Published:Updated:

கம்மல் முதல் காலணிகள் வரை... பணமாக பழைய ஜீன்ஸ்... பட்டையைக் கிளப்பும் பிரத்தனா

ஒரு ஜீன்ஸ் பேன்ட்ல ஒரு பேக், ஒரு செட் கம்மல், ஒரு சின்ன நெக் பீஸ் செய்ய முடியும்.

பிரீமியம் ஸ்டோரி

“உபயோகமில்லாம பீரோவுல தூங்கும் ஜீன்ஸ் பேன்ட்டுகள் பல வீடுகள்ல நிச்சயம் இருக்கும். கிழியாம இருந்தா தூக்கிப்போட மனசில்லாம பத்திரப்படுத்துவாங்க. அப்படி எங்க வீட்டுல தூங்கிட்டிருந்த ஜீன்ஸ் பேன்ட்டுகள் தான் என் பிசினஸ் ஐடியாவா மாறுச்சு” - கண்கள் விரியப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த பிரத்தனா.

“சின்ன வயசுல சாக்லேட் பேப்பர்ல பொம்மை செய்து பத்திரப்படுத்துவேன். என்னோட டிரஸ்ஸுக்கு ஸ்டோன் வொர்க் பண்றது, லேஸ் வொர்க் பண்றதுனு சின்னச்சின்னதா நான் கத்துக்கிட்ட விஷயம் என் ஆர்வத்தை அதிகமாக்குச்சு. நிறைய கிராஃப்ட் வீடியோக்கள் பார்த்து, வீட்ல இருக்கும் பழைய பொருள்கள்ல செய்து பார்ப்பேன். சென்னை கவின் கலைக் கல்லூரியில் டெக்ஸ்டைல் டிசைனிங் கோர்ஸ் சேர்ந்தேன். முதல் வருஷம் படிச்சிட்டிருந்தபோதே துணிகள்ல வித்தியாசமான பொருள்களைச் செய்ய ஆரம்பிச்சேன்.

பிரத்தனா
பிரத்தனா
கம்மல் முதல் காலணிகள் வரை... பணமாக பழைய ஜீன்ஸ்... பட்டையைக் கிளப்பும் பிரத்தனா
கம்மல் முதல் காலணிகள் வரை... பணமாக பழைய ஜீன்ஸ்... பட்டையைக் கிளப்பும் பிரத்தனா
கம்மல் முதல் காலணிகள் வரை... பணமாக பழைய ஜீன்ஸ்... பட்டையைக் கிளப்பும் பிரத்தனா
கம்மல் முதல் காலணிகள் வரை... பணமாக பழைய ஜீன்ஸ்... பட்டையைக் கிளப்பும் பிரத்தனா
கம்மல் முதல் காலணிகள் வரை... பணமாக பழைய ஜீன்ஸ்... பட்டையைக் கிளப்பும் பிரத்தனா

நிறைய ஆர்டர்கள் வரவும் இதையே பிசினஸா ஆரம்பிக்க லாம்னு தோணுச்சு. காலேஜ் படிச்சுகிட்டே, ரெண்டாயிரம் ரூபாய் முதலீட்டுல, பார்ட் டைம் பிசினஸ் ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல பழைய ஜீன்ஸ்கள்ல பண்ணிட்டிருந்தேன். பிசினஸா பண்ண ஆரம்பிச்ச பிறகு, கம்பெனிகளில் இருந்து சின்ன டேமேஜ்களோட வரும் டெனிம் மெட்டீரியல்களை வாங்கி டேமேஜ் இருக்கும் பகுதியை மட்டும் கட் பண்ணிட்டு கலைப்பொருள்கள் பண்ண ஆரம்பிச்சேன்.

படிப்பை முடிச்சிட்டு இப்போ முழுநேரமும் பிசினஸ்ல இறங்கியிருக்கேன். பயிற்சி வகுப்புகளும் எடுக்கறேன். ஒரு ஜீன்ஸ் பேன்ட்ல ஒரு பேக், ஒரு செட் கம்மல், ஒரு சின்ன நெக் பீஸ் செய்ய முடியும். சில மணி நேரம் செலவு பண்ணாலே மாசம் 25,000 வரை சம்பாதிக்க முடியுது’’ என்கிறார் பிரத்தனா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு