Election bannerElection banner
Published:Updated:

டேட்டிங் ஆப் மூலம் 31 வயதில் பில்லியனர் ஆன பெண்... யார் இந்த விட்னி ஹெர்ட்? #Bumble

Whitney Wolfe Herd
Whitney Wolfe Herd

எது எப்படியோ 31 வயதில் உலகளவில் மிகப்பெரிய வெற்றியும் அதன் மூலம் கோடிகளில் சொத்தும் சேர்த்திருக்கும் விட்னி பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

ஸ்டார்ட் அப்கள் ஒரு அற்புத விளக்கு. தேய்க்கும்படி தேய்த்தால் பூதம் வெளிவந்து நம் வாழ்க்கையே மாறிவிடும். தமிழ்ப்படம் 1-ல் காபி வரும் கேப்பில் சிவா ஹாஸ்பிட்டல், சிவா ரயில்வே ஸ்டேஷன், சிவா மார்ச்சுவரி என மாஸ் காட்டுவாரே... அது கொஞ்சமே கொஞ்சம் சாத்தியமென்றால் அது ஸ்டார்ட் அப்களில் மட்டும்தான். பல சாதாரணர்களை பில்லியனர்கள் ஆக்கிய அந்த விளக்கை இப்போது தேய்த்து பில்லியனர் ஆகியிருப்பவர் 'bumble' ஆப்பின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓவான விட்னி ஹெர்ட் (Whitney Wolfe Herd).

Bumble is a feminist dating app
Wolfe Herd

டின்டர் ஆப்தான் டேட்டிங் ஆப்களில் பிரபலமானது. அதன் நிறுவனர்களில் ஒருவர்தான் விட்னி. பின், அங்கே ஒரு பிரச்னையாகி வெளியே வந்துவிட்டார். வந்தவர் ஆரம்பித்த போட்டி டேட்டிங் ஆப்தான் 'bumble'. சமீபத்தில் பங்குச் சந்தைக்குள் காலடி வைத்த bumble-ன் ஷேர் மதிப்பு எதிர்பார்த்ததைவிட எக்குத்தப்பாக அதிகரித்தது. அதனால் bumble-ன் மதிப்பு 14 பில்லியன் டாலராக உயர்ந்தது. அந்த மதிப்பின்படி பார்த்தால் விட்னியின் சொத்து மதிப்பு இப்போது 1.5 பில்லியன் டாலர்கள். எண்கள் சொல்வதென்றால் 1,500,000,000. இந்திய ரூபாயில் சொல்வதென்றால் 11,000 கோடி.

31 வயதே ஆகும் விட்னிதான், உலக அளவில் இவ்வளவு பெரிய நிறுவனத்தைத் தலைமையேற்று நடத்தும் வயது குறைந்த பெண். bumble ஆப் டேட்டிங் ஆப்தான் என்றாலும், இதில் பெண்களுக்கே முன்னுரிமை. அவர்களுக்கு என்ன தேவையோ, அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததே இதன் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள். கோவிட் காலத்தில், எல்லோரும் முதலில் விர்ச்சுவலாகச் சந்தித்து பேசிவிட்டு, பின்னரே நேரில் சந்திக்க விரும்புகிறார்கள். அதுவும் bumble-ன் திடீர் உச்சத்துக்குக் காரணம் என்கிறார்கள்.

Bumble App
Bumble App

எது எப்படியோ 31 வயதில் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியும், அதன் மூலம் கோடிகளில் சொத்தும் சேர்த்திருக்கும் விட்னி பெண்களுக்கு மட்டுமல்ல; ஆண்களுக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். வாழ்த்துகள் சிங்கப் பெண்ணே!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு