Published:Updated:

நம் உறுதியால் தோல்வியையும் தோற்கடிக்கலாம்!

தங்கையா இம்மானுவேல் - ராஜ குமாரி
பிரீமியம் ஸ்டோரி
தங்கையா இம்மானுவேல் - ராஜ குமாரி

அனுபவம் பகிரும் சக்சஸ் தம்பதியர்

நம் உறுதியால் தோல்வியையும் தோற்கடிக்கலாம்!

அனுபவம் பகிரும் சக்சஸ் தம்பதியர்

Published:Updated:
தங்கையா இம்மானுவேல் - ராஜ குமாரி
பிரீமியம் ஸ்டோரி
தங்கையா இம்மானுவேல் - ராஜ குமாரி

வாழ்க்கைத் துணையே, தொழில் பயணத்திலும் பார்ட்னராக அமைந்தால்... எத்தகைய கடின சூழல்களையும் எளிதாகக் கடக்கலாம்; வெற்றிக்கோட்டை விரைவாகத் தொடலாம் என்பதற்கு உதாரணம், தங்கையா இம்மானுவேல் - ராஜ குமாரி தம்பதியர். 

மருத்துவப் பயன்பாடுகளில் மிக முக்கிய சாதனமான, வயதானவர்கள் மற்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு வெளிப்புறமாகப் பொருத்தப்பட்டிருக்கும் சிறுநீர்ப்பையை உடலுடன் இணைக்க உதவும் `கத்தீட்டர்' தயாரிப்பில் பன்னாட்டு நிறுவனங்களே அதிக அளவில் கோலோச்சி வருகின்றன. இந்தத் துறையில் சாமான்யர்களான இவர்களும் தடம்பதித்துவரும் நம்பிக்கை தொழில்முனைவோர். சென்னை தாம்பரம் ‘மெப்ஸ்’ வளாகத்திலுள்ள ‘சீபாஸ் மெடிக்கல் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தில் இந்த வெற்றியாளர்களைச் சந்தித்தோம்.

“ரெண்டு பேரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவங்க. பி.எஸ்ஸி முடிச்சிருந்த நானும், டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சிருந்த இவரும் வெவ்வேறு நிறுவனங்கள்ல வேலை செஞ்சோம். கல்யாணத்துக்குப் பிறகு, தாய்லாந்துல சில வருஷங்கள் வசிச்சோம். இருவருடையதும் நடுத்தரக் குடும்பம்தான். சாமான்யர்களா இருந்தாலும், பிசினஸ்ல சாதிக்கணும்னு பெரிய இலக்குடன் பயணிச் சோம். அந்த வைராக்கியத்துடன் கடுமையா உழைச்சோம். 

நம் உறுதியால் தோல்வியையும் தோற்கடிக்கலாம்!

குடும்பத்துல பிசினஸ் அனுபவம் உள்ள வங்க யாருமில்ல. நிறைய தேடலுடன், பல தரப்பட்ட மனிதர்களுடனான சந்திப்பும் எங்களுக்குப் பெரிதும் உதவுச்சு. ஒருகட்டத் துல, மக்களுக்குப் பயன் தரும் கிளவுஸ் தயா ரிக்க முடிவெடுத்தோம். கனடாவைச் சேர்ந்த கிளவுஸ் நிறுவனத்துடன் தொழில் ரீதியான நட்பு ஏற்பட்டது. அதேநேரம் சென்னையில் மூடப்பட்ட நிலையில் இருந்த கிளவுஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் வாய்ப்பு கிடைச்சது. இதே வளாகத்துல இருந்த அந்த கம்பெனியை நேர்ல பார்த்தோம். புதர் மண்டிக்கிடந்தாலும், அந்த நிறுவனத்தைப் புதுப்பிச்சு நல்ல நிலைக்கு உயர்த்த முடியும்னு நம்பிக்கை இருந்துச்சு. பேங்க் லோனுக்கு நிறைய அலைஞ்சோம். நிறைய புறக்கணிப்புகள். மனம் தளராம ரெண்டு வருஷம் சிரமப்பட்டோம்” என்கிற ராஜகுமாரி யின் நினைவுகள், 20 ஆண்டுகள் முன்நோக்கிப் பயணிக்கின்றன.ஆரம்பக்கட்ட  இரண்டு ஆண்டுகளும் பெரும் போராட்டமாக இருந்தாலும், 2001-ல் கிளவுஸ் உற்பத்தியை நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளனர்.

