Published:Updated:

“ஊருல இப்போ எங்களை முன்மாதிரியா பார்க்குறாங்க!” - மூலிகை நாப்கின்கள் தயாரிக்கும் கிராமத்துப் பெண்கள்

 தீபலெட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
தீபலெட்சுமி

வெற்றியாளர்கள்

“ஊருல இப்போ எங்களை முன்மாதிரியா பார்க்குறாங்க!” - மூலிகை நாப்கின்கள் தயாரிக்கும் கிராமத்துப் பெண்கள்

வெற்றியாளர்கள்

Published:Updated:
 தீபலெட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
தீபலெட்சுமி

ரேடியோவில் ஒரு பக்கம் பாடல் ஒலிக்க, தையல் மெஷின் சத்தம் மறுபக்கம் அதிர்ந்துகொண்டிருந்தது. ‘`கட்டிங், ஸ்டிச்சிங், பேஸ்டிங், பேக்கிங்னு ஆளுக்கொரு வேலையா பிரிச்சுக்கிட்டு சீக்கிரமா செஞ்சு முடிக்கணும்’’ என, வேகமும் நுணுக்கமும் பிணைந்தபடி பெண்கள் பரபரப்பாக மூலிகை நாப்கின் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். சிவகங்கை மாவட்டம், பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூர் கிராமத்தில், பெண்கள் சுய உதவிக்குழுவாக ஒருங்கிணைந்து ‘முல்லை நாப்கின்ஸ்’ என்ற பெயரில் மூலிகை நாப்கின் தயார்செய்து அசத்தி வருகின்றனர்.

சுய உதவிக்குழுவை முன்னெடுத்து நடத்தும் தீபலெட்சுமி, ‘`மூலிகை நாப்கின் தயாரிப்பை எங்க ஊருப் பொண்ணுங்களுக்கு

ஒரு தொழில்வாய்ப்பா ஆக்கணும்னு நினைச்சேன். பாரதிதாசன் யுனிவர் சிட்டியில நடந்த ரெண்டு நாள் பயிற்சி வகுப்புல கலந்துகிட்டு, மூலிகை நாப்கின் செய்றதைக் கத்துக் கிட்டேன். அடுத்தகட்டமா எங்க கிராமப் பெண்கள் ரெண்டு பேரை கரூரைச் சேர்ந்த வள்ளி என்பவரிடம் பயிற்சிக்குக் கூட்டிட்டுப் போனேன். அங்க மூலிகை நாப்கின் செய்ய கத்துக்கிட்டு, 2018-ம் வருஷம் எங்க கிராமத்துல நாப்கின்கள் செய்ய ஆரம்பிச்சோம். நான், நித்யா, ஹேமலதா, பொன்செல்வினு நாங்க நாலு பேருமா ஒருங்கிணைந்து, ஆளுக்கு தலா 50,000 ரூபாய் முதலீட்டுல தொழிலைத் தொடங்கினோம். எங்க கிராமப் பெண்கள் ஒத்துழைப்பும், வ.உ.சி இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஆதரவும் கொடுத்தாங்க. வேம்பு, சோற்றுக்கற்றாழை, மஞ்சள், துளசி உள்ளிட்ட ஒன்பது வகையான மூலிகைகளைப் பயன்படுத்தினோம். பயிற்சி யில நாங்க கத்துக்கிட்டதைவிட 95 சதவிகிதம் புதிய முயற்சிகளைச் செய்து நாப்கின்கள் உருவாக்கினோம். சுருங்காம இருக்க கூடுதல் தையல், பக்கவாட்டுல விங்ஸ், ரசாயனம் இல்லாத காட்டன்னு பார்த்துப் பார்த்து தயாரிச்சோம்.

“ஊருல இப்போ எங்களை முன்மாதிரியா பார்க்குறாங்க!” - மூலிகை நாப்கின்கள் தயாரிக்கும் கிராமத்துப் பெண்கள்

சென்னை வள்ளுவர் கோட்டம் பக்கத்துல, தமிழக அரசின் மகளிர் மேம்பாட்டு ஆணைய அலுவலகம் இயங்கி வரும் அன்னை தெரசா வளாகத்துல, மாதத்தின் முதல் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி அன்று விற்பனை கண்காட்சி நடைபெறும். அதுல கலந்துகிட்டு அதிக அளவு வாடிக்கையாளர்களைப் பிடிச்சோம். சாம்பிள் பீஸ் பயன்படுத்தின ஒவ்வொரு பொண்ணுமே எங்க மூலிகை நாப்கினை இப்போவரை தொடர்ந்து வாங்கிட்டு இருக்காங்க. மேலும், அவங் களோட கருத்துகளைக் கேட்டும் நாப்கின்ல மாற்றங்களைச் செஞ்சோம். அரசின் மகளிர் திட்ட அலுவலக உதவி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உதவியால விற்பனை வாய்ப்புக் கூடியிருக்கு. இப்போ ஏகப்பட்ட இடங்கள்ல விற்பனையும் விழிப்புணர்வும் செஞ்சுட்டு இருக்கோம்’’ என்றார் தீபலெட்சுமி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஊருல இப்போ எங்களை முன்மாதிரியா பார்க்குறாங்க!” - மூலிகை நாப்கின்கள் தயாரிக்கும் கிராமத்துப் பெண்கள்

