Published:Updated:

“மூணு தலைமுறையா களிமண்தான் வாழ்க்கை!” - பொம்மைக் கலைஞர் உஷா

உஷா
பிரீமியம் ஸ்டோரி
உஷா

கொலு வைக்கிற பழக்கம் இன்னிக்கு அதிகரிச்சிருக்கு. ‘ஆன்மிக கதைகளை குழந்தைகளுக்கு விளக்கமா சொல்றதுக்கு நேரமில்லை.

“மூணு தலைமுறையா களிமண்தான் வாழ்க்கை!” - பொம்மைக் கலைஞர் உஷா

கொலு வைக்கிற பழக்கம் இன்னிக்கு அதிகரிச்சிருக்கு. ‘ஆன்மிக கதைகளை குழந்தைகளுக்கு விளக்கமா சொல்றதுக்கு நேரமில்லை.

Published:Updated:
உஷா
பிரீமியம் ஸ்டோரி
உஷா

கடையின் ஒருபக்கம் நவராத்திரி பொம்மைகள், மறுபக்கம் வீட்டு அலங் கார டெரகோட்டா பொம்மைகள்... ஓர் ஆள் நடப்பதற்கு போதுமான இடத்தில் அமர்ந்துகொண்டு நவராத்திரி பொம்மைக ளைப் பரபரப்பாக பேக் செய்து கொண்டிருக்கிறார் உஷா வடிவேல். சென்னையை அடுத்த பனையூரில் இருக்கும் ‘சாய் டெரகோட்டா’வின் உரிமையாளர். மண்பாண்டத் தயாரிப்பில் மூன்று தலைமுறை அனுபவம் கொண் டவர். பி.காம் பட்டதாரி.

‘`இது என் தாத்தா, பாட்டி ஆரம்பிச்ச தொழில். அவங்ககிட்ட இருந்து எங்கம்மா கத்துக்க, அம்மாகிட்ட இருந்து நான்னு மூணு தலைமுறையா களிமண்ணுதான் எங்க வாழ்க்கையோட ஆதாரமா இருக்கு. வள்ளுவர் கோட்டம் பிளாட்ஃபார்ம்ல சட்டி, பானை விக்கிற பல குடும்பங்கள்ல ஒண்ணாதான் நாங்களும் இருந்தோம். நான் தலை யெடுத்ததும் பொம்மைகள், டெரகோட்டா அலங்காரப்பொருள் தயாரிப்புன்னு இறங்க ஆரம்பிச்சேன். கணவரும் மகனும் கொடுத்த ஊக்கத்துல, இப்போ நுங்கம்பாக்கத்துல ஒரு கடை, பனையூர்ல ஒரு கடை, தவிர பாண்டிச் சேரியில நவராத்திரி பொம்மையில ஆரம்பிச்சு டெரகோட்டா பொம்மைகள் வரைக்கும் தயாரிக்க ஃபேக்டரியும் இருக்கு’' என்று நகை முகம் காட்டுகிறவர், நவராத்திரி பொம்மைகள் குறித்தும், அவற்றை வாங்கும் இளம் பெற்றோர்களின் மனநிலை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

‘`கொலு வைக்கிற பழக்கம் இன்னிக்கு அதிகரிச்சிருக்கு. ‘ஆன்மிக கதைகளை குழந்தைகளுக்கு விளக்கமா சொல்றதுக்கு நேரமில்லை... ராமாயணம், மகாபாரதம் சம்பந்தப்பட்ட தீம் கொலு பொம்மைகள் வேணும்’னு ஆர்டர் பண்ணி வாங்கிட்டுப் போறாங்க. சமீபமா, நவராத்திரி ரிட்டர்ன் கிஃப்ட்டுக்கு அம்மன் முகம் தவிர, குட்டி புத்தர் சிலைகளையும் நிறைய பேர் வாங்கு றாங்க. பொம்மைகளுக்கான அச்சுகளை நாங்களே உருவாக்கி, சொந்த சூளையில சுட்டெடுக்கிறதால மத்த கடைகளைவிட விலை குறைவா விக்கிறோம்” என்கிற உஷா விடம், சென்னையில் மட்டும் 30 பேரும், புதுச்சேரி ஃபேக்டரியில் 20 குடும்பங்களும் தங்கி வேலைபார்க்கிறார்கள்.

“மூணு தலைமுறையா களிமண்தான் வாழ்க்கை!” - பொம்மைக் கலைஞர் உஷா

‘`களிமண்ல பொம்மைகள் செய்யுற வேற வேற ஊர்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு சின்னச் சின்னதா வீடு கொடுத்து, எங்க ளோடவே தங்க வெச்சிருக்கோம். அந்தக் குடும்பங்களோட நல்லது, கெட்டதெல்லாம் எங்களோட பொறுப்பு. மத்தபடி, காலத்துக்கு ஏத்த மாதிரி பொம்மைகளுக்கான ஐடியாக் களை நாங்க கொடுத்திருவோம்” என்பவர், தொழிலில் தான் சந்தித்து வருகிற தடை களையும் பிரச்னைகளையும் பகிர்ந்து கொண்டார்.

“சட்டிப் பானையோ, பொம்மையோ செஞ்சு காய வெச்சிருப்போம். திடீர்னு மழை வந்துடுச்சுன்னா, எல்லாம் மறுபடியும் மண்ணாப் போயிடும். வெயில் அதிகமா அடிச்சா செஞ்ச பாத்திரங்கள், பொம்மைகள் எல்லாம் விரிசல் விட்டுடும். மண்ணோட பதம் சரியில்லைன்னா, சூளையில வெக் கிறப்போ சேதமாகிடும். எலெக்ட்ரிகல் சூளை யில பொம்மைகளை வெச்சிட்டு மூணு நாள் கழிச்சு திறந்து பார்த்தாதான் எல்லாம் சரியா வெந்திருக்கான்னு தெரியும். சரியா வேக லைன்னா நஷ்டம்தான். தவிர, மழை அதிக மாகி ஏரிகள் நிரம்பிட்டா அந்த வருஷம் களிமண் எடுக்க முடியாது. களிமண் எடுக்க ஜே.சி.பி, அதை லாரில நம்ம இடத்துக்கு கொண்டு வரன்னு களிமண் எடுக்கிறதுக்கே சில லட்சங்கள் செலவாகிடும்.

இன்னொரு முக்கியமான பிரச்னையும் இருக்கு. நம்மகிட்ட வேலைபார்க்கிற ஆம் பளைங்க சில நேரங்கள்ல குடி போதையில, செஞ்சு வெச்ச பொம்மைகளை உடைச்சிடு வாங்க. நஷ்டக்கணக்குல இது தனிக்கணக்கு” என்ற உஷா,

“கைவினைப்பொருள்கள் செய்யத் தெரிஞ்ச பெண்கள், தனக்குன்னு ஒரு கடையில்லை யேன்னு வருத்தப்பட வேணாம். என் கடையில உங்க தயாரிப்புகளை வைக்கலாம். அதைப் பார்த்துட்டு யாராவது கேட்டா உங்களுக்குச் சொல்றோம். என்கிட்ட ஹோல்சேல்ல வாங்கி விக்க விரும்புற பெண்களுக்கு விலையில தள்ளுபடியும் தர்றேன்” என்று நம்பிக்கைக் கரமும் நீட்டுகிறார்.