“நிறுவனத்துல பல பொருள்கள் திருடப் பட்டிருப்பது தெரிஞ்சு அதிர்ந்தோம். அவை போலீஸ் விசாரணையில் மறுபடி கிடைச்சது. பழைய நிறுவன கடன், அதனால மூலப்பொருள்கள் வாங்குறதுல நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டோம். இதுபோன்ற சவால்கள் அடுத்தடுத்து தொடர்ந்தாலும், அவற்றையெல்லாம் நிதானத்துடன் எதிர்கொண்டு பிரச்னைகளைச் சரிசெஞ்சோம். மருத்துவப் பரிசோதனை பயன்பாடுகளுக்கான எக்ஸாமினேஷன் கிளவுஸ், டாக்டர்கள் ஆபரேஷன் செய்யும்போது பயன்படுத்தும் சர்ஜிகல் கிளவுஸ் மட்டும் தயாரிச்சோம். வெளிநாட்டு ஏற்றுமதியில் மட்டும் சரியா கவனம் செலுத்தினதால வளர்ச்சியும் கிடைச்சது. ஆர்டர் அதிகம் கிடைக்கவே வேகமா வளர்ந்தோம். அடுத்த சில வருஷங்களுக்குப் பிறகு, பிசினஸ் வளர்ச்சி எப்படி இருக்கணும்னு நாங்க முன் கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவது வழக்கம். அப்படித்தான் அடுத்தடுத்த தொழில்களைக் கட்டமைச் சோம்.

ஒருநாளைக்கு ஒரு லட்சம் கிளவுஸ் தயாரிச்ச நிலையில, இந்தத் துறையின் உற்பத்தி முறையில் உலக அளவுல பெரிய மாற்றம் ஏற்பட்டது. நாங்க மேற்கொண்ட கிளவுஸ் தயாரிப்பின் அடிப்படையி லேயே கத்தீட்டர் தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கவே, அதையே அடுத்தகட்ட வளர்ச்சிக்கான வாய்ப்பா எடுத்துகிட்டோம். கிளவுஸ் தயாரிப்பை நிறுத்திட்டு, புதுசா தொழில் தொடங்குற மாதிரி கத்தீட்டர் உற்பத்திக் கான சோதனை முயற்சிகளை ரெண்டு வருஷம் மேற்கொண் டோம். அதுவும் சோதனைக் காலம்தான். கத்தீட்டர் பத்தி நம்ம நாட்டுல பெரிசா விழிப்புணர்வு இல்ல. ‘காண் டம் மாதிரிதானே’ன்னுதான் இதைப் பலரும் நினைக்கிறாங்க. அதனால, எதிர்மறையான பேச்சு களை எதிர்கொண்டோம். நோயாளிகள் உட்பட பலரின் உயிர்காக்கும் அடிப்படை உபகரணங்கள்ல கத்தீட்டரும் முக்கியமானது. அதைத் தரமான முறையில் தயாரிச்சுக் கொடுக்கும் வாய்ப்பா எடுத்துகிட்டு, புதுப் பணியாளர்களுடன் உற்பத்தியை ஆரம்பிச்சோம். ஆண்களுக்கான வெளிப்புறப் பயன்பாட்டுக் கான (External) கத்தீட்டரை மட்டும் தயாரிக்கிறோம். 11 வருஷங்களா அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யுறோம்” என்று அடக்கமாகக் கூறும் இம்மானுவேல், மனைவியைப் பார்த்துப் புன்னகைக்கிறார்.