கொரோனா காலம் தங்களுக்குத் தொய்வை ஏற்படுத்தியதைக் கூறிய ஜெயலட்சுமி, ‘`ஆனாலும், லாக்டௌன் தளர்வில் கூரியர் சர்வீஸ் ஆரம்பிச்சதும் எங்க மூலிகை நாப்கின் களை தமிழகம் முழுக்கப் பல இடங்களுக்கு அனுப்பிட்டு இருக்கோம். கடையில விற்கும் நாப்கின்களைவிட எங்களுடைய நாப்கின் விலை அதிகம்தான். ஆனாலும், அஸ்ஸாம் முதல் அமெரிக்கா வரை எங்களுக்கு ஆர்டர் கிடைக்கக் காரணம், அது தர்ற ஆரோக்கிய பலன்தான்’’ - பேக்கிங் வேலையைப் பார்த்தபடியே கூறினார்.

‘`ஒரு பாக்கெட்டுல ஏழு பீஸ்கள் இருக்கும். ஒரு பாக்கெட் 80 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும். மொத்தம் ஆறு சைஸ்கள்ல தயாரிக்கி றோம். சைஸுக்கேற்ப விலை மாறும். பள்ளி மாணவிகளுக்கு எங்க நாப்கின் ரொம்ப பிடிச்சிருக்கு. இதைப் பயன்படுத்தின பிறகு, மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் குறைஞ்சிருக்கிறதா சொல்றாங்க. வெள்ளைப்படுதல் பிரச்னைக்கான சிறப்பு மூலிகை நாப்கினும் தயாரிக்கிறோம்’’ என்றார் கெளசல்யா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குழுப் பெண்கள் தங்களுக்குக் கிடைத்த ஊக்கம் பற்றிச் சொல்லும் போது, ‘`எங்களோட சிறப்பான செயல்பாட்டை பாராட்டி, மகளிர் திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்தினர் 1,50,000 ரூபாயை கொரோனா ஊக்கத்தொகையா வழங்கியிருக்காங்க. அதோடு மானா மதுரை பிளாக்ல சிறந்த மகளிர் குழுவா எங்க சுய உதவிக்குழுவை தேர்ந்தெடுத்துப் பாராட்டியது ரொம்ப பெருமையா இருந்துச்சு’’ என்றனர்.

‘`எங்ககிட்ட இப்போ நிறைய பேர், தங்களுக்கும் மூலிகை நாப்கின் பயிற்சி கொடுக்கச்சொல்லி கேட்டு வர்றாங்க’’ என்கிற பொன்செல்வி, ஆனால், அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார்.

 மூலிகை நாப்கின்கள்
மூலிகை நாப்கின்கள்

‘`ஏன்னா, இதை யாரும் தொழிலா மட்டும் நெனச்சு செய்யக் கூடாது. பொண்ணுங்களோட ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற அக்கறையோட செய்யணும். அப்படித்தான் நாங்க செஞ்சுக்கிட்டு இருக்கோம். அந்த நேர்மையோட வர்றவங்களுக்குத்தான் பயிற்சி கொடுக்கணும்னு முடிவு பண்ணியிருக்கோம்’’ என்றவரை தொடர்ந்தார் தீபலட்சுமி.

‘`எங்க ஊருல முக்காவாசிப் பொண்ணுங்களுக்கு கர்ப்பப்பை பிரச்னை. திருச்சியில இருக்குற மகப்பேறு மருத்துவர்கிட்ட, அவங்க ஸ்கேன் ரிப்போர்ட்டை யெல்லாம் எடுத்துட்டுப் போனேன். எங்க ஊருப் பொண்ணுங்க விறகு வேலைக்குப் போறதாலயும், மாதவிடாய் சுகாதாரமின்மை போன்ற காரணங்களாலயும் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்னு சொன்னாங்க.

கர்ப்பப்பை எடுத்த அஞ்சு பெண்கள் எங்க குழுவுல நாப்கின் தயாரிப்பில் இருக்காங்க. அதனால, பெண்களோட மாதவிடாய் ஆரோக்கியத்துக்கு எங்க மூலிகை நாப்கின் உதவணும்னு எல்லாருமே வேலையில ரொம்ப கவனத்தோட இருப்போம்’’ என்றார்.

மகேஷ்வரி, “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதைத் தொழிலா ஆரம்பிச்சோம். சொந்த ஊருலயே எங்களுக்குனு ஒரு வருமானத்தை ஏற்படுத்திக்கிட்டு, வீட்டு வேலைகளைப் பார்த்துக்கிட்டே நாப்கின் வேலை களையும் கவனிச்சுகிட்டு வரும் எங்களை முன்மாதிரியா பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. குழுவுல 14 பெண்கள் இருக்கோம். ஒரு மாசத்துக்கு ஒவ்வொருவருக்கும் 5,000 ரூபாய் வரை கிடைக்கும். இனி போகப்போக வருமானத்தை அதிகரிப்போம்’’ என்றார் பெருமையுடன்.

வெற்றி தொடரட்டும்!