Published:Updated:

ஆஃப் பீட் சேனல், உளவியல் வீடியோ, ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்... யூடியூபில் கலக்கும் தெரபிஸ்ட்

கட்டி மார்ட்டின்
பிரீமியம் ஸ்டோரி
கட்டி மார்ட்டின்

மனநல பிரச்னைகள் குறித்து அதிகம் பயமுறுத்தாத, தெளிவான வீடியோக்களே கட்டியை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்திருக்கின்றன.

ஆஃப் பீட் சேனல், உளவியல் வீடியோ, ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்... யூடியூபில் கலக்கும் தெரபிஸ்ட்

மனநல பிரச்னைகள் குறித்து அதிகம் பயமுறுத்தாத, தெளிவான வீடியோக்களே கட்டியை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்திருக்கின்றன.

Published:Updated:
கட்டி மார்ட்டின்
பிரீமியம் ஸ்டோரி
கட்டி மார்ட்டின்

‘எப்படிச் செயல்பட்டால் குறிக் கோளை அடைய முடியும் என்பதற் கான சாத்தியக்கூறுகள் பற்றி எந்நேரமும் சிந்தித்துக்கொண்டிரு. கனவு காண். அந்தக் கனவே உன்னை உந்தும்’

- உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்டின் இந்த உளவியல் தத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறார் கட்டி மார்ட்டின் (Kati Mortin). அமெரிக்காவைச் சேர்ந்த கட்டி, உரிமம் பெற்ற உளவியல் ஆலோசகர்.

சமையல், ஃபேஷன், செலிபிரிட்டி என வழக்கமான யூடியூப் சேனல்கள் மத்தியில் அதிகம் பேசப்படாத ஆனால், பயனுள்ள ஆஃப் பீட் சேனல் வரிசையில் இடம் பிடிக்கிறது உளவியலுக்கான இவரது சேனல்.

தன் பெயரிலேயே யூடியூப் சேனலைத் தொடங்கி கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். நீரிழிவு இருப்பதையோ இதயநோய் இருப்பதையோ வெளியே சொல்லத் தயங்காதவர்கள், மனநல பிரச்னை இருப்பதை மட்டும் வெளியில் சொல்ல விரும்புவதில்லை. சமூகம் தங்களைக் கேலிப்பொருளாகப் பார்க்கும் என்ற பயம்தான் இதற்கு காரணம்.

இந்தத் தயக்கத்தையும் இறுக்கத்தையும் உடைக்க வேண்டும். மனநல பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே கட்டியின் எண்ணமாக இருந்தது. யூடியூப் ஆரம்பிப்பது அவர் லிஸ்ட்டிலேயே இருக்கவில்லை.

“என் கணவர் ஒரு கருத்தரங்கைப் படம் பிடிப்பதற்காகப் போயிருந்தார். அங்கே யூடியூப் சேனல்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றிருக்கிறது. வீட்டுக்கு வந்ததும், ‘மனநலம் பற்றிய புரிந்துணர்வு மக்களுக்கு ஏற்படுவதில்லை என்று புலம்பிக்கொண்டே இருக்கிறாயே, ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து ஏன் அதைப் புரிய வைக்கக் கூடாது. வீடியோ எடுப்பதற்கு நான் உதவுகிறேன்’ என்றார்.

‘கேமரா முன்னால் என்னால் பேச முடியாது’ என்றேன். சில மாதங்கள் கழித்து நாம் ஏன் முயற்சி செய்யக் கூடாது என்று தோன்றியது” என்பவர், தயக்கத்தை உடைத்த தால் இதுவரை 1,186 வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் மேல்.

போபியாக்கள், மனநல குறைபாடுகள், பாலியல் வன்முறை, மன அழுத்தம், பதற்றம் பற்றிய ஆலோசனை வீடியோக்களுடன் மனநலம் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள், ஓடிடி சீரிஸ் ரெவ்யூ, மனநல பிரச்னை களிலிருந்து மீண்டவர்களின் பேட்டிகள் என வெரைட்டி காட்டுகிறார்.

ஆஃப் பீட் சேனல், உளவியல் வீடியோ, ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்... யூடியூபில் கலக்கும் தெரபிஸ்ட்

மனநல பிரச்னைகள் குறித்து அதிகம் பயமுறுத்தாத, தெளிவான வீடியோக்களே கட்டியை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்திருக்கின்றன.

“தனக்கு மனநல பிரச்னை இருக்கிறது. இதற்கு ஒரு மருத்துவரையோ நிபுணரையோ அணுக வேண்டும் என்ற உந்துதலைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். சீரியஸாகப் பேசுகிறேன் என்று பயமுறுத்துவதில்லை. என்னுடைய வீடியோக்களுக்கு அதிகம் லைக்ஸ் வாங்குவதில் ஆர்வமில்லை. வீடியோக்களைப் பார்ப்பதன் மூலம் மனநல பிரச்னையுள்ள ஒருவர், நிபுணரிடம் சென்றால் அதுதான் என்னுடைய வெற்றி” என்கிறார் கட்டி.

இவரின் யூடியூப் வீடியோக்கள் உலகம் முழுவதுமுள்ளவர்களால் பார்க்கப் படுகின்றன. இதனால் இவர் செலிபிரிட்டி யாகவும் அறியப்படுகிறார். இவர் எழுதிய ‘ஆர் யூ ஓ.கே - உங்கள் மனநல பராமரிப்புக்கான வழிகாட்டி’ என்ற புத்தகமும் மிகவும் பிரபலம்.

“என் வீடியோக்களைப் பார்ப்பவர்கள் தங்களுடைய அனுபவங்களை கமென்ட் களாகப் பதிவு செய்வதற்கு ஊக்கப்படுத்துகிறேன். மனநல பிரச்னை உடைய வர்களுக்கு அவற்றைப் பார்க்கும்போது இவை யெல்லாம் மனிதர்களுக்கு வரும் சாதாரண பிரச்னைகளே என்ற உணர்வைக் கொடுக்கும். நாம் அனைவருமே அவ்வப்போது மனநலம் தொடர்பான பிரச்னை களுக்கு உள்ளாகிறவர்கள் தானே” எனும் கட்டி, யூடியூப் தொடங்க விரும்புபவர் களுக்கும் உளவியல் ஆலோ சனைகள் தருகிறார்.

“நீங்கள் ஒரு விஷயத்தைச் செய்ய விரும்பும்போது பல கேள்விகளும் கவலைகளும் எழும். கவலைப்படாமல் செயலைத் தொடங்கி அதன் பின்னால் ஓடத் தொடங்கி விட்டால், வெகு சீக்கிரமே அது உங்கள் வசமாகிவிடும்”

- உளவியலில் உற்சாகம் கூட்டுகிறார் கட்டி மார்ட்டின்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism