Published:Updated:

"திருநங்கை கடைன்னு சொல்லி சாப்பிட மாட்டேனாங்க. ஆனா இப்போ...!"- `Transgender Tasty Hut' ஷாய்னா பானு

திருநங்கை ஷாய்னா பானு
News
திருநங்கை ஷாய்னா பானு

"ஆண்கள், பெண்கள் வச்சிருக்கிற கடைக்கு போய் சாப்பிடுவாங்க. உழைச்சா ஆதரிக்க மாட்டிறாங்க. எங்களை பாலியல் தொழிலுக்கு போகக்கூடாது, கடை ஏறினா கை, கால் நல்லாதானே இருக்கு உழைச்சு சாப்பிடுங்கன்னும் சொல்றாங்க?"

'திருநங்கைகள் யார் உழைச்சு சாப்பிடுறாங்கன்னு ஒரு தம்பி என் ஃப்ரெண்டோட ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் கம்மென்ட் பண்ணியிருந்தார். அதுக்கு, தம்பி திருநங்கைகள் நாங்க கஷ்டப்பட்டுட்டு தான் இருக்கோம். இன்னைக்கு நான் கடை வச்சியிருக்கேன். ஆண்கள், பெண்கள் வச்சியிருக்கிற கடையில் சகஜமாய் போய் சாப்பிடுறாங்க. ஆனா, திருநங்கை வைத்திருக்கும் கடையில் வந்து சாப்பிட யோசிக்கிறாங்க.. அப்புறம் எங்க திருநங்கை மக்கள் என்ன செய்றது!' என சமூகவலைதளத்தில் நான் கேட்ட கேள்விதான் இன்னைக்கு இந்த அளவுக்கு கொளுந்துவிட்டு எரிகிறது எனப் புன்னைக்கிறார், திருநங்கை ஷாய்னா பானு. அவரிடம் பேசினோம்.

திருநங்கை ஷாய்னா பானு
திருநங்கை ஷாய்னா பானு
hp

என்னுடைய திருநங்கை தோழி நேகா அந்தப் பதிவை ஷேர் பண்ணியிருந்தா. அதைப் பார்த்துட்டு ஷாலின் மரியா லாரன்ஸ் மேடம் என் கடை குறித்து போஸ்ட் போட்டாங்க. அந்த போஸ்ட் சமூகவலைதள பக்கங்களில் வைரலாக பரவ ஆரம்பச்சிட்டும்மா எனத் தனது 'Transgender Tasty Hut' கடை குறித்தும், அவரைப் பற்றியும் நம்மிடையே பேச ஆரம்பித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

என்னுடைய 6,7 வயசிலேயே உடலில் பாலின மாற்றத்தை உணர்ந்துட்டேன். சின்ன வயசில இருந்தே பெண்கள் கூடவே தான் விளையாடுட்டு இருப்பேன். பெண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸை சேகரிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். வளர, வளர ஆண்களை பார்த்தா பயமும், கூச்சமும் வர ஆரம்பிச்சது. எங்க அப்பா சரி கிடையாது. அம்மாவை விட்டு பிரிஞ்சு போயிட்டார். நான் ஒரே பிள்ளை என்பதால் நானும் இப்படி மாறுறேன்னு சொன்னதும் அம்மாவால ஏத்துக்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க. `பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு'ன்னு சொல்லுவாங்க. அப்ப நான் கல்லு மாதிரி தான் இருந்தேன். பெண்ணா இருக்கும்போதுதான் நான் சந்தோஷமா உணர்ந்தேன். என்னனாலும் நீ நான் பெத்த பிள்ளை. நீ என் கூடவே இருன்னு எங்க அம்மா என்னை ஏத்துக்கிட்டாங்க. அவங்க ஏத்துக்கிட்டதுனாலதான் இன்னைக்கு என்னால தைரியமா நிக்க முடியுது. உங்க வீட்டில் குழந்தைங்களுக்கு பாலின மாற்றங்கள் ஏற்படுதுன்னா அவங்களை வெறுத்து ஒதுக்காதீங்க. நீங்க ஆதரிச்சா படிப்பு, தொழில், சொந்தம்னு அவங்களுக்கு எல்லாமே கிடைச்சிடும். எந்தக் குழந்தைகளும் பிறக்கும்போதே இது ஆணா பொறந்து, பெண்ணா மாறி பாலியல் தொழிலுக்கோ, கடை ஏறவோ போகணும்னு பெத்தவங்க நேந்து விடுறதில்லையே! என்றவர் தன் கடை குறித்துப் பேசினார்.

திருநங்கை ஷாய்னா பானுவின் கடை
திருநங்கை ஷாய்னா பானுவின் கடை

இதுக்கு முன்னாடி தள்ளுவண்டி கடை நடத்தினேன். அங்கே நிறைய தொந்தரவுகள் ஏற்படவும் அதை தொடர்ந்து நடத்த முடியலை. என்னோட திருநங்கைகள் குழுவுக்கும், பப்பிம்மாவுக்கும் நன்றி சொல்லியே ஆகணும். அவங்க மூலமா தான் இந்த காலேஜ் கேன்டீன் எனக்கு கிடைச்சது. காலேஜூம் எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. காலேஜூக்கும், பசங்களுக்கும் நிச்சயம் நன்றியை சொல்லியே ஆகணும். ஏன்னா, எனக்கு கிடைச்ச மாதிரி எத்தனை திருநங்கைகளுக்கு காலேஜ் கேன்டீன் வைக்க அனுமதி கொடுத்திருக்காங்க?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2,3 நாளைக்கு முன்னாடி வரைக்கும் இப்படியொரு கடை இருக்குன்னே யாருக்கும் தெரியாது. எல்லா பொருளும் வெச்சிகிட்டு வாசலில் யாராச்சும் நம்ம கடைக்கு வர மாட்டாங்களான்னு ஏக்கத்தோட வாசலையே பார்த்துட்டு உட்கார்ந்திருப்பேன். "ஆண்கள், பெண்கள் வச்சிருக்கிற கடைக்கு போய் சாப்பிடுவாங்க. உழைச்சா ஆதரிக்க மாட்டிறாங்க. எங்களை பாலியல் தொழிலுக்கு போகக்கூடாது, கடை ஏறினா கை, கால் நல்லாதானே இருக்கு உழைச்சு சாப்பிடுங்கன்னும் சொல்றாங்க?"

திருநங்கை ஷாய்னா பானுவின் கடை
திருநங்கை ஷாய்னா பானுவின் கடை

சமூகவலைதளத்தில் என்னோட கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிக்காட்டினேன். இப்ப பலரும் என் கடை தேடி வந்து சாப்பிடுறாங்க. ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இதுக்காக பலநாள் ஏங்கி அழுதுருக்கேன். இன்னைக்கு என் வாழ்க்கை மாறியிருக்கு. திருநங்கைகள் எல்லாருமே அவங்களுடைய அடிப்படையான விஷயத்தை நிறைவேற்ற கூட போராட வேண்டியிருக்கு. நாங்க அயராம உழைக்க ரெடி.. எங்களை உழைக்க வைக்க நீங்க ரெடியா? என்கிறார், ஷாய்னா பானு.

ஷாய்னா பானு ஆனந்த விகடனுக்காக அளித்த பேட்டியை காண லிங்கை கிளிக் செய்யவும்!