“முதுகுத் தண்டுவட பாதிப்புள் ளோர், படுக்கையில் சிகிச்சை எடுப்போர் ஆடைக்கு வெளியே தெரியும்படி கத்தீட்டர் டியூபை பயன்படுத்துவாங்க. வயசானவங்க, உடல்நல பாதிப்பு கொண்டவங்க கத்தீட்டர் டியூபை ஆடைக்குள் இருக்கும்படியும் பயன்படுத்தலாம். தரமான கத்தீட்டரைப் பயன்படுத்து வதுடன், யூரினரி இன்ஃபெக்‌ஷன் ஏற்படாத வகையில பராமரிப்பு முறைகளை மேற்கொண்டால், பயனாளிகள் பல வருஷங்கள் கூடு தலா உயிர்வாழலாம். இன்ஜெக்‌ஷன் மோல்டிங் யூனிட்டைப் புதுசா தொடங்கி, சில மருத்துவ உபகரணங் களுக்கான உதிரி பாகங்களையும் உற்பத்தி செய்யுறோம். கூடவே, இதே யூனிட்டுல சமையல் பயன்பாட்டுக் கான கத்திக்கு கைப்பிடியை மட்டும் தயாரிக்கிறோம்.

ரசாயன தொழிற்சாலைகள்ல பணியாளர்கள் பயன்படுத்துற சின்தெடிக் ரப்பர் வகை கிளவுஸ் இந்தியாவுக்கு அதிகளவுல இறக்குமதி மட்டுமே செய்யப்படுறது தெரிஞ்சது. தென் மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நோக்கத்துல, அந்த கிளவுஸுக்கான உற்பத்திக் கூடத்தை விருதுநகர்ல தொடங்கி னோம். முதுகுவலி, மூட்டுவலியைக் குறைக்க உதவும் சப்போர்டிங் பிரேஸ் சாதனங்களை இறக்குமதி செஞ்சு பல வருஷமா டிரேடிங்கும் பண்றோம்”

- உற்சாகம் குறையாமல் பேசும் ராஜகுமாரியின் அடுத்த தொழில் இலக்கு, மருந்துத் தயாரிப்பு (Pharma industry)!

நம் உறுதியால் தோல்வியையும் தோற்கடிக்கலாம்!

தினமும் 12,000 கத்தீட்டரும், பல ஆயிரம் கிளவுஸும் தயாரிக்கிறார்கள். கிச்சன் பயன்பாடுகளுக்கான கிளவுஸ் தயாரித்தும் இந்தியா முழுக்க விற்பனை செய்கிறார்கள். நான்கு தொழில்களிலும் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்பவர்கள், 100 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கின்றனர்.

“அனுபவம் கூடக்கூட நாமும் அடுத்தகட்டத்துக்குப் போகணும். பிறர் முன்னேற்றத்துக்கும் உதவணும். அந்த வகையில சரியான இலக்குடன் புதுத் தொழில்கள்லயும் கவனம் செலுத்துறோம். தொடக்கத்துல அடுத்தடுத்து தடங்கல்கள் ஏற்பட்டப்போ, ‘இவ்வளவு சிரமம் எதுக்கு. பிசினஸ் எண்ணத்தை விட்டுட்டு மறுபடியும் வெளி நாட்டுக்கே போய் வேலை செய் யுங்க’ன்னு தான் பலரும் சொன்னாங்க. நம்ம கொள்கையிலயும் இலக்குலயும் உறுதியா இருந்து போராடினா தடைகளும் தோற்றுப்போகும். எங்க அனுபவப் பாடத்தையே பிசினஸ் தொடங்க நினைக்கறவங்களுக்கு ஆலோசனையா சொல்லக் கடமைப்பட்டிருக்கோம்”

- பெருமிதச் சிரிப்புடன் உள்ளம் கவர்கிறார்கள் இந்தத் தம்பதியர்.