Published:Updated:

விதம்விதமான இடியாப்பம்

இடியாப்பம்
பிரீமியம் ஸ்டோரி
இடியாப்பம்

நீங்களும் செய்யலாம்

விதம்விதமான இடியாப்பம்

நீங்களும் செய்யலாம்

Published:Updated:
இடியாப்பம்
பிரீமியம் ஸ்டோரி
இடியாப்பம்

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இடியாப்பம். எளிதில் செரிமான மாகும் என்பதால் இது எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. பாரம்பர்ய உணவுகள் பலவும் மறைந்துகொண்டிருக்கின்றன. அந்தப் பட்டியலில் இடியாப்பமும் சேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இன்ஸ்டன்ட் உணவுகளில் ஒன்றாகிவிட்ட இடியாப்பம், இப்போதெல்லாம் வீடுகளில் அதிகம் செய்யப்படுவதில்லை. கடைகளில் கிடைக்கிற இன்ஸ்டன்ட் வகை இடியாப்பம், செய்வதற்குச் சுலபமாக இருந்தாலும் சுவையிலும் ஆரோக்கியத்திலும் வீட்டில் செய்வதற்கு ஈடாகாது. இடியாப்பத்துக்கு மாவு தயாரிக்கும் வேலை பக்குவமாகச் செய்யப்பட வேண்டியது. நேரமின்மையாலும், மாவு தயாரிக்கும் பக்குவம் கைவராததாலும் பலரும் வீடுகளில் இடியாப்பம் செய்வதைத் தவிர்க்கின்றனர். `அது அப்படியொன்றும் பிரம்ம வித்தை அல்ல' என்கிறார் சென்னை, கே.கே நகரைச் சேர்ந்த கிரிஜா நடராஜன் இடியாப்பமே ஆரோக்கிய உணவுதான். அதை மேலும் ஆரோக்கியமாக்கும் விதத்தில் கோதுமை, கேழ்வரகு, சிறுதானியங்களில் செய்து விற்பனை செய்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படிச் சிருக்கேன். ஒரு கம்பெனியில வேலை பார்த்திட்டிருந்தேன். என் மகன் பத்தாவது வந்ததும், அவன்கூட நேரம் செலவழிக் கணும்னு வேலையை விட் டேன். வீட்டுல சும்மா உட்கார முடியாதே... என்ன செய்யலாம்னு யோசிச்சேன். நான் வேலைக்குப் போகும்போது வேலையையும் பார்த்துக்கிட்டு, வீட்டுக்கு வந்து சமையலையும் பார்க்கிறதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். அதைச் சமாளிக்க பொடி வகைகள் பண்ணிவெச்சுப்பேன். வேலையை விட்டதும் அதையே பிசினஸா பண்ண ஆரம்பிச்சேன்.

கிரிஜா நடராஜன்
கிரிஜா நடராஜன்

நான் இடியாப்பம் நல்லா செய்வேன். பல வீடுகளில் இன்னிக்கு இடியாப்பமே பண்றதில்லை. வேலைக்குப் போறவங்க வீடுகளில் பெரும்பாலும் இடியாப்பத்தை வெளியிலதான் வாங்கறாங்க. வெறும் இடியாப்பம் மட்டும் செய்யாம, கோதுமை இடியாப்பம், ராகி இடியாப்பம், மல்ட்டி கிரெய்ன் இடியாப்பம்னு விதம்விதமா செய்ய ஆரம்பிச்சேன். `கோதுமையோ, கேழ்வரகோதான் சாப்பிடணும். ஆனா, அதை சப்பாத்தியா, தோசையா செய்து சாப்பிட்டு அலுத்துப் போச்சு'ன்னு நினைக்கிறவங்க இடியாப்பமா சாப்பிடலாம்'' என்று சொல்லும் கிரிஜா, இடியாப்ப பிசினஸில் ஈடுபட விரும்புவோருக்கு வழிகாட்டுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி, கேழ்வரகு, கோதுமை, சிறுதானியங்கள், உப்பு, தண்ணீர், இடியாப்பக் குழல் மற்றும் பேக்கிங் மெட்டீரியல். எல்லாவற்றுக்கும் சேர்த்து 200 ரூபாய் முதலீடு போதுமானது. உங்கள் ஏரியாவில் அரிசி மாவு இடியாப்பத்துக்கு மட்டுமே வரவேற்பு இருப்பதாக நினைத்தால் அதை மட்டுமே செய்து விற்கலாம். அரிசி மாவு இடியாப்பம் மட்டுமே செய்வதென்றால் வெறும் 50 ரூபாய் முதலீடே போதுமானது.

எந்த விஷயங்களில் கவனம் வேண்டும்?

மாவு தயாரிக்கும் முறைதான் இதில் மிகவும் முக்கியம். அரிசி மற்றும் சிறுதானியங்களைப் பக்குவமாக உலரவைத்து அரைக்க வேண்டும். ஆர்டர்களுக்கேற்ப அவ்வப்போது மாவு தயாரித்துக்கொள்வது நல்லது. மொத்தமாக அரைத்துவைத்துக்கொண்டால் அதில் வண்டுகள் வரலாம். இடியாப்பத்துக்கு மாவு தயாரிப்பது மட்டுமே சற்று பொறுமையாகக் கையாளப்பட வேண்டிய வேலை. மற்றபடி அந்த மாவை வைத்து இடியாப்பம் செய்வது மிகக் குறைந்த நேரத்தில் முடிந்துவிடும். எனவே, அவ்வப்போது ஃப்ரெஷ்ஷாக இடியாப்பம் தயாரித்து விற்பது பிசினஸ் வாய்ப்பை அதிகரிக்கும். இரவு உணவுக்குக் கேட்பவர்களுக்கு மாலை நேரத்தில் தயாரித்துக் கொடுக்கலாம். பல மணி நேரம் முன்னதாகத் தயாரித்தால் இடியாப்பம் உலர்ந்து போகலாம்.

விற்பனை வாய்ப்பு... லாபம்?

குழந்தைகளும் முதியவர்களும் உடல் நலமில்லாதவர்களும் அநேக வீடுகளில் இருப்பார்கள். கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் அவர்களால் தினமுமோ, அடிக்கடியோ இடியாப்பம் தயாரிப்பது சிரமம். அவர்களிடம் ஆர்டர் பிடிக்கலாம். பெரிய பெரிய ஹோட்டல்களில் கூட மொத்தமாக இடியாப்பம் தயாரிப்பாளர் களிடமிருந்தே வாங்கி சப்ளை செய்கிறார்கள் என்பதால் அங்கு பேசியும் ஆர்டர் பிடிக்கலாம். டயட்டில் அக்கறை காட்டுபவர்களுக்கு கேழ்வரகு, கோதுமை மற்றும் சிறுதானியங்களில் செய்யப்படுகிற இடியாப்பம் நிச்சயம் பிடிக்கும். உதவிக்கு ஆட்கள் இருக்கும்பட்சத்தில் வெறும் இடியாப்பத்தை மட்டும் விற்காமல் சைடிஷ் உடன் விற்கலாம். தேங்காய்ப்பால், குருமா போன்றவற்றையும் சப்ளை செய்யலாம். சற்று பெரிய அளவு இடியாப்பமாகச் செய்து ஒரு பீஸ் 10 ரூபாய்க்கு விற்கலாம். இந்த பிசினஸில் 50 சதவிகித லாபம் நிச்சயம்.

பயிற்சி

ஒரே நாள் பயிற்சியில் ஐந்து வகையான இடியாப்பம் தயாரிக்கக் கற்றுக்கொள்ளலாம். கட்டணம் 500 ரூபாய்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism