாகவும் உள்ளது. ஒரு வணிக நபராக இது மிக முக்கியமானது. தனிநபராகப் பார்க்கும்போதோ திசை திரும்புவதற்குக் காரணமாக அமைகிறது. ஆகவே, நெட்வொர்க்கிங் செய்வதற்குச் செலவழிக்கும் நேரம், வணிகத்துக்காக மட்டுமே என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அடிக்கடி அங்கே உலவுவது, முக்கியமற்ற செய்திகளுக்குப் பின்னால் செல்வதென மொபைல்போனில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

பெண்களில் பலர் Imposter syndrome என்கிற மனநிலைக்கு ஆளாவது வழக்கமாக உள்ளது. அவர்கள் தங்கள் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் கேள்வி எழுப்புகிறார்கள். தங்கள் திறமையின் மீது அவர்களுக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உள்ளது. இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய பிரச்னைதான்.

உங்களை ஒருபோதும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டாம். அத்தகைய சூழ்நிலையில் உங்களைவிடச் சிறப்பாக இந்தப் பணியை செய்யக்கூடிய ஒரு நபரை யோசித்துப் பாருங்கள். உங்கள் மனம் வேறுபாட்டை வெளிப்படுத்தும். உங்களுக்கும் அவர்களுக்குமான அந்த சிறிய வித்தியாசத்தை அடைய முயற்சி செய்யுங்கள். அப்புறம் என்ன? உற்சாகம் உங்கள் மனத்தில் கரை புரண்டு ஓடும்.

ஸ்டார்ட்அப் என்பதே பிரச்னைக்குத் தீர்வு காணும் தொழில்தான். அதனால் ஒவ்வொரு நாளும் சோதனைகள் வந்து சோதிக்கும். தகுதியான பணியாளர்களை அமர்த்துதல், தரமான மூலப் பொருள்களைத் தேர்ந்தெடுத்தல், சரியான நேரத்தில், சரியான தரத்தில் வாடிக்கையாளர்களுக்குப் பொருள்களைக் கொண்டு சேர்த்தல், வரவு செலவுகளை ஒழுங்குபடுத்துதல் என ஒவ்வொரு நிலையிலும் தீர்வுகள் காணப்பட வேண்டும்.

இப்போது நடைபெறும் முறையைவிட அடுத்தகட்ட சிறப்பான முறையை நோக்கியே ஸ்டார்ட்அப் பயணம் அமைய வேண்டும். உலகிலேயே இல்லாதது ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதேபோல உங்களால் ஒரு சிறந்த தீர்வைக் கொடுக்க முடியும் என்றால், அது இணைய வழி என்று மட்டுமே அர்த்தம் இல்லை. இணையம் இல்லாத மாடலாகவும் இருக்கலாம். நடந்து கொண்டு இருக்கும் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

ஸ்டார்ட்அப் தொடங்க விரும்பும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் அடுத்தடுத்த இதழ்களில்...