Published:Updated:

`திறமையை பிசினஸ் ஆக்கினா வெற்றி பக்கத்துலதான்!’ - இளம் சுயதொழில்முனைவோர் தேவிகா

தேவிகா | சேலம்

``ஹேண்ட்மேட் கிராஃப்ட்ஸ், வால் பெயின்டிங், டிஜிட்டல் ஆர்ட், டூடுல், சிறிய அளவில் ஈவன்ட் மேனேஜ்மென்ட், டெக்கரேட்டிவ்ஸ், எம்பிராய்டரி, மண்டலா ஆர்ட், ஃபேஸ் பெயின்டிங்னு செய்துட்டிருக்கேன். இதிலிருந்து எல்லாம் கிடைக்கும் பணம் என் படிப்புச் செலவுக்குப் போதுமானதா இருக்கு.’’

`திறமையை பிசினஸ் ஆக்கினா வெற்றி பக்கத்துலதான்!’ - இளம் சுயதொழில்முனைவோர் தேவிகா

``ஹேண்ட்மேட் கிராஃப்ட்ஸ், வால் பெயின்டிங், டிஜிட்டல் ஆர்ட், டூடுல், சிறிய அளவில் ஈவன்ட் மேனேஜ்மென்ட், டெக்கரேட்டிவ்ஸ், எம்பிராய்டரி, மண்டலா ஆர்ட், ஃபேஸ் பெயின்டிங்னு செய்துட்டிருக்கேன். இதிலிருந்து எல்லாம் கிடைக்கும் பணம் என் படிப்புச் செலவுக்குப் போதுமானதா இருக்கு.’’

Published:Updated:
தேவிகா | சேலம்

எந்த ஒரு தேவையில்லாத பொருளையும் கலைப்பொருளாக மாற்றுவது பலருக்கும் விருப்பமானது. அதில் கொஞ்சம் கிரியேட்டிவிட்டியை புகுத்தி கலக்கி வருகிறார், சேலத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் தேவிகா. அவரிடம் பேசினோம்...

``எனக்கு சிறு வயதில் இருந்தே, பயன்பாடற்றதுனு குப்பையில வீசப்படும் பொருள்கள்ல இருந்து அலங்காரப் பொருட்கள் செய்றதுல ஆர்வம் அதிகம். அதுமட்டுமன்றி, பணத்துக்கு நான் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாதுங்கிற எண்ணமும் எனக்குண்டு. என் வீட்ல மேட் தயாரிக்கும் மெஷின் இருந்தது. என் அம்மாவுடன் சேர்ந்து சிறுவயதில் அந்த வேலைகளைப் பார்த்து, அதுக்காக அவர் தரும் பணத்தை என் தேவைக்காகப் பயன்படுத்துவேன்.

தேவிகா | சேலம்
தேவிகா | சேலம்

ஒருநாள் பள்ளியில் என் ஆசிரியருக்காக பேப்பரில் பொக்கே செய்து கொடுத்தேன். அப்போ எனக்குத் தெரியாது, அது என் தொழிலா மாறப்போகுதுனு. என் ஆசிரியருக்கு அது மிகவும் பிடிச்சிருந்தது. கல்லூரியில சேர்ந்த பின்னர், நண்பர் ஒருவர் அவருடைய நண்பருக்காக பரிசு தேடினார். அவர் கைவினைப் பொருளா வேணும்னு சொன்னார். ஆனா அவற்றின் விலையெல்லாம் அதிகமா இருந்தது. நான் நண்பரிடம், ’நானே ஹேண்ட்மேட் கிஃப்ட் செய்து தரட்டுமா?’ என்றேன். அவரும் சரினு சொல்ல, நான் செய்த கிஃப்ட் நண்பரின் நண்பருக்கு மிகவும் பிடிச்சிருந்தது.

அப்போதான், ’ஏன் நாமே ஹேண்ட்மேட் கிராஃப்ட்ஸ் செய்வதை ஒரு பிசினஸா தொடங்கக்கூடாது’ என்ற ஐடியா தோன்றியது. தொடங்கிய ஆரம்ப நாள்களில் ஆர்டர்கள் குறைவாவே வந்துச்சு. காதலர் தினம், நண்பர்கள் தினம், சகோதரர்கள் தினம் போன்ற நாள்களில் நிறைய ஆர்டர்கள் வரும். என் இன்ஸ்டா பக்கத்தை மார்கெட்டிங்காக பயன்படுத்திக்கிறேன். என்றாலும், நண்பர்கள் மூலம் வரும் ஆர்டர்கள்தான் அதிகம்’’ என்பவர், இன்னும் பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்.

தேவிகா | சேலம்
தேவிகா | சேலம்

``ஹேண்ட்மேட் கிராஃப்ட் உடன் வால் பெயின்டிங், டிஜிட்டல் ஆர்ட், டூடுல், சிறிய அளவில் ஈவன்ட் மேனேஜ்மென்ட், டெக்கரேட்டிவ்ஸ், எம்பிராய்டரி, மண்டலா ஆர்ட், ஃபேஸ் பெயின்டிங்னு செய்துட்டிருக்கேன். இதிலிருந்து எல்லாம் கிடைக்கும் பணம் என் படிப்புச் செலவுக்குப் போதுமானதா இருக்கு. பிசினஸை பெரிய அளவுல யோசிக்கலாம்னு நினைச்சா, அதுக்கான பணம் இப்போ என்கிட்ட இல்ல. ஒரு ஹேண்ட்மேட் கிராஃப்ட் செய்தா அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதையும்கூட, அட்வான்ஸ் வாங்கித்தான் செய்வேன். ஒண்ணு, ரெண்டு பேருக்கு வேலை கொடுக்குற அளவுக்கு இந்த பிசினஸை வளர்க்கணும் என்பதுதான் அடுத்த இலக்கு.

சின்ன வயசுல, ஃபேஷன் டிசைனர் ஆக ஆசைப்பட்டிருக்கேன். என் ஸ்கூல் புக்ஸ்லகூட என் பெயரோடு ஃபேஷன் டிசைனர்னு எழுதி வெச்சிருப்பேன். ஆனா, ஃபேஷன் டிசைனிங் படிக்க வசதியில்லாததால பி.ஏ படிச்சேன். என்றாலும், இப்போ நான் டிசைனர் ஆகிட்டேன். புராடக்ட் டிசைனிங், கிராஃபிக் டிசைனிங்னு செய்துட்டு இருக்கேன். பிரைடல் மேக்கப் ஆர்டிஸ்ட் என்னுடைய இன்னொரு முகம்’’ என்று சிரிக்கிறார் தேவிகா.

தேவிகா
தேவிகா

''நமக்கு ஏதோ ஒண்ணுல விருப்பம் இருக்கும். நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கும். அந்தத் திறமையையும் விருப்பத்தையும் ஒன்றிணைச்சு, வளர்த்தெடுத்தா... நீங்களும் பிசினஸை ஆரம்பிச்சுடலாம்’’ - இதுதான் தேவிகாவின் மெசேஜ்.