Published:Updated:

ஜெர்மனியில் நடைபெறும் உலக ஜவுளிக் கண்காட்சி... கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்பு!

கரூர் ஜவுளி
News
கரூர் ஜவுளி

இந்த ஜவுளிக் கண்காட்சியில், பல நாடுகளிலிருந்து சுமார் 3,500 வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது ஜவுளிப் பொருள்களை காட்சிப்படுத்துகின்றன. இந்தியாவிலிருந்து மட்டும் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் பொருள்களைக் காட்சிப்படுத்துகின்றன.

ஜெர்மனியில் நடைபெறும் உலக ஜவுளிக் கண்காட்சி... கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்பு!

இந்த ஜவுளிக் கண்காட்சியில், பல நாடுகளிலிருந்து சுமார் 3,500 வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது ஜவுளிப் பொருள்களை காட்சிப்படுத்துகின்றன. இந்தியாவிலிருந்து மட்டும் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் பொருள்களைக் காட்சிப்படுத்துகின்றன.

Published:Updated:
கரூர் ஜவுளி
News
கரூர் ஜவுளி

தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர், பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பிரபலமானது என்றால், கரூர், வீட்டுஉபயோகத் துணிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பிரசித்திபெற்றது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி அன்னிய செலாவணியை ஈட்டுகிறது.

கரூர் ஜவுளி உற்பத்தி
கரூர் ஜவுளி உற்பத்தி
நா.ராஜமுருகன்

இந்நிலையில், கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு, கடந்த வருடம் ஜூன் முதல் நூல் விலை ஏற்றம், ரஷ்யா போர் ஆகியவற்றால், ஆர்டர்கள் குறைந்து கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் புலம்பி வந்தனர். பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில்தான், வரும் 10-ம் தேதி நடைபெற இருக்கும் ஜெர்மனி உலக ஜவுளிக் கண்காட்சியில், கரூரில் இருந்து வழக்கத்துக்கு மாறாக 73 கம்பெனிகள் கலந்துகொள்ள இருக்கின்றன. இதனால், வீட்டுஉபயோகத் துணிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுபற்றி, கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

``உலக அளவில் மிகப்பெரிய வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களின் கண்காட்சி ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் நகரில் வரும் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற இருக்கிறது. இந்த ஜவுளிக் கண்காட்சியில், பல நாடுகளிலிருந்து சுமார் 3,500 வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களது ஜவுளிப் பொருள்களைக் காட்சிப்படுத்துகின்றன. இந்தியாவிலிருந்து மட்டும் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் பொருள்களைக் காட்சிப்படுத்துகின்றன. இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக கரூர் நகரைச் சார்ந்த 73 ஜவுளி நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு, புதிதாகத் தயாரிக்கப்பட்ட மாதிரி பொருள்களை காட்சிப்படுத்துகின்றன.

கரூர் ஜவுளி உற்பத்தி
கரூர் ஜவுளி உற்பத்தி
நா.ராஜமுருகன்

இந்த 73 நிறுவனங்களின் முதலாளிகள், விற்பனைப் பிரதிநிதிகள், வடிவமைப்பாளர்கள், இடைத்தரகர்கள் எனச் சுமார் 200 நபர்கள் பிராங்க்பர்ட் நகருக்குச் செல்கிறார்கள். இது மட்டுமல்லாமல், இந்தக் கண்காட்சியைப் பார்வையிடு வதற்காகவும், ஜவுளி சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவும், ஜவுளி சந்தையில் புதிதாக வரப்போகும் பொருள்களைப் பார்வையிடுவதற்காகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரூர் நகரிலிருந்து செல்கின்றார்கள். இவர்கள் அனைவரும், புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள மாதிரிகளுடன், ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்குச் செல்ல இருக்கின்றனர்.

உலகம் முழுவதிலும் இருந்து வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களை வாங்குவதற்காக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் மிகச் சிறிய நிறுவனங்கள் வரை தங்களது பிரதிநிதிகளை இந்தக் கண்காட்சிக்கு அனுப்பி, காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜவுளிப் பொருள்களைப் பார்வையிட்டு புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்த உள்ளார்கள். இந்தக் கண்காட்சிக்கு பார்வையாளர்களாக 50,000 -க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியில் நடைபெறும் உலக ஜவுளிக் கண்காட்சி... கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்பு!

உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவின் காரணமாக `வீட்டு உபயோக ஜவுளித் தொழில்' கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்தது. இந்தக் கண்காட்சிக்குப் பிறகு, இத்தொழில் புத்துயிர் பெற வேண்டும் என்று எதிர்பார்க் கிறோம். இந்த ஜவுளிக் கண்காட்சிக்குச் செல்லும் அனைத்து நிறுவனங்களுக்கும், இந்தக் கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைய வேண்டும். கரூர் ஜவுளி நிறுவனங்கள் நிறைய ஒப்பந்தங்களைப் பெற்று, வெற்றியோடு திரும்பி வர வேண்டும் என ஜவுளித்துறை அமைச்சர் காந்தி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.